Wednesday, September 12, 2018

நீட் - ஏன் எதிர்க்கிறது தமிழ்நாடு? - PDF online புத்தகம் வெளியீடு

பாலசிங்
2018-09-10

நீட் - ஏன் எதிர்க்கிறது தமிழ்நாடு? - PDF online புத்தகம் வெளியீடு...

நீட் பற்றி மக்கள் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதன் ஆபத்துகளை அறிந்துக் கொள்ள வேண்டும். ஏன் மருத்துவ மாணவர்கள் மட்டும் இல்லாமல்; அனைத்து தமிழ்நாடு மருத்துவர்களும் நீட்டை எதிர்க்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பல மருத்துவர்கள் எழுதிய நீட் எதிர்ப்பு கட்டுரைகளை தொகுத்து  "நீட் - ஏன் எதிர்க்கிறது தமிழ்நாடு" என்றப் புத்தகத்தை "நீட்டுக்கு எதிரானக் கூட்டமைப்பு" செப்.1, 2018., டாக்டர்.அனிதாவின், முதலாம் உயிர்கொடை நாளில், அவரின் சொந்த ஊர் குழுமுரில் வெளீயிட்டது.

முதல் பிரதி ஆயிரம் அடிக்கப்பட்டது. ஆயிரமும் இலவசமாக தமிழ்நாடு முழுவதும் கேட்டவர்களுக்கு தந்துவிட்ட நிலையில், இன்று, "நீட்டுக்கு எதிரானக் கூட்டமைப்பு", அப்புத்தகத்தின் PDF online versionனை இன்று, 10-09-2018 வெளீயிட்டுள்ளது. அதனை இந்த லிங்கை சொடுங்கி நீங்க உபயோகிக்கலாம்.

http://bit.ly/2NArvRH

மேலும், மக்களை நீட் பற்றிய விழிப்புணர்வு உடனே சென்று அடைய வேண்டும் என்ற நோக்கில், கூட்டமைப்பை சார்ந்த தனிப்பட்ட ஒருவர்; இந்த பதிவுடன் இணைக்கபட்டுள்ள வீடியோவையும் எடுத்துள்ளார். மேலும், நீட் தொடர்பான மற்ற வீடியோவுக்கு, கிழ் தந்துள்ள லிங்க்கை சொடுக்கவும்.

https://youtu.be/JqW4eHei2AA

நீட்டின் ஆபத்தை உணர்த்துக் கொண்ட ஒரு சிறு கூட்டம், தங்களால் முடிந்த அளவிற்கு மேற்கூறிய புத்தகம், மற்றும் வீடியோவை மக்கள் விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ளார்கள்.

தயகூர்ந்து, நீங்கள் நீட் தொடர்பாக எந்த நிலைப்பாடும் எடுங்கள், ஆனால், குறைந்தப்பட்சம் பலர் உழைப்பில் உருவான இந்த புத்தகத்தை ஒருமுறை படியுங்கள் and Take an informed decision.

குறைந்தப்பட்சம் இந்த பதிவை பகிர்ந்து தமிழ்நாட்டின் நலன் காக்க உதவுகள்.

நன்றி.

https://m.facebook.com/story.php?story_fbid=150069242588801&id=100027571786739

No comments:

Post a Comment