Friday, September 7, 2018

AIDS நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்.

எட்வின் பிரபாகரன்
2018-09-07

AIDS நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்.

1. ஒருவரோடு மட்டும் உறவு கொள்வது சிறந்த வழி. அந்த ஒருவருக்கும் AIDS இல்லாமலிருக்க வேண்டும்

2. பலரோடு உறவு கொள்பவர்கள் condom பயன்படுத்தலாம். இதுகூட AIDS ஐ 80% வரைதான் தான் தடுக்குமே தவிர, முழு உத்திரவாதம் இல்லை.

3. இஸ்லாமியர்கள் தங்களுடைய ஆணுறுப்பின் மேல்தோலை நீக்கும் circumcision, AIDS நோய் ஆண்களிடம் பரவுவதை குறைக்கிறது. ஆனால் இதன் சாதக பாதகங்களை ஆராயாமல் ஒரு முடிவுக்கு வர முடியாது.

4. ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் ஆண் + ஆண் உறவுகளில் (MSM) மட்டும் AIDS இன் தீவிரம்  மற்றவர்களை விட 45 மடங்கு அதிகம். பாதுகாப்பற்ற முறையில் பலருடன் உறவு கொள்வதே இதற்கு காரணமேயன்றி, ஓரினச்சேர்க்கை AIDS நோயை உருவாக்குவதில்லை‌. இதற்கு தீர்வாக, ஒருவரோடு மட்டும் உறவு கொள்ளலாம். பலரோடு உறவு கொள்ளும்போது, நீங்கள் உறவு கொள்ளும் நபருக்கு AIDS உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

5. AIDS நோயாளிகளில் பாதி பேருக்கு மேல் gays தான்‌. போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். சமூகத்தால் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒதுக்கி வைக்கப்படுவதால், அவர்கள், பல முறையற்ற உறவுகளில் சிக்கிக் கொள்கிறார்கள். ஓரினச்சேர்க்கைக்கு சமூக அங்கீகாரம் ஏற்படுத்தும் போது, தானாகவே நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே, அவர்களை ஒதுக்கி வைக்கும் சமூகத்தின் மீது தான் தவறே தவிர, ஒதுக்கப்பட்டவர்கள் மீது தவறில்லை.

6. பெற்றோரால் நடத்தி வைக்கப்படும் திருமணங்களில் ஜாதக பொருத்தம் பார்ப்பதற்கு பதிலாக, ஆண் பெண் இருவரின் medical report ஐ பொருத்திப்பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமா? என்பதும் முக்கியமான கேள்வி. ஆண்மை இல்லாத  ஆண்களும், பல நோய்களை உடைய ஆண்களும், பெண்களை ஏமாற்றுவதை இது தடுக்கும்.

7. குழந்தை இல்லையென்றால், பெண்ணுக்கு "மலடி" பட்டம் தரும் சமூகம், ஆணை அப்படி சொல்வதில்லை. "1000 பொய் சொல்லி
கல்யாணம் பண்ணலாம்" என்று நம் முன்னோர்கள் சொன்னதை இன்றுவரை பின்பற்றி வருபவர்கள் இந்த காலத்து ஆட்கள். இருவருக்கும் ஒரே blood group இருந்தால் மிகவும் நல்லது. இதைவிட எந்த பெரிய பொருத்தமும் உங்கள் கற்பனை பித்தலாட்ட ஜாதகத்தில் தெரியப்போவதில்லை.

8. திருமணத்துக்கு முன் செய்யவேண்டிய மருத்துவ சோதனைகள். 1. ஆண்மை/ பெண்மை சோதனை, 2. பாலியல் நோய் சோதனை, 3.பரம்பரை நோய் சோதனை, 4. நாள்பட்ட நோய் சோதனை, 5. ரத்த வகை சோதனை. இதையெல்லாம் பார்ப்பதை விட்டுவிட்டு, ஜாதியையும் பணத்தையும், அதிகாரத்தையும் பார்த்து, இந்திய பிற்போக்கு குடும்பங்கள், சம்மந்தம் வைத்துக்கொள்கின்றன.

*பல நடைமுறை சிக்கல்களை யோசித்து பார்க்கும்பொழுது, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் வாழ்க்கையே AIDS போன்ற பல பாலியல் நோய்களில் இருந்து மக்களை காக்கும் என்று தோன்றுகிறது.

*"கட்டற்ற பாலியல் சுதந்திரம்" என்ற பெயரில் ஒருவர் பலபேரோடு உறவுகொள்வதால் உடலளவிலோ, மனதளவிலோ பலனேதும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவரை அது உங்கள் உரிமை.

*வளமான வாழ்வுக்கு சுயகட்டுப்பாடு அனைவருக்கும் தேவை

https://m.facebook.com/story.php?story_fbid=1020201928185402&id=100005868133160

No comments:

Post a Comment