Sunday, September 9, 2018

குபீர் ஈழத் தாய் ஜெயா

Prakash JP
2018-09-09

#குபீர் ஈழத் தாய் ஜெயா : 1990 முதல் 2008 வரை ஓட்டு வாங்க சொன்னது..

"ராஜீவ் கொலையாளிகளுக்கு நான் தான் தூக்கு தண்டனை வாங்கி தந்தேன்.."
"உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், ஏன் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை"
"கருணாநிதி போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து தீவிரவாதத்தை வளர்கிறார்"..
"ஈழ போராளி தீவிரவாத இயக்கத்தை தடை செய்தேன்.."..
"போர் நிறுத்த தீர்மானம், புலிகளுக்கு ஆதரவான தீர்மானம்"..
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்".. 
"தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொல்லவில்லை, தமிழர்களை பிணைகைதிகளாய் பிடித்து கொல்வதே விடுதலைபுலிகள்தான்"..
"பிரபாகரன் சர்வதேச குற்றவாளி, விடுதலைபுலிகள் தீவிரவாத கும்பல், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கில் இட வேண்டும்"..
“நளினிக்கு தூக்கை குறைத்து சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார்"
"திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்.”
"திமுக ஆட்சியில் விடுதலை புலிகள் மீண்டும் தலைஎடுத்துவிட்டார்கள் எனவே பொடா சட்டம் மூலம் வைகோ, சுபவீ, நெடுமாறன் போன்றோர் ஆண்டு கணக்கில் சிறையில் தள்ளினேன்"

குபீர் ஈழத் தாய் ஜெயா : 2009 முதல் 2016 வரை ஓட்டு வாங்க சொன்னது..

"ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன்"
"ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வேன்"
ஈழத்தில் போர் உச்சத்தில் இருக்கும்போது, அப்போதைய எதிர்கட்சி தலைவர் அதிமுக ஜெயலலிதா வெளியிட்ட இரு முக்கிய அறிக்கைகள்..

போர் நிறுத்தும் அதிகாரம் இந்தியாவுக்கு கிடையாதாம்!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.

- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் நாளேடு., 16.10.2008)

கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படு கிறார்களே?

ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

- ஜெ.ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் நாளேடு, 18.1.2009)

No comments:

Post a Comment