Saturday, September 1, 2018

பொறுக்கி கிருஷ்ணன் - ஜெகநாதம் தலபுராணம்.

ஜெகநாதம் தலபுராணம்.

ஜெகநாதம் கோவில் கிருஷ்ணர் பலராமர் மற்றும் தன் தங்கை சுபத்திரையுடன் எழுந்தருளியிருக்கும் ஒரு தலம். இதன் தலபுராணம் என்னவெனில்...

கிருஷ்ணனின் லீலாவிநோதங்களில் ஒன்றான கோபிகையர்களுடன் கொஞ்சி குலாவுவதை கண்டு கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரை பொறாமைப்பட்டு "ஓ அண்ணாவே நீ எவ்வளவோ அழகாகவும் பெருமை உள்ளவனாகவும் இருக்கிறாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும் பெருமை கோபிமார்கள் எல்லாரும் பெற்று அனுபவித்து வருகிறார்கள். நானோ உனக்கு தங்கையாக பிறந்த காரணத்தினால் அந்த சுகபோகத்தை அடைய யோக்கியதை இல்லாதவளாய் போய் விட்டேனே" என்று புலம்புகிறாள்.

அதற்கு கிருஷ்ணன் "உலகத்திலேயே மிகவும் புண்ணிய பூமியாகிய ஜெகநாதம் என்னும் புண்ணிய தலம் இருக்கிறது அங்கே எந்த விதமான வித்தியாசமும் கிடையாது. எந்த விதமான செய்கைக்கும் பாவம் கிடையாது. ஆதலால் அந்த ஜெகநாதத்திற்கு போய் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம்" என்கிறார். ஆதலால் அவரும் அவரது தங்கை சுபத்திரையும் சகோதரர் பலராமரும் அங்கே வந்து தங்கியதாக தலபுராணம் கூறுகிறது...

என்னே கிருஷ்ணரின் மகிமை. என்னே அவரின் பெருமை...

#கிருஷ்ணஜெயந்தி

No comments:

Post a Comment