Wednesday, September 26, 2018

ரஃபேல் ஃப்ராட் - ராஜ ராஜேந்திரன்

ரஃபேல் ஃப்ராட்
±++++++++++++++++
(நன்றி: ராஜ ராஜேந்திரன்)

ரஃபேல் விமானங்களைத் தயாரித்துத் தரும் தஸ்ஸோ - ஃப்ரான்ஸ் நிறுவனத்தைப் பற்றி, இன்றைய (26/09/2018 புதன்) தமிழ் இந்துவின் கடைசி பக்கத்தில் ஒரு பத்தியைப் போட்டிருந்தார்கள்.  பெருவியப்பைத் தந்தது !

ஸ்வீடனின் போஃபர்ஸ் பீரங்கிகளைப் போலவே, தஸ்ஸோ தயாரிப்புகளும் அட்டகாசமானவைகளே என்கிறது கட்டுரை.  போக 100 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை பெற்ற கம்பெனி தஸ்ஸோ.  ஜாகுவார், மிராஜ் 2000 போன்ற அட்டகாசமான போர் விமானங்களை, ஏற்கனவே அவர்களிடமிருந்துதான் நாம் வாங்கி வைத்திருக்கிறோம்.  மிராஜ் 2000 விமானங்கள் கார்கில் போரில், செம கெத்து காட்டியது என்பதெல்லாம் வரலாறு.  ஆக, ரஃபேல் விமானங்கள் மிகத் திறன்வாய்ந்ததாகத்தான் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகங்களுமில்லை, ஆனால் ;

ரஃபேல் டீல் பற்றி, இதுவரை நான் வாசித்த பல ஜாம்பவான்களின் ஆதாரப்பூர்வக் கட்டுரைகளிலிருந்தும், திருட்டுக் கம்மனாட்டி பக்தாள்களின் முட்டுக்களிலிருந்தும் என்ன தெரியவருகிறது எனப் பார்ப்போம் !

1.) 2014-ன் ஆரம்பம்.  ஃப்ரான்ஸ் தஸ்ஸோவின் ரஃபேல் போர் விமானம் ஒன்றை தலா 526 கோடி என்று பேரம் பேசி முடிக்கிறது காங்கிரஸ் அரசு.  மொத்தம் 126 விமானங்களுக்கான ஆர்டர் கொடுக்கலாம் என முடிவெடுக்கப்படுகிறது ! 

அதில் 18 விமானங்களை உடனடியாக டெலிவரி செய்யவேண்டும், மீதமிருக்கும் 108 விமானங்களை இந்தியாவில் வைத்து, இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்சுடன் கூட்டு சேர்ந்து, தஸ்ஸோ வடிவமைத்து தரும். ஆக, 526 கோடிகள் x 126 = 67000 கோடிகள் மதிப்புள்ள ஒப்பந்தம் !  

தஸ்ஸோவுடனான மெயின் இந்தியப் பார்ட்னர் H A L மட்டுமே !  ஆக்சுவலா இதுதான் பக்காவான மேக் இன் இந்தியா திட்டம்.  ஜப்பானின் சுசூகி எப்படி மாருதியுடன் இணைந்து, இந்தியாவில் கார் உற்பத்தியை பிரம்மாண்டமாகச் செய்ததோ, அதுபோன்ற ஒரு திட்டம்.  இந்தத் திட்டம் இறுதி நிலையில் இருந்த பொழுது, இந்தியப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது !

2.) ஒப்பந்தங்கள் இறுதிசெய்யப்படாத நிலையில், 2014- மே, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று மோடி ஆட்சிக்கு வருகிறார்.  இறுதிசெய்யப்படாத அந்த ஒப்பந்தங்கள் அப்படியே கைவிடப்பட்டு, தேவைப்பட்டால் பேசுகிறோம் என்றிருக்கிறது இந்தியப் பாதுகாப்புத் துறை.  ஒரு லட்சம் கோடிகள் வரை புரளக்கூடிய ஒப்பந்தம்.  உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கமிஷனே பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் வரும், ருசிகண்ட திருட்டுப் பூனைகள் விடுமா என்ன ?

3.) ஃப்ரான்ஸ்சுக்கு மோடியுடன் பல தொழிலதிபர்கள் செல்கிறார்கள், அதிலொருவர் அனில் அம்பானி.  தஸ்ஸோவுடன் ஃப்ரெஷ்சாக டீல் பேசப்படுகிறது.  டீல் இறுதியும் செய்யப்படுகிறது. 

அதாவது, “ நிம்மில் ரொம்போ லேட் பண்ணிட்டான் மோடிஜி, புராணா ரேட் மே நம்மில் கொட்க்க முட்யாத் “ என்றாராம் தஸ்ஸோ சேட். 

அதிர்ச்சியுற்ற தேஷ் பக்த் (சுருக்கமாக தே ப) மோடி, ” அரே ஹம் கரீப் மாத்தாக்கி லட்கா, பாத்து செய் சேட் “ என்று அவன் தாள் பணிந்தாராமாம்.  மிகவும் சலித்துக்கொண்டே தஸ்ஸோ சேட், சரி, சரி ஒரு ஃப்ளைட் இப்போ 1670 கோடி ஆவும்.   ஆனா அந்த ரேட்டுக்கு நம்மிள் நிம்மில்க்கு கொடுக்கணும்ன்னா வோ ஹெச் ஏ எல் ச்சோர் கமினே ஹமாரா பார்டனர் இல்லே, இதோ பரோட்டோ சூரி மாதிரி இருக்காம் பார், இந்த அனில்தான் நம்ம இந்திய பார்ட்னர், டீக்ஹை “ என்றிருக்கிறார்.

இப்படியாக நமக்கு கதையைச் சொல்லிக் கொண்டிருப்பது பாதுகாப்புத் துறை அமைச்சர் சீ. நிர்மலா !

உலகில் என்றுமே கொள்வோருக்குத்தான் மரியாதை அதிகம்.  நாம் நினைப்போம் படைப்பவருக்கு என்று.  கிடையாது.  கேரளாக்காரன் பூராப்பயலும் காய்கறிலருந்து, பால், முட்டை, மீன் என்று எல்லாவற்றுக்கும் நம்மளத்தான் நம்பிக் கிடக்கான் என்பது அபத்தமான ஒன்று.  அது ஊளைத் தமிழ்த் தேசிய முட்டாள்கள் சிலர் வைக்கும் கூற்று.  அவன் டிமாண்ட்.  நாம் சப்ளையர்ஸ்.  அவனுக்குத்தான் மதிப்பு அதிகம்.  நாம் நியாயமான விலையில், தரமான பொருட்களை, எப்போது கேட்டாலும் சப்ளை செய்தால் மட்டுமே நம்மிடம் தொடர்ந்து அவன் வாங்குவான்.  நம்மைவிட உயர்தரத்தில், விலையையும் குறைத்து, அதேபோல் அவைகளை எப்போதுமே தருவானெனில், மிக எளிதாக நம்மை உதறிவிட்டு, டிமாண்ட் அவன் பக்கம் சென்றுவிடும்.  இதுதான் வணிக உலக யதார்த்தம் ! 

4.) ஆக, ரஃபேல் எங்கே புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் இந்திய அரசு ஆர்டரை, வேற்று நாட்டு போட்டிக் கம்பெனிக்கு கொடுத்து விடுமோ என்றுதான் அஞ்சியிருக்குமே அன்றி, மாமி சொன்ன தஸ்ஸோ சேட் கதையெல்லாம் முழுப் பொய்.  ஆனால் வெட்கமேயில்லாமால் ஒரு விமானத்துக்கு 1144 கோடிகளுக்கும் மேல் விலையைக் கூட்டி வைத்துவிட்டு, அவர்கள் சொல்லும் ஒரே ஒரு காரணம், “ இப்ப டீல் என்னன்னா லேட்டஸ்ட் வெர்ஷன் & ஃபுல்லி லோடட் ஃப்ளைட் ” 

என்ன தஸ்ஸோ சேட் டேங்க் ஃபுல்லா பெட்ரோல நிரப்பித் தர்றாராமா ? என்று கேட்டால்..... உஸ்ஸ்ஸ் சவுண்டா பேசாத, பாகிஸ்தான், சைனா உளவாளி எவனாவது பக்கத்துலருந்தா ராணுவ மேட்டர், லீக்காகிடப் போகுது, காதைக் கொண்டா, ஏவுகணை, கன், புல்லட்டோட ஃபுல் லோடா வரப்போகுது, காலரைத் தூக்கு காலரைத் தூக்கு, போல்லோ பாரத் மாத்தாக்கீ என்று திசை திருப்புகிறதுகள் காவிக் கூட்டம் !

5.) எந்தவித முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிஃபன்ஸ்க்கு, தன் போர்விமான பாகங்களைக் கொடுத்து அசெம்பிள் செய்ய எப்படி நூற்றாண்டு பாரம்பரிய நிறுவனமான தஸ்ஸோ முன் வரும் ?  அதுவும் லட்சக் கோடிகள் டீலுக்கு, ஐந்து லட்ச ரூபாய் முதலீடாகக் கொண்ட, எந்தக் கட்டுமானத் தளவாடங்களுமற்ற ஒரு கம்பெனிக்கு ??  இங்கதான் மோடிஜி தம் திறனை முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார்.

6.)  ” அரே தஸ்ஸ்சோ, உனக்கு காங்கிரஸ் கொடுத்தது ஜஸ்ட் 526 கோடி, நம்மிள் மேக் இன் இந்தியா, ஹமாரா இந்தியா, மேரா பாரத் கொடுப்பது 1670 கோடி.  ஹெச் ஏ எல், புச் ஏ எல்லாம் வேண்டாம்.  இதோ நம்ம குஜராத்தி அனில்.  திவால் கண்டிஷன்ல இருக்கான்.  நானும் ஜமைக்கா ஓடப்போறேன் லுக் அவுட் நோட்டிஸ தூக்குங்கிறான்.  போதும்.  எத்தனை பேரைத்தான் ஓட விடுறது ?  இவன இந்திய பார்ட்டனரா ஏத்துக்கிட்டு கையெழுத்தப் போடு.  எந்த ஏரோப்பிளேனையும் நீ இந்தியாவுல செஞ்சு ஒண்ணும் நொட்ட வேணாம்.  எல்லாத்தையும் ஒங்கூர்லருந்தே செஞ்சு அனுப்பு.  பாதுகாப்புத்துறைக்கு நாங்க வச்சிருக்கிற அல்லக்கை ஒண்ணு, தன்னோட பாடி லேங்வேஜ வச்சே எல்லாத்தையும் சமாளிச்சுக்கும் “  இப்படித்தான் நடந்திருக்கும் என்பதுதான் நாம் வைக்கும் குற்றச்சாட்டு.  அதற்காகத்தான் மேரா பி எம் ச்சோர் ஹைன்னு கைல பச்சைக் குத்தி வைரலாக்கினோம் !

7.)  தே பக்கள், முழுக்க முழுக்க இது ராணுவ ரகசியம், நாம எல்லாத்தையும் வெளிப்படையா பேச முடியாது, கூடாது, காங்கிரஸ் டீல் 4 ஜி தலைமுறை ஃப்ளைட்டுன்னா, நாங்க டீல்போட்டது 5 ஜி தலைமுறை ஃப்ளைட், ஃபுல்லி லோடட், சகல ஏவுகணைகள் பொருத்தப்பட்டு......அய்யய்யோ ஒளறிட்டனே, ஒளறிட்டனே இப்படில்லாம் நோண்டி நோண்டி கேட்டு நாட்டு பாதுகாப்பு மேட்டர்ல விளையாடுறீங்களே நீங்கல்லாம் ஆன்ட்டி இண்டியன்ஸ், என்று வழக்கம் போல், நம் மேலேயே குற்றம் சாட்டிவிட்டு ஓடி ஒளிகிறதுகள் :(

8.)  சரிப்பா அந்த டுபாக்கூர் அனில் ? 

அவர டுபாக்கூர்ன்னா உம் நாக்கு அழுகிப் போகும்.  நாட்டுக்காக தன் குடும்பத்தையே அர்ப்பணித்த நிறுவனம் அது.  தொழில் செய்யறதுல அவங்களுக்கு இல்லாத அனுபவமே இல்ல.  கப்பல் கட்டற கம்பெனி வச்சிருக்கிற ஆளுக்கு, ஃப்ளைட் கட்டத் தெரியாதா ?  போவியா.  இப்படி இருக்கிறது பானுகோம்ஸ்களின் முட்டு !

9.) 2 ஜி வழக்கில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற வழக்கமான நடைமுறையில் விட்ட டெண்டரில் ஆ.ராசா, தன் விருப்பப்பட்ட கம்பெனிகளுக்குச் சாதகமாக, டெண்டர் தேதியை முன்னமே அவர்களுக்குச் சொல்லி..... (அல்லது) இவரே பினாமி கம்பெனிகளை ஏற்பாடு செய்து, அந்த அலைக்கற்றை உரிமங்களை அவர்களுக்குச் சகாய விலையில் தந்துவிட்டார்.  இதனால் நாட்டுக்கு இத்தனை லட்சம் கோடிகள் இழப்பு.  போக, சில டுபாக்கூர் கம்பெனிகள் ரகசியமாக பாகிஸ்தான், சைனாவுடன் தொடர்பு கொண்டவைகள்.  இதனால் நாட்டுப் பாதுகாப்பு நாசமாகப் போகும் என்றெல்லாம் தே ப முலாம்கள் பூசி, ஓலமிட நாம் மதி மயங்கி, அவன்கள் கூப்பாடு போட்டதையெல்லாம் உண்மையென நம்பிக் கிடந்திருக்கிறோம்.  உச்சநீதிமன்றமும் இந்த ஏலமுறையில் போதிய டெக்னாலஜி அறிவின்றி, அந்த உரிமங்களையெல்லாம் ரத்து செய்து மறு ஏலத்திற்கு ஏற்பாடு செய்தது.  ஆனால் இன்றைய நாள் வரை, அவன்கள் சொன்ன அந்த லட்சம் கோடிகளெல்லாம் வரவு வந்ததே இல்லை !  இதில் ஊழலே இருந்திருக்காது என்று சொல்ல வரவில்லை.  ஆனால், லட்சம் கோடி ஊழல் என்றே மிகக் கேவலமான ஒரு பொய்யைச் சொல்லி மக்களை முட்டாளாக்கிய ஒரு கும்பல், அவர்களுக்கு ஒத்துழைத்த ஊடகங்கள், இன்று பகிரங்கமாக Excess 1144 Crores X 126 Flights = 1 லட்சத்து 44 ஆயிரம் கோடிகளை, அப்படியே ஊழல் செய்து, மோடி அரசு வாயில் போட்டுக்கொண்டிருப்பதையோ, ஒரே ஒரு விழுக்காடு கூட போர் விமானத் தயாரிப்பில் அனுபவமற்ற, அனில் அம்பானியை தஸ்ஸோ கூட்டாளியாக நியமிக்கப்பட்டிருப்பதையோ உரத்த குரலில் பேச (குறைந்தபட்சம் அர்னாப் வாய்ஸ்சிலாவது) வேண்டியவர்கள், பம்மி, பலவீனமான குரலில், ஊழலா, அன்னிய நாட்டுச் சதியா, காங்கிரஸ் அரசியலா என்பதைக் கேட்க சகிக்க முடியவில்லை !

10.) ஆக, நாட்டுப்பற்று, இந்துமதப் பாதுகாப்பு, எல்லையில் ராணுவ வீரர்கள் என்றெல்லாம் ஜல்லியடிக்கும் தே பக்கள், ஊழலால் 70 வருட சுதந்திர இந்தியா பாழ்பட்டுக் கிடப்பதாய் புலம்பும் நடுநிலை முகமூடிக் காவிகள், இந்த வெளிப்படையான ரஃபேல் பேர ஊழலில், முகம் வெளிறி, தத்தக்கா பித்தக்கா என்று முட்டுக் கொடுத்து வருவதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  எங்கே எவனோ ஒருவன், ரஃபேல் விமான பேரத்தில் ஊழலில்லை என்று எதைச் சொல்லி அடித்தாலும், இவன்கள் அங்கு போய் பெருமூச்சு விட்டபடி ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைப் பார்த்தால், அதுகள் மீது பரிதாபம்தான் பிறக்கிறது.  இவ்வளவு பெரிய நாட்டுப் பாதுகாப்பு வர்த்தகத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் இல்லாமல் மோடி தன்னிஷ்டத்துக்கு பேரம் செய்திருப்பதே மாபெரும் தவறு எனும்போது, ராணுவ ரகசியம் என்று மிகக் குழந்தைத்தனமான ஒரு மொண்ணைக் காரணத்தை காட்டுவதெல்லாம் மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம், மாபெரும் தவறு.

டெய்ல் பீஸ் :  ஒரு போர் விமானம் 526 கோடிகள்.  இவன்கள் எக்ஸ்ட்ராவாக கொடுப்பது 1144 கோடிகள்.  விமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கொடுக்கிறார்கள்.  போர் விமானத்தில் எத்தனை ஏவுகணைகளை பொருத்தி விட முடியும் ?  ஏவுகணைகள் எப்படி போர் விமானத்தை விட விலை அதிகமாக இருக்கும் ?  இதெல்லாம் ராணுவபடைக்கலன்கள் பற்றியச் சிறு அறிவுமற்ற ஒரு சாமானியனின் கேள்விதான் ! 

ஆனால் பாமரன் எனக்கேத் தெரியுமளவு இவ்வளவு வெளிப்படையான ஊழலுக்கு, முட்டுக்கொடுக்கும் முட்டாளர்களை அடையாளம் கண்டுகொள்ள இந்த ரஃபேல் நமக்கு உதவுகிறது.  அடியோடு இதுகளை அகற்ற, நாளை நாட்டுக்கும் உதவப் போகிறது.

மீண்டும் நன்றி.
ராஜ ராஜேந்திரன், சென்னை-1

No comments:

Post a Comment