"பிரபாகரன் ஒரு சர்வதேச தீவிரவாதி, விடுதலைபுலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத இயக்கம், பெண்களையும், சிறுவர்களையும் புலிகள் அரணாக அமைத்து பலிகொடுத்து சண்டை இடுகிறார்கள், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கிலிடவேண்டும், விடுதலை புலிகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும், இலங்கை என்ற அந்நியநாட்டு விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது, ஆண்டன் பால சிங்கம் மற்றும் பிரபாகரன் தாயார் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதிக்கக் கூடாது" என்று விடுதலை புலிகளை எகிறி அடித்த, அடித்துக் கொண்டே இருந்தவர் ஜெயலலிதா. அவருக்குதான் தமிழ் தேசிய ஆதரவாளர்களால் ஈழத்தாய் பட்டம் கொடுத்து "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று வக்கணையாக பேசி இலை மலர்ந்து 7 வருடங்களாகியும் இன்னும் ஈழம் மலராமல் இருக்கிறது!
இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிற்கு,"நாளை பிரபாகரன் உங்கள் முன் ஒரு ஹோட்டலில் இருப்பர், சுட்டு கொன்றுவிடுங்கள்" என்று மத்திய அரசிடமிருந்து ஒரு உத்தரவு வருகிறது. வக்கணையாக பேசி பிரபாகரனை டெல்லி அசோகா ஓட்டலுக்கு வர வைத்து இந்திய அரசிடம் ஒப்படைத்தார் ஈழப் போராளிகள் கொண்டாடும் தானை தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ஆனால் ஜெனரல் ஹர்கிரத் சிங், "இது கோழைத்தனமான, முதுகில் குத்தும் செயல்" என்பதாலும், "இந்திய ராணுவத்தின் பெயர் உலகளவில் கெட்டு விடும்" என்பதாலும் இதை ஏற்க மறுத்துவிட்டார். தப்பித்தார் பிரபாகரன் அன்று.
ஆனால் திமுகவோ என்றென்றும் ஈழ விடுதலைக்காக போராடியது. மக்களின் உள்ளங்களில் ஈழ உணர்வை ஊட்டியது. கலைஞரும் பேராசியரும் தங்கள் MLA பதவிகளை துறந்தனர். காவலுக்கு கெட்டிக்காரன் படத்தில் பிரபுவுக்கு "திலீபன்" என்றும் பாலைவன ரோஜாக்கள் படத்தில் சத்யராஜுக்கு "சபாரத்தினம்" என்றும் பெயர்கள் சூட்டி தனக்கு கிடைத்த எல்லாம் வாய்ப்புகளுக்குள்ளும் ஈழ அரசியலை தமிழகத்துக்கு எளிமையாக கற்றுக் கொடுத்தார் கலைஞர். .
"தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன். அவர் கலைச்சிட்டார்" என்று சுப்பிரமணியன் சுவாமி, '(விகடன் மேடை' - 04.07.2012 ) கூறுகிறார்.
திமுக ஆட்சி ஈழ ஆதரவுக்காக கலைக்கப்பட்டது. 1991ல் ராஜிவ் காந்தி இறந்த போது திமுக கொடி கட்டின வீட்டையெல்லாம் தேடி தேடி அடிச்சப்போ எந்த ஈழ ஆதரவு சக்தியும் திமுகவை காக்கவில்லை. தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழனுக்கு வீடு கொடுத்தவன் திமுககாரன் தான். மறுக்கமுடியுமா? ஈழத்தமிழனுக்காக முதல் முதலே தீக்குளிச்சவன் திமுககாரன் தான். அதுவும் புலிகள் வேண்டாம்னு ஒதுக்கின இஸ்லாமிய மதத்தவன்! ஈழத்திற்காக போலிஸாலே தேடி தேடி வேட்டையாடப்பட்ட திமுகக்காரன் இன்னிக்கு துரோகி ஆயிட்டான்
ஈழ வரலாறு!
Source: Srinivasan J
----
கயல்விழிக்கு ஈழ உணர்வு அதிகமாக இருந்ததால் மணந்தேன் - சீமான்
"கயல்விழிக்கு ஈழ உணர்வு அதிகம் இருந்ததால் தான் கயல்விழியை மணந்தேன்" - என்றும், "அந்த உணர்வை கயலுக்கு சிறு வயதிலிருந்தே ஊட்டியதே கயலின் தந்தையும் முன்னாள் அமைச்சர், சிறந்த தமிழ்பேச்சாளர், தீவிர தமிழ் ஈழ உணர்வாளருமான காளிமுத்து" - என்று கூறிய அண்ணன் சீமான்,
"விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், தூக்கிலிட வேண்டும்" - என்று சட்டப்பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானத்தை ஜெயா அரசு நிறைவேற்றியபோது சபாநாயகராக இருந்து அத்தீர்மானத்தை நிறைவேற்றியது கயல்விழிக்கு ஈழ உணர்வை ஊட்டிய அதே காளிமுத்து தான் என்பதையும் சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.
மலையமான். தே. கி.
இது அனைத்தும் பொய் திமுக ஒருகாலமும் தமிழீழத்திற்கு ஆதரவு கொடுத்தது கிடையாது ஆதரவு தருவது போல் நடிப்பு அரசியல் நடத்தினர் அதிமுக முழு ஆதரவு கொடுத்தார்கள் அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் அவர்கள் முழு ஆதரவு தந்தார்
ReplyDeleteசரியாக சொன்னீர்கள், இவர்கள் சந்தர்ப்பவாத அரசியலை செய்தவர்கள்,
Delete