Saturday, February 16, 2019

தேசப்பற்று (Patriotism) - லுலு

தேசப்பற்று (Patriotism)

மனிதக்கழிவுகளை அகற்ற கூட இன்னும் manual scavenging தான் யூஸ் பண்ணிகிட்டு இருக்கோம் நம்ம நாட்டுல. அதுல ஒவ்வோரு வருஷமும் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காவு குடுத்திட்டு இருக்கோம். இது ஒரு பக்கம் இருக்க, நாளுக்கு நாள் இப்டி ராணுவ வீரர்களின் மரணச் செய்திகள் வந்து காதில் நாராசமாய் ஒலிக்குது...

ஒரு முன்னாள் ராணுவ வீரனின் வார்த்தைகளில்....

“உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்.!

ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி சொல்வார் "இந்திய பிரதமரே குறுக்கே வந்தாலும் கான்வாய் நிற்காது". கான்வாய் தலைவராக நியமிக்கப்படும் அதிகாரிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. கான்வாயை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அனைத்து வீரர்களுக்கும் AK 47 கட்டாயம் உண்டு. உரி செக்டாரில் புறப்பட்டால் அடுத்த ட்ரான்சிஷன் கேம்பில் தான் கான்வாய் நிற்கும். கான்வாய் வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் அடித்து தூக்கி விட முடியாது. காரணம் கான்வாய் வாகனங்கள் அனைத்துமே ரஷியாவின்(செக்) Tatra ட்ரக்குகள். சாதாரண பாம்க்கு மயிராக்கூட மதிக்காது அந்த வாகனம். ராணுவம் வேற மாதிரி அப்படிப்பட்ட கான்வாயை தீவிரவாதிகள் தூக்கிய வரலாறு உண்டு.

அப்படியிருக்கையில் சம்பவம் நடந்த புல்வாமா உரி - ஸ்ரீநகர் கான்வாய் பாதையில் சிஆர்பிஎப் வீரர்களை ஒரு சாதாரண பேருந்தில் எப்படி கொண்டு சென்றார்கள் என்று இரண்டு நாளாக மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ராணுவ நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு நண்பன் சொன்னான், "என்னமோ பண்றாய்ங்க மாப்ள" அந்த வார்த்தைகள் என்னமோ செய்கின்றன என்னை.

அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிழும் எழுந்து தெய்வங்களை வேண்டுகிறேன். பாவப்பட்ட அந்த ஜென்மங்களுக்கு எந்த கெடுதலும் நடந்து விடக்கூடாது. ராணுவத்தில் இருக்கும் காலத்தில் தான் அவர்களுக்கு குடும்பம் புள்ளக்குட்டின்னு சந்தோஷமான வாழ்க்கை இல்லை, ரிட்டயர்டாகியாச்சும் புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருக்கட்டும். மனைவிமார்கள் தங்கள் கணவனை இழந்து, குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்து தாய் தனது மகனை இழந்து வாடும் வலியை யாரும் அனுபவிக்க வேண்டாம். ராணுவ வீரர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவன் வெறும் சரக்கு பாட்டில் வாங்கிவரும் சாராய வியாபாரி அல்ல!” (John Gladson, வாழ்வின் பொன்னான ஐந்தாண்டுகளை ராணுவத்தில் கழித்தவன்)

பொது மக்களின் ஓங்கிய குரலில்:

“காஷ்மீருக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் போரில் தள்ளுவதை இந்திய மக்கள் விரும்பவில்லை. நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்து காஷ்மீர் பிரச்சினையை உங்களால் தீர்க்க இயலவில்லை. மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே போகிறது.

முடிந்தால் போர் இல்லாமல் பிரச்சினையத் தீர்க்க முயலுங்கள். இல்லையென்றால் காஷ்மீரை விட்டுவிடுங்கள். அதுவும் இயலாது என்றால் எங்களை விட்டுவிடுங்கள்.

நாங்கள் போருக்குத் தயாராக இல்லை. எங்களது அன்றாட வாழ்வே பெரும் போராட்டமாக இருக்கிறது. எங்களுக்கு எந்தவகையிலும் பயனில்லாத போரில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. உங்களின் தற்பெருமைக்காக நாங்கள் எங்களை இழக்க விரும்பவில்லை.” (க.பா திருப்பத்தூர்)

- இதுக்கு மேல இதுல நாம என்ன சொல்ல இருக்கு?

இனி, One out of 101 reasons, why Modi’s rule shouldn’t continue...

ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத மோடி, பொது மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் சிதைக்கும் மோடி இனிமே நாட்டுக்கு தேவையான்னு மக்கள் சிந்திக்க தொடங்க வேண்டிய தருணம் இது. மோடியின் ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1250 ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சியில் 10 வருடங்களில் 171 ராணுவ வீரர்கள் மட்டுமே உயிர் நீத்திருக்கிறார்கள். அதுக்காக நான் காங்கிரஸ் கட்சிய சப்போர்ட் பண்ணல. புள்ளிவிவரங்கள மட்டுமே எடுத்து சொல்றேன்.

இது ஒண்ணும் World War 1, 2ல வெறும் துப்பாக்கிகளை ஏந்திகிட்டு போயி போர் புரிஞ்ச காலகட்டம் இல்ல. அண்டை நாட்டுக்கு போரினால் பதிலடி கொடுப்போம், நாம யார்னு காட்டுவோம்னு சும்மா சவால் உடுறதுக்கு இது கீ போர்ட் யுத்தம்னு நினைச்சுகிட்டானுவ போல சங்கி மங்கிஸ். எல்லா நாட்டுக்காரனும் Nuclear Weapons தயார் பண்ணி வச்சிட்டு காத்திருக்கான். நாமளும் தான் வச்சிருக்கோம். மாத்தி மாத்தி தாக்கிகிட்டோம்னா அப்புறம் எவன் ஜெயிச்சான் தோத்தான்னு கணக்கு போட்டு சொல்ல கூட ஒத்த உயிரு மிஞ்சாது ரெண்டு நாட்டுக்குள்ளயும்...

நான் வாசிச்ச வரையில பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலயும் சரி, இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரிலயும் சரி, மக்கள் யாருமே ரெண்டு நாட்டோட ஆக்கிரமிப்பயும் விரும்பல. சந்தர்ப்பம் கிடைக்கிறப்பவெல்லாம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திட்டு தான் இருக்காங்க. அல்ரெடி தனியாட்சி உரிமை இருக்கிற அந்த மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்த்து குடுக்கிறது ஒண்ணும் பெரிய நிர்வாக வித்தியாசத்தை ஏற்படுத்திர போறதில்ல. அப்புறம் ஏன் இந்த வறட்டு பிடிவாதம்?

எனக்கு ஒரு விஷயம் தான் புரியல... Patriotism நாட்டுப்பற்று அப்டீன்னா நாட்டுக்காக உயிர்துறக்குறது மட்டும் தானா? அதுவும் 1947ல இருந்தே தனி ஆட்சி உரிமை பெற்றுள்ள ஒரு மாநிலத்தை என்னோடது என்னோடதுன்னு புடிச்சு வச்சிட்டு இப்டி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்க் கொலை புரிந்து தான் நாம நம்ம நாட்டுப்பற்றை வெளிப்படுத்தணுமா? நாட்டோட மற்ற பகுதிகள்ள அடிப்படை வசதிகளே இல்லாம 85% பொது மக்களும் அவதிப்படுறப்போ உப்புச்சப்புக்கு பிரயோஜனமில்லாத ஒரு துண்டு நிலத்துக்காக ராணுவம் அமைச்சு செலவு பண்ணுறதும், உயிர்ப்பலி கொடுப்பதும் தேவை தானா?

நாட்டுப்பற்றுன்னா ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் நாட்டில் வாழ தேவையான அடிப்படை வசதிகள் அமைச்சு கொடுக்கிற சரியான அரசை தேர்ந்தெடுப்பதும், அந்த வசதிகளை அமைக்க தேவையான பொருளாதார வசதியை ஏற்படுத்த ஒவ்வொரு குடிமகளு(னு)ம் தவறாது நேர்மையாய் வரி செலுத்துவதின் மூலம் தன் பங்கு கடமையை சரிவர செய்வதும், அரசு தன் கடமைகளை சரிவர நிறைவேற்றுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதும், கடமைகளில் தவறும் போது எதிர்த்து கேள்வி கேட்பதும், சரியான மாற்று அரசை ஏற்படுத்த முனைவதும் தான்.

அப்ப நம்ம மண்ணை காப்பாத்த வேண்டாமான்னு கேப்பீக... கண்டிப்பா காப்பாத்தணும் தான்... ஆனா மண்ண விட முக்கியம் மனுச உயிருங்கிறத மனசுல வைக்கணும்னு சொல்றேன். Contemporary eraவில எந்த நாடும் இன்னொரு நாட்டுக்கு மேல காரணம் இல்லாம தேவை இல்லாம படையெடுக்க மாட்டான். ஏன்னா எல்லாவனுக்கும் தெரியும் போர்னு வந்துட்டா இழப்பு தன்னோட பக்கத்துலயும் படு பயங்கரமா இருக்கும்னு. அப்போ இங்க primary need என்ன? நான் மேல சொன்ன விஷயங்கள சரிவர செயல்படுத்த முனையும் ஒரு சூழலை உருவாக்கணும். அதுக்கு மக்கள் வரலாறு நிகழ்வுகளை திரும்பி பார்த்து காரண காரியங்களை சரியா அலசி ஆராய்ஞ்சி பேசணும், எழுதணும், அதுக்காக போராடணும்.

இது எதுவுமே பண்ணமாட்டோம் நாம. யாரு செத்தா நமக்கென்னா, பத்து ரூவா கிட்டட்டாம்னு தான் இருப்போம். ஆனா தேவையற்ற மனித உயிர் பலிகளை கண்டு பயந்து போர் வேண்டாம்னு பதறும் பொது மக்களை தேச துரோகிகள்னு முத்திரை குத்தி சமூக வலைத்தளங்கள்ளயும் தெருக்கள்ள போஸ்டர் அடிச்சு ஒட்டியும் கெக்கலிப்போம்... ஏன்னா நாங்க தான் தேசப்பற்றாளர்கள்... ஜெய்ஹிந்த்! மோடி வாழ்க!! பாரத் மாதா கீ ஜே!!!

அன்பில்,
லுலு தேவ ஜம்லா
17/02/2019
Sunday
11:59 am

https://www.facebook.com/100010190820245/posts/824408701242150/

No comments:

Post a Comment