Monday, September 3, 2018

மண்டல் கமிஷன் வரையறை

Ravishankar Ayyakkannu
2018-09-03

கேள்வி: நான் படித்து வேலைக்குப் போய் விட்டேன். நான் முன்னேறிய சாதியா பின்தங்கிய சாதியா?

எந்தெந்த சாதிகள் பின்தங்கியவை என்ற பட்டியலை உருவாக்க மண்டல் அவர்கள் பின்வரும் வரையறையை முன்வைக்கிறார். சமூகம், கல்வி, பொருளாதாரம் ஆகிய அடிப்படைகளில் 11 காரணிகளை முன்வைத்து  ஒரு சாதி முன்னேறியுள்ளதா என்று கண்டறியப்படுகிறது.

இந்த 11 காரணிகளுக்கும் சம முக்கியத்துவம் கிடையாது. அதாவது, சமூகக் காரணிகளுக்கு தலா 3 புள்ளிகள். கல்விக் காரணிகளுக்கு தலா 2 புள்ளிகள். பொருளாதாரக் காரணிகளுக்கு தலா 1 புள்ளி.

(4*3)+(3*2)+(4*1) = 22 புள்ளிகள்.

இதில் 11 புள்ளிகள் (50%) பெற்றாலே கூட ஒரு சாதி பின்தங்கிய சாதி என்று தான் கருதப்படும். சமூகக் காரணிகளால் ஒடுக்கப்பட்டிருப்பதால் தான் கல்வி வாய்ப்பும் அதனால் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது என்பதால், சமூகக் காரணிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மண்டல் அளித்த பட்டியலைப் பதிவின் இறுதியில் காணுங்கள். அதைப் பார்த்தால், நான் படித்து வேலைக்குப் போனாலும் என் சாதி இன்னும் பிற்படுத்தப்பட்ட சாதி தான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

* என் அம்மா, அத்தைகள், பாட்டிகள் யாரும் படிக்கவில்லை.
* இன்றும் என் தங்கைகளுக்குப் பள்ளிப் படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. தாலி கட்டிக் கொண்டு அடம் பிடித்துக் கல்லூரிக்குப் போகிறார்கள்.
* ஊரே விவசாயம் தான் பார்க்கிறது. உடல் உழைப்பு இல்லாமல் ஒருவரும் இல்லை.
* 2000களின் இறுதி வரையில் குடிநீர் தேடி ஊரணி ஊரணிகளாக அலைந்து கொண்டிருந்தோம்.

உங்களுடன் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பல சாதி மாணவர்கள் அவர்களின் ஊர்களில், குடும்பங்களில் இருந்து முதல் தலைமுறையாகத் தலையெடுத்து வருகிறார்கள். அவர்கள் சாதி மொத்தமும் முன்னேற இன்னும் பல தலைமுறைகள் ஆகும்.

**
மண்டல் அளித்த பட்டியல்

சமூகம்

    * சமூகத்தில் பின்தங்கியுள்ளது என்று மற்றவர்கள் கருதும் சாதிகள்
    * பெரும்பாலும் உடல் உழைப்பையே தங்கள் வாழ்வாதரத்துக்கு நம்பியுள்ள சாதிகள்
    * கிராமங்களில் 17 வயதுக்கு முன்பே திருமணம் செய்யும் பெண்களும் ஆண்களும், மாநில சராசரியில் இருந்து, 25%க்கும் 10%க்கும் கீழே இருக்கும் சாதிகள்.  நகரங்களில் இதுவே, 10%க்கும் 5%க்கும் கீழே இருக்கும் சாதிகள் என்று கணக்கிடப்படும்.
    * வேலையில் பங்கு கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை, மாநில சராசரியில் இருந்து, 25% மேலே இருக்கும் சாதிகள்.

கல்வி

    * 5-15 வயதுள்ள சிறுவர்களில் பள்ளிக்குச் செல்லாதோர் எண்ணிக்கை, மாநில சராசரியில் இருந்து, 25%க்கும் மேலே இருக்கும் சாதிகள்.
    * 5-15 வயதுள்ள சிறுவர்களில் இடையிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்துவோர் எண்ணிக்கை, மாநில சராசரியில் இருந்து, 25%க்கும் மேலே இருக்கும் சாதிகள்.
    * பள்ளிப் படிப்பை முடித்தோர் எண்ணிக்கை, மாநில சராசரியில் இருந்து, 25%க்கும் கீழே இருக்கும் சாதிகள்.

பொருளாதாரம்

    * குடும்பத்தின் சராசரி சொத்து மதிப்பு மாநில சராசரியில் இருந்து 25%க்கும் கீழே இருக்கும் சாதிகள்.
    * குடிசை வீட்டில் வாழ்வோர் எண்ணிக்கை, மாநில சராசரியில் இருந்து, 25%க்கும் கூடுதலாக உள்ள சாதிகள்.
    * 50%க்கும் கூடுதலான குடும்பங்கள் குடி நீர் தேடி அரை கிலோமீட்டருக்கும் மேல் செல்ல வேண்டியுள்ள சாதிகள். அரை கிலோ மீட்டர் Castes/classes where the source of drinking water is beyond half a kilometre for more than 50 per cent of the households,
    * நுகர்வுக் கடன் பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, மாநில சராசிரியில் இருந்து, 25%க்கும் மேலே உள்ள சாதிகள்.

(ஆதாரம் மறுமொழியில்) #இடஒதுக்கீடு

https://en.m.wikipedia.org/wiki/Mandal_Commission#Reservation_policy

https://m.facebook.com/story.php?story_fbid=10157863491363569&id=576438568

No comments:

Post a Comment