Saturday, February 23, 2019

காதலே, காதலே 11 to 15 - Hema Shankar

காதலே,காதலே
Hema shankar

---

காதலே,காதலே பகுதி - 11 🖤🖤🖤

காலேஜ்ல ரொம்ப மறக்க முடியாதது நாங்க third yrல போன Industrial visit(IV) தான். Placement preparation ஆரம்பிச்சிட்டா போக முடியாதுனு,ரொம்ப கஷ்டப்பட்டு பர்மீஷன் வாங்கி  பசங்க அரேஞ் பண்ணாங்க.ஊட்டி Radio Astronomy Centerகு கூட்டிட்டு போனாங்க, நாங்க எதுக்கு அங்க போனோம்னு எங்களுக்கே தெரியாது.ஆனா அந்த மூணு நாளும் அவ்ளோ ஜாலியா இருந்துச்சு.நல்ல மழை பெஞ்சது அப்போ, அந்த மழைல அவன் கூட நெனஞ்சிட்டே நடந்து போனது, botanical gardenகு வெளிய ஒரு ரெட் ரோஸ் வாங்கி குடுத்து அவன் லவ் யூ சொன்னது, பஸ்ல ஒன்னா டான்ஸ் பண்ணது, அவனோட ஜெர்கின் நா போட்டுட்டு சுத்தனது,எனக்கு hand bag,வளையல் வாங்கி கொடுத்தது,night walk la restaurant போனது,எல்லாமே இன்னும் நியாபகம் இருக்கு. எனக்கு பக்கத்து சீட்ல தான் உக்காந்துட்டு வந்தான், அவன் எப்டி தூங்குவான்னு பாத்ததே இல்ல, நைட் முழுக்க அவனையே  பாத்துட்டு வந்தேன், அவ்ளோ அழகா குழந்த மாதிரி பக்கத்துல இருந்த பைய்யன் தோல்ல சாஞ்சி தூங்கிட்டு வந்தான், அந்த பைய்யன் இருக்க எடத்துல நா இருந்துற்க கூடாதானு யோசிட்டு வந்தேன்😍பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலும் போயிருந்தோம், அங்க குங்குமம் குடுத்ததும் என் கைய புடிச்சு கூட்டிட்டு போய் அவனே நெத்தில வெச்சி விட்டான், இப்போ நினைச்சா காமெடியா இருக்கு, அப்போ தமிழ் சினிமா பாத்து பாத்து, என்னமோ குங்குமம் வெச்சிட்டாலே கல்யாணம் ஆகிட்டா மாதிரி பீல் பண்ணோம்😂

எங்க வீட்ல கருப்பு கலர் துணி எடுக்க கூடாது, போடவும் விட்டது இல்ல.கேட்டா நமக்கு கருப்பு ஆகாதுனு சொல்வாங்க, கருப்பே வாழ்க்கைல நா போடக்கூடாதானு சண்ட போட்டுற்கேன்.உன் மாமியார் வீட்ல கருப்பு ஆகும்னா நீ போட்டுக்கலாம் ஆனா நமக்கு ஆகாதுனு கிறுக்கு மாதிரி பேசுவாங்க.எனக்கு முதல்ல கருப்பு சுடிதார் அவன் தான் வாங்கி தந்தான். Black colour உனக்கு பிடிக்கும்ல, அதனால தான் எடுத்தேன்னு சொன்னான்.அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு,இவ்ளோ நாளா வீட்ல எது எதெல்லாம் restrict பண்ணாங்களோ அத எல்லாத்தையும் இவன் கூட எந்த restriction இல்லாம என்னால செய்ய முடிஞ்சது.நா என்ன நினைக்கறனோ அத பேசமுடிஞ்சது, அத செய்யவும் முடிஞ்சது.வீட்டுக்கு இந்த சுடிதார் எடுத்துட்டு போய் போட்டேன், இத பாத்ததும் அம்மா செம கடுப்பா ஆகிட்டாங்க, இத எங்க எடுத்த, நமக்கு தான் ஆகாது இல்ல அப்டி இப்டினு,இத நான் கொளுத்த போறேன் பாருனு சொன்ன உடனே ரொம்ப கோவம் வந்துடுச்சு.

அப்டி இத கொளுத்துவீங்கனா என்ன சேத்து கொளுத்துங்கனு கத்தனேன், வீட்ல எல்லாரும் நா கத்தனத பாத்து பயந்துட்டாங்க.எங்க அப்பா ஏன் இப்டிலாம் பேசற, அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்வா இப்டிலாம் கத்தாதனு சொன்ன உடனே இன்னும் கோவம் வந்துடுச்சு. ஒரு துணில என்ன நல்லது, எனக்கு இது தான் பிடிசிற்கு, இத தான் போடுவேன்,இதுல யாருச்சும் தலையிட்டீங்க அப்பறம் பாருங்க, நா என்ன உங்களுக்கு அடிமையா, நா என்ன பண்ணனும்னு நீங்க எனக்கு லிஸ்ட் போட வேணாம், முடியாதுனு சொல்ல ஒரு நிமிசம் கூட ஆகாதுனு கத்திட்டு ரூம் போய் கதவ சாதிக்கிட்டேன்.எல்லாருக்கும் ஏன் நா இப்டி கோவப்பட்றேன்னு புரியல, ஆனா அம்மாக்கு நல்லா தெரிஞ்சது.அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை கருப்பு கலர் தான் நிறைய எடுக்கறேன், அதுக்கான தைரியத்த குடுத்தது எங்க காதல் தான்.எனக்கு இது தான் பிடிச்சிற்கு அத தடுக்க, என் சந்தோசத்த பிடுங்க நீங்க யாருனு கேக்க வெச்சது முதல்முறை அப்போ தான். ஏன் மேல திணிகறத எதுத்து கத்தனப்போ, ஆமா நா அப்டி தான் போடுவேன்னு சொன்னப்போ யாரும் பதில் பேச முடியல. இப்டி கத்தனாதான் கேக்கும், இல்லாட்டி குட்டிடே இருப்பாங்கனு புரிஞ்சது.

அவ்ளோ நாள் வீட்ல இருக்கும் போது அவன் கூட பேசக்கூட மாட்டேன், அம்மா பாத்துட்டானு யோசிட்டு இருந்தேன், ஆனா அன்னிக்கு மொபைல் எடுத்துட்டு வந்து hallல உக்காந்துட்டு மெசேஜ் பண்ணிட்டு இருந்தேன்.அம்மா யாருக்கு பண்றனு அப்பா முன்னாடி கேட்டதும் friendகுனு சொன்னேன்.அம்மா திரும்பவும் விடல, friend na யாரு, பேர் இல்லையா அவங்களுக்குனு கேட்டதும், பேரு சங்கர்,என் classmate மா, சென்னை பைய்யன்னு சொன்னேன். உடனே அப்பா யாரு பஸ்ல பாத்தோமே அந்த தம்பியானு கேக்க, எங்க அம்மாக்கு ஒன்னுமே புரியல.ஆமா டாடி, அந்த பைய்யன் தான்னு சொன்னதும், நல்லா இருக்காங்களானு கேட்டாரு. நல்லா இருக்காங்கனு சொன்னேன்.உடனே அம்மா எதுக்கு எல்லார்கிட்டையும் நம்பர் தரனு கேட்டதும், அப்பா சும்மா அந்த பொண்ண கொடையாத, காலேஜ்ல class friendsகு நம்பர் குடுக்கறத கூட நொய் நொய்னு கேட்டுட்டு இருக்காதனு சொன்னாரு😍முதல்லையே கண்டிக்காட்டி நீங்க தான் கடைசியா கஷ்ட பட போறிங்கனு எங்க அப்பாக்கிட்ட சொன்னதும், அட போ இப்போ என்ன,என் பொண்ணுக்கு தெரியாதது இல்ல, நம்ம காலம் மாதிரிலாம் இல்ல இப்போ, பசங்க ரொம்ப தெளிவா தான் இருக்காங்க, நீ அவள எதாவது சொல்லிட்டே இருக்காதனு சொன்னாரு♥️

Pic 1: அவன் வாங்கி தந்த black chudi🖤
Pic 2: கைல அவ்ளோ கெட்டியா புடிச்சிட்டிருக்கறது அவன் வாங்கி தந்த handbag 😍

https://m.facebook.com/story.php?story_fbid=2081218478581326&id=100000795812456

---

காதலே காதலே பகுதி - 12 🖤🖤🖤

அப்போ வரைக்கும் சாதி ரீதியா அவன் கூட பெருசா பேசினதே இல்ல. வீட்டு சூழ்நிலை,சொந்தகாரங்க, பொருளாதாரம் இப்டி தான் நிறைய பேசிற்கோம்.சாதி பத்தி பேசற அளவுக்கு ஒரு புரிதலும் இல்ல, அது எவ்ளோ ஆபத்தானதுனும் தெரியல.அன்னிக்கு அவனே போன் பண்ணி எங்க மாமிக்கிட்ட நம்ம லவ் பத்தி சொன்னேன், அவங்க தான் எங்க வீட்ல கொஞ்சம் ஜாலியா இருப்பாங்க, அதனால இப்போவே சொல்லி வெக்கறது நல்லதுனு சொல்லிற்கேன், உன் கிட்ட பேசனும்னு சொன்னாங்கனு சொன்னான்.முதல்முறை அவங்க வீட்ல பேசப்போறாங்கனு ஆசையா இருந்தேன்.அவங்களும் போன் பண்ணாங்க.எப்டி இருக்க, சங்கர் சொன்னான் உன்ன பத்தினு நல்லா தான் ஆரம்பிச்சாங்க, பேசிட்டே இருக்கும் போது நீங்க யாரு, எந்த ஊரு, என்ன ஆளுங்கனு கேட்டாங்க.எனக்கு என்ன ஆளுங்கனா என்னனு கூட புரியல. புரியல, என்ன ஆளுங்கனா என்னனு கேட்டேன். உங்க caste , நாங்க இந்த **** caste, நீங்கனு ரொம்ப அழுத்தி கேட்டாங்க.

என்னடா இவங்க first time பேசும்போதே இப்டி கேக்கறாங்கனு இருந்துச்சு, நானும் என் caste சொன்னேன்.இங்க பாருமா சொல்றனேனு தப்பா நினைக்காத நீங்க வேற caste, நாங்க வேற caste, உங்க பழக்கம்லாம் வேற மாதிரி இருக்கும், எங்களோடது வேற,உங்க வயசுல எல்லார்க்கும் வரது தான், ஆனா பிராக்டிகலா யோசிச்சு பாரு இதெல்லாம் ஒத்து வருமானு, உங்க அம்மா, அப்பா இதெல்லாம் சொல்லி உன்ன வளக்கலையானு கேட்டாங்க.அப்பா,அம்மா பாத்துவெக்க மாட்டோமா,அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு,படிப்ப பாருங்க, இனி இப்டி பேசிட்டு இருக்காதிங்கனு சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க.எனக்கு அவ்ளோ அழுகையா வந்துச்சு. அவன் அப்போ தான் போன் பண்ணான்.

ஹே, என்ன சொன்னாங்க எங்க மாமி, பேசனியானு கேட்டான். எனக்கு பயங்கர கடுப்பா இருந்துச்சு,நீ எதுக்கு இப்போ என்கிட்ட பேசறா, அந்த லேடி உன்கிட்ட பேசக்கூடாதுனு என்கிட்ட சொல்லுது, இவங்க தான் ஜாலியான ஆளா உங்க வீட்ல, என் கிட்ட உன் casteல பைய்யன் யாரும் இல்லயானு கேக்கறாங்கனு சொன்னேன். அவனும் கடுப்பாகி ஏன் இப்டி பேசற அவங்களாவது பரவாயில்ல என்ன casteநு தான் கேட்டாங்க, ஆனா உங்க அம்மா யாரா இருந்தாலும் பேசக்கூடாது, என்ன செருப்பால அடிப்பேன்னு சொன்னாங்க, இப்போவே இப்டி இருக்காங்க இன்னும் கல்யாணம்னு பேசனா என்னலாம் உங்க வீட்ல ஒரு ஆளாக்கூட மதிக்க  மாட்டாங்கனு சொன்னான்.ஆமா பெத்தவங்கனா கவல இருக்க தான் செய்யும்,அப்டியே நீ கேட்டதும் யாரு என்னனு விசாரிக்காம அப்டியே தூக்கி குடுத்துடுவாங்களானு நா சொல்ல, மாத்தி மாத்தி பேசி சண்ட போட்டுக்கிட்டோம்.அது வரைக்கும் நல்லா போயிட்டு இருந்த எங்களுக்குள்ள நீங்க என்ன ஆளுங்கனு,குடும்பம், சொந்தம்னு வந்தவுடனே பிரச்சன ஆரம்பிச்சது.

ரெண்டு நாள் சரியா பேசிக்ககூட இல்ல. நானும் ஊருக்கு போயிட்டேன்.அவன் நியாபகமா இருந்தாலும், சண்ட போட்டதால மெசேஜ் பண்ணாம இருந்தேன்.எனக்கு பயங்கர காய்ச்சல் அடிச்சுது, அதனால காலேஜ்க்கு Monday லீவ் போட்டுட்டேன்.அவன் போன் பண்ணாலும் நான் எடுக்கல. அன்னிக்கு சாயங்காலம் ஒரு மெசேஜ் வந்துச்சு, come out,I m waiting opposite to ur home😍அடிக்கற காய்ச்சல்ல எழுந்துற்கவே முடியாம இருந்தேன், மெசேஜ் பாத்ததும் கை, கால்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு.வெளிய வந்து பாத்தா வீட்டு எதிர்ல இருக்க typewriting center கிட்ட நின்னுட்டு இருக்கான். என்ன பாத்ததும் போன் பண்ணான்,எப்டி இருக்க, ஏண்டி மெசேஜ்க்கு reply இல்ல, கட் பண்றனு கேட்டான். அதுக்காக இப்டியா வீட்டு முன்னாடி வந்து நிப்ப, fever அதான், சரி நீ போ, யாராவது பாக்க போறாங்க,நா அவ்ளோ தான் செத்தேன்னு சொன்னேன்.

Fever ra, இப்போ எப்டி இருக்கு, ஏன் என்கிட்ட சொல்ல, அவாய்ட் பண்றையா,மேல படி ஏறி வரவானு கேட்டான். இன்னும் பயத்துல கை சில்லுனு ஆகிடுச்சு.டேய், அவாய்ட்லாம் பண்ல, நா போன் பண்றேன் நீ இப்ப போ pls சொன்னதும், சரி லவ் யூனு சொல்லு அப்போ தான் போவேன்னு சொன்னான். சரி லவ் யூ, லவ் யூ போடா இப்போ,யாருச்சும் பாத்தாங்க எனக்கு சங்கு தான்னு சொன்னேன். என்ன பாத்துட்டே போன அந்த கண்ணு இன்னிக்கு வரைக்கும் நியாபகம் இருக்கு. அந்த கண்ல காதல் மட்டும் தான் இருந்துச்சு, எனக்காக ஓடி வந்ததுலையும் காதல் மட்டும் தான் பாத்தேன். பஸ்ல அவன் ஏறிட்டான் சொன்னதும் அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு.எங்க வீட்டுக்கே நீ வந்துடு டா, எதுக்கு இப்போ போறனு கேட்டதும், சரி ஊர் இன்னும் தாண்டல, எறங்கி வரேன் இருடினு சொன்னான் பாருங்க 😍♥️♥️♥️

https://m.facebook.com/story.php?story_fbid=2082827788420395&id=100000795812456

---

காதலே காதலே பகுதி-13 🖤🖤🖤

காதலும்,தேடலும்,சண்டையும்,சமாதனமுமா போயிட்டு இருந்த எங்களுக்குள்ள ஒரு பெரிய பிரச்சனைய அவன் கொண்டு வந்தான்.அன்னிக்கு போன் பண்ணும் போது எடுக்கவே இல்ல, ரொம்ப நேரம் அவ்ளோ கால்,மெசேஜ் பண்ணியும் ஒரு ரிப்ளை கூட இல்ல.திடீர்ணு நைட் 1 மணிக்கு போன் பண்ணான்.என்ன பண்ணிட்டு இருந்த, போன் பாக்கவே மாட்டியா,என்ன ஆச்சு, இப்போ பண்ணிற்கனு நா பதட்டமா கேட்டேன்.அதுக்கு அவன், இங்க பாரு நான் ஒன்னு சொல்வேன் நீ கடுப்பாகக்கூடாதுனு சொன்னான். ஏன் இப்டி சொல்ற, சரி சொல்லு என்னனு கேட்டேன்.

அ: எங்களுக்கும், நம்ம dept ஜுனியர் பசங்களுக்கும் சின்ன பிரச்சன ஆகிடுச்சு, அதனால வார்டன் என்கொய்ரிக்கு வந்துற்தாரு
நா: என்ன பிரச்சன, யாரு பண்ணாங்க, எதுக்கு வார்டன் வரைக்கும் போச்சு?
அ: நம்ம சீனியர் ஒரு அண்ணாவ கிண்டல் பண்ணிற்காங்க,அத கூப்ட்டு என்னனு கேட்டோம் ரொம்ப நக்கலா பேசனாங்க, அதான்..
நா: அதானா, என்ன?? என்ன பண்ணிங்க?
அ: சும்மா லைட்டா தட்டனோம், அதுல ஒரு பைய்யனுக்கு லைட்டா காதுல ரத்தம் வந்துடுச்சு
நா: அய்யோ, என்ன சொல்ற? என்னத்த பண்ணி தொலச்சீங்க.
அ: ஒன்னும் இல்ல, ஊமக்குத்து குத்தி அனுப்பலாம்னு தான் கூப்டோம், ஆனா ஓவரா பேசனான், சீன் போட்டான், அதான் பொங்குனு ரெண்டு உட்டோம், அதுல லைட்டா ரத்தம். அவனுங்க அத பெருசாக்கி வார்டன் கிட்ட complaint பண்ணிட்டானுங்க
நா: டேய் அறிவு இருக்கா, உங்களுக்கு யாரு அடிக்கற ரைட்ஸ் குடுத்தது, என்ன பண்ணி வெச்சிற்கீங்க ரத்தம் வர அளவுக்கு, யாரு அப்டி பண்ணது?? நீ என்ன பண்ண??
அ: நாங்க தான், நானும் தான் நல்லா பொலந்தேன்.அவன் அப்டி பேசறான் , பெரிய இவன் மாதிரி
நா: அட சீ, என்ன திமிர் உங்களுக்குலாம், வாய்ல அவன் கிண்டல் பண்ணா நீங்க பதிலுக்கு அடிப்பீங்களா? இப்போ என்ன தான் நடக்குது? அந்த பைய்யன் எப்டி இருக்கான்?
அ: அவன் நல்லா குத்துகல்லு மாதிரி தான் இருக்கான், சும்மா வார்டன் கிட்ட கோத்துவிட்டு சீன் பண்றானுங்க. விடு பாத்துக்கலாம்.
நா: இவ்ளோ ஈசியா சொல்ற, இப்போ வார்டன் enquiry வெச்சா நீங்க எல்லாரும் தான expel ஆவீங்க. உனக்கு என்ன கேடு,எவன் எப்டி போனா என்ன, செம் வர போகுது,இதுலாம் தேவையா. Exam எழுத விடலனா என்ன பண்றது
அ: உன் கிட்ட சொன்னதே தப்பு, போன வை, எல்லாம் நா பாத்துகுறேன், சும்மா ஆரம்பிச்சுடுவ

இப்டி சொல்லிட்டு கட் பண்ணிட்டான், அந்த நைட் சுத்தமா தூக்கம் போச்சு, போன் பண்ணா switch off வந்தது.அடுத்த நாள், classகு HOD வந்தாங்க. நீங்கலாம் என்ன பெரிய ஹீரோனு மனசுல நினப்பா அப்டி,இப்டினு திட்டிட்டு, principal கூப்டுவாரு ஒருத்தன் விடாம போகனும்னு சொல்லிட்டு போயிட்டாங்க.principal கிட்ட பசங்க எல்லாரும் போயிட்டு வந்தாங்க. Hostel விட்டு எக்ஸ்பல் பண்ணிட்டாங்க, செம் கிட்ட இருந்ததால சஸ்பண்ட் பண்ல. ஒட்டு மொத்தமா எல்லா பசங்களும் அன்னிக்கே hostel vacate பண்ணாங்க. காலேஜ் வெளிய இருக்க ரூம்ல அப்டி இப்டினு எப்டியோ அரேஞ் பண்ணிட்டாங்க. எங்க காலேஜ் வரலாற்றுலையே முதல் முறையா CSE பசங்க எக்ஸ்பல் ஆனது அப்போ தான், நாங்களும் ரவுடி தான்னு பார்ம் ஆகிட்டாங்க😂

வெளிய போயிட்டு ரூம்ல செட்டில் ஆகர வரைக்கும் அவன் என் போன் அட்டண்ட் பண்ணவே இல்ல.அவனாவே மூணு நாள் கழிச்சு கால் பண்ணான்.எதுக்கு எனக்கு போன் பண்ற, உங்களுக்கு தான் அறிவு வழியுது, நாங்களாம் அறிவு இல்லாத பசங்க பாருனு சொன்னான். நீங்க பண்ண வேலைக்கு தான் வெளிய அனுப்பிற்காங்க, கொஞ்சமாவது ரியலைஸ் பண்றியா, எவ்ளோ கோவம் வருது உனக்குனு நா சொல்ல, ஆமா அப்டி தாண்டி கோவம் வரும், friendகு எதாவது ஒன்னுனா கோவம் வரத்தான் செய்யும், உன்ன மாதிரி ஏன், எதுக்குலாம் பாக்க தெரியாதுனு சொன்னான்.எனக்கு இன்னும் கோவம் தான் வந்துச்சு,அடிச்சது தப்பு தான் அத ஒத்துக்கோ, hostelல படிக்கறது மட்டும் தான் வேலையா இருந்துச்சு, ஆனா இப்போ பாரு சாபாட்டுல இருந்து எல்லாமே இனி வெளிய தான்,அந்த ரூம்ல எப்டி அத்தன பேர் இருப்பீங்க,எவ்ளோ செலவு,நம்மல பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா, படிச்சி முடிச்சிட்டு வேலையோட வெளிய போலனா நம்ம தான் offcampusல அலையனும்.

எங்க வீட்ல நா எவ்ளோ கஷ்ட பட்டு சமாளிக்கறேன்னு எனக்கு தான் தெரியும். காலேஜ் முடிச்சதும் alliance பாக்க ஆரம்பிச்சுடுவாங்க,நா என்னனு சொல்றது, எவ்ளோ தடவ சொல்றேன் டிகிரி வேலை மட்டும் தான் நமக்கான ஒரே செக்யூரிட்டி,நீ என்னடான இவ்ளோ அலட்சியமா பேசற என் கிட்டனு சொன்னேன். எம்மா தாயே உன்ன லவ் பண்ணா நீ சொல்றதெல்லாம் நா கேக்கனும்னு இல்ல சும்மா எனக்கு இதல்லாம் சொல்லாத, நா அப்டி தான், பேச புடிக்கலனா போ பேசாதனு சொன்னான்.நீயா உன் தப்ப realize பண்ணி பேசற வரைக்கும் நா பேச மாட்டேன், நீ பெரிய இவன், எனக்கு தலையெழுத்து பாரு உன் பின்னாடியே நா வரனும்னு சொன்னேன். அப்போ வராத போடினு கட் பண்ணிட்டேன்😪

https://m.facebook.com/story.php?story_fbid=2084289594940881&id=100000795812456

---

காதலே காதலே பகுதி-14 🖤🖤🖤

பேசாட்டி போடினு சொன்னவன், அடுத்த 2 மணி நேரத்துல போன் பண்ணான். முதல்ல ஒரு நாலு, அஞ்சு கால் அட்டண்ட் பண்ல, அப்பறம் எங்க போன் பண்ணாம போயிட போறானோனு படார்னு first ringலையே அட்டண்ட் பண்ணிட்டேன்😌.எடுத்ததும் sorry, நா அப்டி பேசிற்க கூடாது தான், sorry, சாரினு சொன்னான், எதுக்கு sir என்கிட்டலாம் பேசிக்கிட்டு இருக்கீங்க,நா தான் உன்ன நொய் நொய்னு டார்ச்சர் பண்றனேனு சொல்லிட்டு இருக்கும் போதே லவ் யூ, உன் கூட பேசமலாம் இருக்க முடியாது,சரி canteen வா உன்ன பாக்கனும்னு சொன்னான்.இப்டி சொன்ன உடனே என்ன ரிப்ளை பண்றது, சரி கட் பண்ணு பத்து நிமிசத்துல வரேன்,லவ் யூனு சொன்னேன். Canteenல எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான், பாத்ததும் சாப்டியா,பசிக்குது வா சாப்டலாம்னு சொன்னான், எனக்காக அவனே plateல வாங்கிட்டு வந்து தந்தான்.இனிமே சும்மா சண்ட போட்றா மாதிரி பேசாத, உன் கூட திரும்ப பேசற வரைக்கும் எனக்கு ரொம்ப stress சா இருக்கு, நா அப்டி பேசனதுக்கு சாரி, உன்ன கஷ்ட படுத்த கூடாதுனு தான் கோவமா இருக்கும் போது பேசாம அவாய்ட் பண்ணிட்றேன்னு சொன்னான்.

நானும் தான், உன்ன சும்மா எதாவது சொல்லிட்டே இருக்கேன்ல, எனக்கே புரியுது உன்ன போட்டு படுத்தறேன்னு, ஆனா பாரு உன்கிட்ட மட்டும் தான் இப்டி கோவம் வருது, இப்டிலாம் தோணுது, sorryணு சொன்னேன். அவன் அதுக்கு சிரிச்சிட்டே ‘ஹே லூசு ரொம்ப எமோஷ்னல் ஆகாத, அது அப்டி தான்,யார்கிட்ட ரொம்ப அன்பு இருக்கோ அவங்க கிட்ட தான் கோவத்த காட்டமுடியும், சண்ட போட முடியும், இப்டி சண்ட போட்டாலும் பாரு உன் கூட பேசாம என்னால இருக்க முடியல, உனக்கும் அப்டி தான் இருக்கும்னு’ சொன்னான்♥️♥️♥️ செம் study holidays வந்துச்சு, நானும் வீட்டுக்கு கெளம்பிட்டேன், அவனும் என் கூட என்ன ஊர்ல விட்டுட்டு சென்னை போறேன்னு வந்தான்.

பஸ் ஏரும் போதே, ஊர் வரதுக்கு 2 ஊர் முன்னாடியே வேற சீட்க்கு போயிட்றேன், யாராச்சும் உங்க வீட்ல பாத்துட போறாங்க, அப்பறம் நீ தான் சமாளிக்க கஷ்ட படனும்னு சொன்னான், பாத்த பாத்துட்டு போறாங்க, இப்போ என்ன, ரொம்ப பண்ணா நா கெளம்பி வந்துட்றேன், நீ தான் இப்போ hostelல இல்லையே வெளிய ரூம் எடுத்துக்கலாம் நமக்குனு சொன்னதும், நீ ஒரு முடிவோட தான் இருக்கியா, உங்க வீட்ல எனக்கு செருப்படி வாங்கி தராம இருக்கமாட்ட போலனு சொல்லிட்டு, ச்ச இப்போ மட்டும் Job இருந்தா இப்டிலாம் யோசிக்க கூட வேணாம், நீயே கேக்காட்டியும் நானே உன்கிட்ட live in பத்தி கேட்டுற்பேன், கொஞ்சம் பொருத்துக்கோ, இன்னும் 2 வருஷம் அப்பறம் எல்லாம் மாறும்னு சொல்லும் போது அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு😍லிவ் இன்லாம் படத்துல தான் டா பாத்துற்கேன், எங்க வீட்டுக்கு தெரிஞ்சுச்சு கொண்ணே போட்றுவாங்கனு சொன்னேன், எங்க வீட்ல மட்டும் கொஞ்சவா செய்வாங்க, அதல்லாம் சமாளிக்கனும்னு சொன்னான்.

பஸ்ல பேசிட்டே வந்தோம்,life எப்டி இருக்க போது,வேலைக்கு போயிட்டா லிவ் இன்லாம் ஒரு விசியமே இல்லனு அவன் சொன்னதும், அதுக்கு எதுக்கு டா லிவ் இன்ல இருக்கனும், எப்டியும் செருப்படி வாங்கறதுனு முடிவாகிடுச்சு நம்ம கல்யாணமே பண்ணிக்கலாமே,எப்டியும் இன்னும் கொஞ்ச வருசம் கழிச்சு கல்யாணம் தான பண்ணிக்க போறோம் அத சீக்கரமே பண்ணிக்கலாம்லனு சொன்னதுக்கு, லூசு இன்னும் உனக்கு லிவ் இன் காண்சப்ட்டே புரியல, நா explain பண்றேன்னு ஆரம்பிச்சான் பாருங்க😌❤️ 4 மணி நேரம் பேசிற்பான், நாங்க பேசனதுலையே best romantic talk அது தான்😍 ஊர் வந்தது கூட தெரியாம பேசிட்டு இருந்தோம். ஊர் வந்துடுச்சுடி,நா வேற சீட்டுக்கு போறேன்னு சொன்னதும், வேணாம் நம்ம இப்போவே லிவ் இன்ல இருக்கலாம், வா எங்க அப்பாகிட்ட பேசு, நா dress pack பண்ணிக்கிறேன், அப்டியே போயிட்லாம் திரும்பி, பார்ட் டைம் வேல பாத்து fees கட்டிக்கலாம், இன்னும் ஒரு வருஷம் தானனு சொன்னதும் அவனுக்கு தூக்கு வாரி போட்டுச்சு,அடியே விட்றீ இங்கவே என்ன அடக்கம் பண்ணிடுவாங்க,விட்றீணு சொன்னான்😂சரி போனாப்போகுதுனு விட்டுட்டேன்😍

https://m.facebook.com/story.php?story_fbid=2086132621423245&id=100000795812456

---

காதலே,காதலே பகுதி- 15🖤🖤🖤

ஒரு வழியா செம்மஸ்டர்லாம் முடிஞ்சு final year வந்துட்டோம்.Final year first semலையே மினி பிராஜெக்ட்னு ஒரு மூனு மாசாம் மண்ட காஞ்சி போச்சு, அப்பவும் எங்க சந்தோசத்துக்கு மட்டும் அளவே இல்லாம இருந்துச்சு, இன்னும் ஒரு செம் தான், அத நல்ல படியா முடிச்சிட்டா வேலைக்கு போயிடுவோம், இண்டிபெண்டாகிடுவோம்னு ரொம்ப கனவுல இருந்தோம். சில friends Higher studiesகு GATE, TOEFL,GREநு prepare பண்ண ஆரம்பிச்சாங்க, ஆனா எங்களுக்கு வேலைக்கு போன போதும்னு இருந்துச்சு. தினமும் போன் பேசும் போது கனவுல தான் வாழ்ந்துட்டு இருந்தோம்.சென்னை, பெங்ளூர், பூனே இப்டி எங்க கெடச்சாலும் பரவாயில்ல, அதுவும் வெளி ஸ்டேட்னா இன்னும் பரவாயில்ல, நிம்மதியா கொஞ்ச நாள் வேல பாத்துட்டு, life enjoy பண்ணலாம்னு பேசிட்டு இருப்போம். Placement வர போகுதுனு கொஞ்சம் கஷ்ட பட்டு படிக்க ஆரம்பிச்சோம். First core companies மத்த deptகு வர ஆரம்பிச்சாங்க.

அந்த வருஷம் recruitment ரொம்ப கம்பியா தான் இருக்கும்னு சொன்னாங்க. அதுவும் IT companies இன்னும் அதிகமா tougha இருக்கும்னு சொன்னாங்க. First company TCS வரும்னு சொன்னாங்க.நாங்க govt college, பெரிய placement coaching, placement cellலாம் இல்ல, நாங்களே அடிச்சிபுடிச்சி seniors மூலமா mock interview,aptitude preparation,இப்டி எல்லாத்தையும் அந்த deptல இருக்க placement coordinator, students secretary தான் பாத்துகனும்.பசங்க தான் முழு முயற்சி பண்ணி கம்பெனி கூட்டிட்டு வரதுல இருந்து, ஆர்கனைஸ் பண்ற வரைக்கும் செய்வாங்க.எல்லாரோட கனவும் எப்டியாவது place அகிடனும்னு மட்டும் தான். போன் பேசற நேரம் கூட எதாவது technical discussion, communication,mock interview மாதிரி தான் ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம். ஒரு மாசத்துக்கு பேய் மாதிரி தான் படிச்சோம்,எங்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அது மட்டும் தான்.

company வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி placementகு dress code சொன்னாங்க. அவனுக்கு ஒரு லைட் blue formal full hand shirt எடுத்து தந்தேன்.ரொம்ப எமோஷ்னலா இருந்துச்சு. நா தான் ரொம்ப பயந்தேன், ஆனா அவன் கொஞ்சம் கூட பயமே இல்லாம இருந்தான்,கேட்டா நம்ம bestட குடுக்க போறோம்,உனக்கு நா இருக்கேன், எனக்கு நீ இருக்க, அது கண்டிப்பா தப்பா போகாதுனு என் கைய இருக்கமா புடிச்சிகிட்டான். அந்த இருக்கமும், பரஸ்பரமும் தான் எங்களுக்குகான ஒரே எனர்ஜி😍First day aptitude online assessment, அத clear பண்ணா அடுத்த நாள் technical, அத clear பண்ணா HR. அதுல shortlist ஆகனும். நாங்க எதிர்பாத்த அந்த day வந்துச்சு. Aptitude attend பண்ண முன்னாடி அவன பாத்துட்டு உள்ள போனேன்.ஏதோ அவ்ளோ பதட்டமா இருந்துச்சு, ஆனா அவன பாத்ததும் கூல் ஆகிட்டேன்.

Aptitude முடிஞ்சி hostel போயிட்டேன், ரிசல்ட் தெரியரதுக்கு முன்னாடியே, அடுத்த நாளைக்கு prepare பண்ண ஆரம்பிச்சுட்டோம். அன்னிக்கு evening 6 மணிக்கு கால் பண்ணான்,நாங்க ரெண்டு பேரும் clear பண்ணிட்டோம்னு சொன்னான், லவ் யூ பயப்படாம prepare பண்ணு நாளைக்கு பாக்கலாம்னு கட் பண்ணிட்டான். இன்னும் பயம் அதிகமா இருந்துச்சு, அடுத்த நாள் வரைக்கும் heart beat பண்ணி எடுத்துடுச்சு.அடுத்த நாள் technical அவன் முதல்ல attend பண்ணிட்டு வந்துட்டான், நா உள்ள போற வரைக்கும் என் கூடவே இருந்தான், coolல இரு, confidentட பண்ணு, லவ் யூனு சொல்லி அனுப்பனான்,நானும் technical attend பண்ணிட்டு வெளிய வந்தேன்,all ok ல, கொஞ்சம் சிரிடி,பாரு உன் பேரு தான் first வரும்னு சொன்னான். அது மாதிரியே வெளிய வந்தட்டு கொஞ்ச நேரத்துல நீங்க clear பண்ணிட்டீங்க, HRகு போய் அந்த ரூம்ல வெயிட் பண்ணுங்கனு சொன்னாங்க,ரெண்டு பேரும் ஒரே நேரம்  HR round போனோம், அதையும் முடிச்சிட்டு conference hallல வெயிட் பண்ணிட்டு இருந்தோம்,ஒரு ரெண்டு மணி நேரம் அப்பறம் result சொன்னாங்க,75 பேர் placed அதுல நானும், அவனும் இருந்தோம்😍❤️😍

https://m.facebook.com/story.php?story_fbid=2087696634600177&id=100000795812456

No comments:

Post a Comment