Tuesday, May 15, 2018

பிஜேபி உண்மையாலுமே வேலை செய்றான், பயங்கரமா வேலை செய்றான்

Anbe Selva
Via Facebook
2018-05-15

பிஜேபி உண்மையாலுமே வேலை செய்றான், பயங்கரமா வேலை செய்றான், 100 ஆண்டுகளுக்கு மேல் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்து காங்கிரஸ் செய்ததை விட வேகமா செய்றான், அதே சமயம் உழைக்கும் மக்களை ஏமாற்றுவதிலும் எக்ஸ்பர்ட்டா இருக்கான், 2000 ஆண்டு அனுபவம் இருக்கு அதுல, வெள்ளைக்காரன் 250 வருசத்துல ஏற்படுத்திய சமூக குலைவுகளை ஆடிட் பண்ணி சரிக்கட்டுவததிலும் 90 வருட அனுபவம் இருக்கு, நீங்க மீம்ஸ் போட்டோ, ஒட்டு மெசினை கிண்டல் செய்தோ ஜெயிக்கவே முடியாது, எதிரியை மதிக்கணும், இல்லைனா தோல்வி உறுதி. 2016 கேரள தேர்தலில் பாஜக வேலை செஞ்ச ஒரு ஆய்வு கட்டுரை ஒன்னு EPW வில் உண்டு. அதை சுருக்கமா பாருங்க..

2016 கேரளா சட்டமன்ற தேர்தலில் இடதுசாற்றிகளின் இடது ஜநாயக முன்னணி 43% வாக்குகளுடன் 91 இடங்களில் வென்றது, காங்கிரஸின் UDF 38% வாக்குகளுடன் 47 இடங்களில் வென்றது, பாஜக தலைமையிலான NDA 15% வாக்குகளுடன் 1 இடத்தை கைப்பற்றுகிறது..

அந்த 15% வாக்கு என்பதுதான் நமக்கான அலாரமாக கொள்ள வேண்டியது, ஏனென்று சொன்னால் கேரளா மாதிரியான அரசியல்மயப்பட்ட மக்களை கொண்ட மாநிலத்திலேயே 6% த்தில் இருந்து 15% வாக்கு வங்கிக்கு ஒரு பாசிச சித்தாந்தங்களை கொண்ட அரசியல் கட்சி வளரும் வெளி எங்கிருந்து வருகிறது என்பதுதான் கேள்வி?..

இத்தனைக்கும் இரு துருவ கட்சிகளுக்கு வாக்களிப்பதில் நம்மை  விட நின்ற மரபையுடையவர்கள் கேரளா மக்கள், 1957 ல் இருந்து கம்யூனிஸ்ட்களுக்கும் காங்கிரஸிற்கும் மாறி மாறி ஓட்டளித்து வந்தவர்கள் திடீரென்று தங்கள் முறையை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள்?, 

மூன்று பேருமே "வளர்ச்சியை" தங்கள் தேர்தல் முழக்கமாக வைக்கிறார்கள், ஏற்கனவே விவாதித்தது போல வளர்ச்சி பாசிசத்தின் ஒரு கூறு,  அங்குதான் பாசிசம் தன் அழுகல்களை மறைத்துக் கொள்ள ஏதுவாக அமைகிறது, சமூகநீதி மதசார்பின்மை, போன்ற கருத்துக்கள் சமூக கவனம் பெறுவது பாசிசத்துக்கு என்றுமே நல்லதல்ல,

அதனால்தான் திரும்ப திரும்ப தமிழ்நாட்டில் ஊழலையும் வளர்ச்சியையும் ஊடகங்களால் போர்ட்ரைட் செய்யப்படுகிறது,

கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் இரட்டை சதவீதத்தில் வாக்கு வாங்கியிருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் மல்லபுரத்தை தவிர. அதுதான் தமிழ்நாட்டிற்கும் இங்கும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் பாஜக வாக்கு வாங்கி இருக்கிறது என்று எத்தனை நாளைக்கு சொல்லிக்கொண்டிருக்க போகிறோம் ?..

11% தில் இருந்து 33% உயர்சாதி நாயர்கள் ஓட்டுக்களை வென்ற அதேசமயம், 7% மாக இருந்த தாழ்த்தபட்ட மக்களின் ஆதரவை 23% மாக உயர்த்தியிருக்கிறார்கள், பின்ன எப்படி பாஜக உயர்சாதி இந்துக்களிடம் மட்டும் வளரும் கட்சி என்று வியாக்ஞானம் பேச போகிறோம்.

கேரளா ஒடுக்கப்பட்ட சமூகமான ஈழவர்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் மூல அவர்களின் ஒரு சதவீதத்தை 6 ல் இருந்து 17 சதவீதமாக உயர்திக் கொள்ள முடிகிறது. இரண்டு வருடமாக மதுரை மையமாக கொண்டு தேவேந்திர குல வேளாளர்கள் தொடர்பாக, யாதவர் சமூக விழாக்கள் தொடர்பாக அமித் ஷா நகர்த்தி வரும் நடவடிக்கைகளை தொடர்புபடுத்தி பாருங்கள்,

நமக்கு ஊழலை விவாதமா வச்சிட்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான அத்தனை துரோகத்துடனும் எந்த கூச்சமும் இல்லாமல் அவர்களால் நெருங்க முடிகிறது, யாரும் வேலை செய்யாத இடமாக இதுதான் இருக்கிறது.

பொருளாதார ரீதியாக மிகவும் வரிய மக்களிடம் 4% மாக இருந்த ஆதரவை 11% மாக உயர்திக் கொண்டிருக்கிறார்கள், ஏழை மக்களிடம் 6% ல் இருந்து 15% மாக வளர்ந்திருக்கிறார்கள் என்றால் இடதுசாரிகளிடம் இருந்து என்னவிதமான சாக்குகளையும் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை..

அடுத்து முக்கியமானது 18 வயதில் இருந்து 25 வயதுக்குள் உள்ளவர்களிடம் 6% ல் இருந்து 23% மாக வளர்த்திருக்கிறார்கள்.

இடதுசாரிகளின் அல்லது கேரளாவின் எந்த அரசியல் மரபையும் அறியாத தலைமுறை ஒன்று மிக கவனமாக வளர்த்தெடுக்கப்பட்டதன் விளைவுதான்  இந்த 23% என்பது கிட்டத்தட்ட பாஜகவின் டார்கெட்டாக அதிக பயனளிக்க கூடியதான பகுதியினரும் இவர்கள்தான் எனில் தாமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சாரங்களை கவனியுங்கள்..

திட்டமிட்டு திராவிட மரபை அறியாத அதை சீரழிவான அரசியலாக பயிற்றுவிக்க படுத்தல் என்பது நாள்தோறும் நடக்கிறது, கமலஹாசன் முதல் கஸ்தூரி  வரைக்கும் தமிழ்நாட்டு அரசியலை சளித்துக் கொள்வதற்கு பின்னால் இந்த அயோக்கியத்தனம் இருக்கிறது..

கேவலமான மதவெறி கொலைகளும், பேச்சுக்களும், சாதி பாகுபாடுகளும், பசியும், பஞ்சமும், வறுமையும், மடமையும், கையால் மலம் அள்ளும் கொடுமையும், ஊழலும் நிறைந்திருந்தும் இந்தியனாக பெருமைபட்டுக் கொள்ளும்  கமலால் இவையனைத்திலும் பல மடங்கு முன்னேறிய நவீன சமூக அமைப்பை கொண்ட தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழனாக மட்டும் பெருமை கொள்ள முடியவில்லை?..

சமூக நீதி, அதிகார பரவல், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு,  ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு , தொழில் வளர்ச்சி என்று இந்தியா முழுதும் எந்த துறையை எடுத்தாலும் அனைத்திலும் முதல் 3 இடங்களுக்குள் வரக்கூடிய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும்.

எத்தனை அடுக்கடுக்கான கட்டுரைகள், பார்வைகள், செலிபிரிட்டிகள் கொண்டு திராவிட அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இளைய தலைமுறையாக  தமிழர்களை வளர்த்தெடுப்பதில் மிகப்பெரிய செயல்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,

தமிழ்நாடு இன்னும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை, ஆனால் இந்திய மாநிலங்களில் சீரழிந்த மாநிலமாக தமிழ்நாடு பிரச்சாரப்படுத்த படுவதின்  பின்னால் மிகப்பெரிய அட்ஜஸ்மென்ட் இருக்கிறது,

அதை வெறும் ஊழல், வளர்ச்சி, நேர்மை என்ற பெயரில் செய்தாலும் சரி தமிழ்த்தேசியம் என்ற பெயரில் செய்தாலும் சரி. ஒரு அசைன்மெண்டுக்குள் தான் இருக்கிறது.. 

மத்திய தர இளைய தலைமுறை தமிழர்களிடம் திராவிட அரசியலின் வெற்றியை, பிற இந்திய மாநிலங்களுடனான ஒப்பீடுகளை, சமூக நீதி, மதசார்பின்மை, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் பாசிச பாஜகவின் தோல்வியை தோலுரிக்கப்படாததன் விளைவே இன்றைக்கு எந்த கூச்சமும் இல்லாமல் அவர்களால் முன்னேற முடிகிறது..

பல்வேறு வகையான சமூக ஆய்வுகளை வெளிக் கொண்டு வருவதன் மூலமாகவே பாசிச இந்துத்துவத்தின் இந்த போலி பிரச்சாரத்தை வீழ்த்த முடியும்.. அந்த கடமை எல்லோரும் சமம் என்று நினைக்கும் எல்லோருக்கும் இருக்கிறது..

https://m.facebook.com/story.php?story_fbid=1741605679239611&id=100001705884491

No comments:

Post a Comment