Saturday, February 23, 2019

காதலே, காதலே 16 to 20 - Hema Shankar

காதலே காதலே
Hema Shankar

---

காதலே காதலே பகுதி- 16🖤🖤🖤

Place ஆனதும் எங்களுக்கு இருந்த சந்தோசத்த சொல்ல வார்த்தையே இல்ல, ரெண்டு பேரும் கை குடுத்துகுட்டோம், அடுத்த நாளே ஊருக்கு கேளம்பிட்டோம்.எப்போவும் போல என் ஊர் பஸ் கிட்ட அவன் வெயிட் பண்ணிட்டு இருந்தான், அவன பாத்ததும் அழுகையா வந்துடுச்சு, இருக்கமா அவன கட்டி பிடிச்சிக்கிட்டேன். ஹே எல்லாரும் பாக்கறாங்கடி, பஸ் ஏராளாம் வானு அவன் சொல்லியும், பாத்த பாக்கடும் போடானு சொன்னேன். அதே மாதிரி 4 மணி நேரம் பஸ் டிராவல் எப்டி போச்சுனே தெரியல, இறங்கறதுக்கு முன்னாடி அவன் குடுத்த முத்தத்தோட ஈரம் கூட காயாம கண்லாம் கலங்கி தான் இறங்கனேன். எப்போ ஊர் வந்தாலும்,இவ்ளோ சீக்கரம் வந்துட்டோமேனு தான் இருக்கும்.நீ ஏன் ஊருக்கே வந்துடேன்னு சொல்லுவேன், அவனும் இன்னும் கொஞ்ச நாள் தான், அப்பறம் நீயே உங்க வீட்டுக்கு போலாம்னு சொன்னாலும் நா உன்ன அனுப்ப மாட்டேன், என் கூட தான்னு என்ன சமாதானம் பண்ணுவான்♥️

வீட்ல எல்லாருக்கும் அவ்ளோ சந்தோசம், அம்மா ஜாடமாடையா அவன் என்ன ஆனான்னு கேட்டாங்க. அவனும் place ஆகிட்டான், ஒரே கம்பெனி தான் மானு சொன்னதும் அவங்களுக்கு பக்குனு தான் இருந்துச்சு. அப்போல இருந்து கொஞ்சம் நான் நினைக்கறத பயம் இல்லாம பேச ஆரம்பிச்சேன்.காலேஜ் முடிஞ்சதும் மெரேஞ் தான்னு எனக்கு நல்லா தெரியும், அதனால நான் நினைகறத பேசனா மட்டும் தான் நா தப்பிக்க முடியும்னு, இது தான் வேணும், இது வேணாம்னு தெளிவா அடம்பிடிக்க ஆரம்பிச்சேன்.வீட்ல என்ன function நடந்தாலும் அவாய்ட் பண்ணேன், ஏன்னா அங்க வர சொந்தகாரங்க சும்மா இல்லாம, எப்போ கல்யாணம், எங்களுக்கு தெரிஞ்ச பைய்யன் இருக்கான்னு free marriage service பாத்ததால, எதுக்கும் தல காட்றதே இல்ல.

காலேஜ் போறதே அவன் வருவான், அவன பாக்கலாம், அவன் கூட பேசலாம்னு தான். Final year project, paper presentation இப்டி கொஞ்சம் அளஞ்சிட்டு இருந்தோம்,ஆனா தினமும் பாத்துடுவோம்.காலேஜ் முடிச்சிட்டு போனா கம்பெனி கால் லெட்டர் குடுக்கற வரைக்கும் வீட்ல தான் இருக்கனும், அப்போலாம் பாக்கவே முடியாதுனு ரொம்ப கஷ்ட பட்டுட்டு இருந்தோம். எப்டி பாக்காம இருக்கறது, ச்ச நா உன்னோட மாமா பைய்யனா பொறந்துற்க கூடாதானு கேப்பான்😍😂 நாங்க எதிர்பாத்த, பயந்த அந்த நாளும் வந்துச்சு, பிராஜெக்ட் presentation viva முடிஞ்சது, எங்க வீட்ல hostel vacate பண்ண கார் எடுத்துட்டு வந்துற்தாங்க, பசங்க எல்லாரும் hostel கிட்ட வந்துற்தாங்க,friends விட்டு போறோம்னு அவ்ளோ அழுக, இவன விட்டு போறோம்னு இன்னும் அழுக.

Luggage எடுத்து வெக்கும் போது போன் பண்ணான், auditorium கிட்ட இருக்கேன் ஒரு அஞ்சி நிமிசம் வா உன்ன பாக்கனும்னு சொன்னான். அப்பாகிட்ட பிரண்ட் பாத்துட்டு வந்துட்றேன்னு சொல்லிட்டு ஓடி போய் பாத்தேன்.அவன் நின்னிட்டு இருந்தான், தூரத்துல இருந்து பாத்ததுமே அழுதுட்டே தான் போனேன், அவன் கிட்ட போனதும் என்ன நா கெளம்பட்டா, என்ன மறந்துடாத, உன்ன பாக்காம எப்டி இருக்க போறேன்னு தெரிலனு சொல்லிட்டே இருக்கும் போதே hug பண்ணிக்கிட்டான்.அழாத,உன்ன பாக்காமலாம் இருக்க முடியாது, நா உங்க ஊருக்கு அடிக்கடி வருவேன்,உன்ன பாக்க மட்டும் தான்,தயவு செஞ்சு அழாதனு அவன் தேம்பி, தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான். அந்த auditorium முன்னாடி தான் first day அவன பாத்தேன்,அங்க தான் symposium நடந்தது ,அங்க தான் அவன் என்ன பாத்து முதமுதல்ல கண் அடிச்சான், அங்க தான் நா orchestra la பாடினேன், அங்க தான் எல்லா function நடக்கும் போதும் நா sareeல வரும் போது செமயா இருக்கடினு சொல்லிற்கான், அதே இடத்துல இப்போ காலேஜ் முடிஞ்சி final gud bye சொல்லும் போது உயிரே போய்டுச்சு ♥️😪

https://m.facebook.com/story.php?story_fbid=2089558371080670&id=100000795812456

---

காதலே காதலே பகுதி -17 🖤🖤🖤

மனசு முழுக்க அவனும், காலேஜ்ஜும் தான்.வீட்டுக்கு போனதும் முதல் வேலையா காலேஜ் slam book எடுத்து பத்தரமா ஒலிச்சு வெச்சேன்.Slam book fulla அவன் பேர் தான் எழுதிர்தாங்க, வீட்ல யாராவது பாத்துடுவாங்கனு ரொம்ப கவனமா இருந்தேன், அவன் குடுத்த gifts, card, photos எல்லாம் அவன் கிட்டையே குடுத்துட்டேன். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ என்ன பாக்க என் ஊருக்கு வருவான், என் best friend என்ன அவ வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி எங்க வீட்ல permission வாங்கி கூட்டிட்டு போவா, கிரிவலம் ரோட் தான் எங்க மீட்டிங் பாய்ண்ட். அவன பாத்த சந்தோசத்துல கண்ல இருந்து தண்ணியா கொட்டும். நீ அழறத பாக்கவா நா இவ்ளோ தூரம் வந்தேன், அழாதடி,சிரினு சொல்வான். அவன் கூட இருக்க அந்த ஒரு மணி நேரம் அவ்ளோ சந்தோசமா இருக்கும்.

அவன் கெளம்பட்டா, உனக்கும் லேட் ஆகுது, வீட்ல போன் பண்ண போறாங்கனு சொல்லும் போதே அழ ஆரம்பிச்சுடுவேன்,அவன் கைய விடவே மனசு வராது.இப்டியே போயிட்டு இருந்துச்சு ஒரு ரெண்டு மாசம்.ஒரு நாள் சண்டே, மாமா, அப்பா,எல்லாரும் வீட்ல cards விளையாடிட்டு இருந்தாங்க. அப்போ points எழுத paper வேணும்னு என் புக் rackல இருந்து ஒரு நோட் எடுத்தாங்க, என் நேரம் அந்த நோட் முழுக்க லவ் யூ ஹேமா,Hema weds Sankar, எங்க ரெண்டு பேர் சைன், இப்டி எல்லாம் எழுதி அவன் குடுத்த நோட்.அது எப்பவோ எழுதி தந்தது, அத நா கவனிக்காம அப்டியே என் புக் கூட வெச்சிற்கேன் போல. அத எங்க மாமா பாத்துட்டாரு, பாத்ததும் என்ன அடிக்க வந்துட்டாரு, எங்க அப்பா இருந்ததால, யேய் ஏண்டா என் பொண்ணு மேல கை வெக்கறனு கத்தனாரு.

இங்க பாருங்க இவ பண்ணிட்டு இருக்க காரியத்தனு நோட் காமிச்சாரு. எங்க அப்பா அத பாத்துட்டு இது என்னடா குழந்தனு கேட்டாரு, அப்போ வந்த எங்க அம்மா என்னாச்சுனு அத வாங்கி பாத்துட்டு என்ன பேசவே விடல, பலார்னு ஒன்னு கண்ணத்துல விட்டாங்க, என்ன நல்லா போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க, எங்க அப்பாக்கு ஒன்னும் புரியாம அப்டியே உக்காந்துட்டாரு.அம்மா, மாமாங்க எல்லாரும் அவ்ளோ திட்டு. ஏதாச்சும் பேசுங்க, இவள என்ன பண்ணலாம், இவ என் வயித்துல பொறந்தவலானு எனக்கு தெரியல,நா முதல்ல இருந்தே உங்ககிட்ட சொல்லிட்டு தான இருக்கேன், இவளுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் தரீங்கனு, இப்போ பாருங்க, நம்மல இவ குழில படுக்க வெக்காம விட மாட்டா போல, பொண்ணே இல்லாட்டி போயிட்டு போது, இந்த சனியன கொண்ணு கூட போடுங்க,ஊர்ல தெரிஞ்சா எல்லாரும் காரி துப்புவாங்க, ஒரு புள்ளைய ஒழுங்கா வளக்க துப்பு இல்லைனு அசிங்கமா பேசுவாங்கனு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டாங்க.
அப்பா என் அம்மா, மாமாவ வெளிய போக சொன்னாரு, நா பாத்துக்குறேன் வெளிய போங்கனு சொன்னாரு.

அவங்கள அனுப்பிட்டு என்ன கூப்டாரு, என்ன இதெல்லாம், ஆமானு அப்பா தலையில கல்ல போட்றாத, அப்பா உயிரையே விட்றுவேன்னு அழுதுட்டே கேக்கும் போது ஆமானும் சொல்ல முடியல, இல்லனும் சொல்ல முடியல. எதுவா இருந்தாலும் சொல்லுனு என்கிட்ட அவர் அழறத பாக்கவே முடியல. இல்ல டாடி, நா யாரேயும் லவ் பண்ல, காலேஜ் second yearல பேசிட்டு இருந்தோம் அப்பறம் எங்களுக்கு செட் ஆகலனு பிரிஞ்சிட்டோம்னு சொன்னேன். உண்மைய தான சொல்றனு திரும்பவும் கேட்டாரு, ஆம இப்போலாம் பேசறதே இல்லனு சொன்னேன்.சரி யார்கிட்டையும் நீ பதில் சொல்ல தேவையில்ல, நா பாத்துகுறேன்னு சொல்லிட்டு போயிட்டாரு.அம்மாகிட்டையும் , மாமாகிட்டையும் அத பத்தி என் கிட்ட இனிமே கேக்கவே கூடாதுனு சொல்லிட்டாரு. அத சொல்லிட்டு அன்னிக்கு நைட் முழுக்க நா பெட்சீட் குள்ள எப்டி அழுதேன்னு நினைச்சா இப்ப கூட பதறுது. ஆனா அப்போதைக்கு அவங்கள சமாளிக்க எனக்க வேற வழி தெரியல. 😪அடுத்த ரெண்டு நாள்ள எனக்கு பெரிய ஷாக் வந்துச்சு.தஞ்சாவூர்ல இருந்து பொண்ணு பாக்க வராங்க, பைய்யன் டாக்டர், நல்ல குடும்பம், PG பண்ணிட்டு இருக்காருனு சொன்னாங்க😥

https://m.facebook.com/story.php?story_fbid=2091155434254297&id=100000795812456

---

காதலே காதலே பகுதி - 18 🖤🖤🖤

பொண்ணு பாக்க வராங்கனு சொன்ன உடனே கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு. அப்பாகிட்ட பேச ஆரம்பிச்சேன், over react பண்ணிக்க கூடாது, ரொம்ப சண்ட போடக்கூடாதுனு முடிவுல தான் பேச start பண்ணேன். எனக்கு என்ன வயசாச்சுனு இப்போவே கல்யாணம் பத்திலாம் பேசறீங்க, நா கொஞ்ச நாள் வேலைக்கு போகனும், அப்பறம் யோசிக்கறேன் இத பத்திலாம்னு சொன்னேன்.நீ வேலைக்கு போக வேணாம்னு யாரு சொன்னது, கல்யாணம் பண்ணிட்டு வேலைக்கு போறவங்க இருக்காங்கலே, முதல்ல வந்து பாக்கறதுக்கு முன்னாடியே தடங்கள் பண்ணாத, அவங்க வந்து பாக்கட்டும், அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்னு சொன்ன உடனே என்ன சொல்றதுனு தெரியல.எனக்கு இப்போ கல்யாணமே வேணாம், எனக்கு இந்த டாக்டர்லாம் செட் ஆகாதுனு சொன்னேன். ஏன் டாக்டர் பைய்யனுக்கு என்ன கொறச்சல்,தஞ்சாவூர்லையே இருக்கலாம், எந்த கொறையும் இல்லாம பாத்துப்பாங்க, தாத்தா பாத்த சரியாதான் இருக்கும், நல்ல குடும்பம், எந்த பிக்கல் பிடுங்களும் உனக்கு இல்லனு சொன்னாங்க.

தஞ்சாவூர்ல இருக்க போரேன்னா நா எப்டி வேலைக்கு போவேன்,கம்பெனிலாம் சிட்டில தான் இருக்கு, எனக்கு டாக்டர்லாம் செட் ஆகாது,என்ன கொஞ்ச நாளைக்கு தொல்ல பண்ணாதிங்க, என் friendsலாம் higher studiesகு போறாங்க, நீங்க இப்போவே கல்யாணம் பத்தி பேசறீங்க,எனக்கு இது பிடிக்கவே இல்ல, யாரச்சும் வந்தா எல்லார் முன்னாடியும் எனக்கு பிடிக்கலனு சொல்லிடுவேன்னு சொன்னேன். அவ அப்டி தான் சொல்வா, அவளுக்கு என்ன தெரியும் சின்ன பொண்ணுனு சொல்லும் போது ரொம்ப கோவம் வந்துடுச்சு. இது என்னோட life,நீங்க யாரும் என் வாழ்க்கைய முடிவு பண்ணாதீங்க, எனக்கு என்ன பண்ணனும், எப்போ கல்யாணம் பண்ணனும்னு தெரியும், எனக்கு புடிக்காதத பண்ணனும் நினச்ச அவ்ளோ தான்னு சொன்னேன். அவ்ளோ நேரம் கேட்ட எங்க அப்பா ‘என்ன தான் சொல்ல வர, நீ பேசறதுலாம் சரியே இல்லையே, மனசுல எதையோ வெச்சிட்டு பேசறா மாதிரி இருக்கு, வேலைக்கு தான் போக போறனா அதுக்கு ஏத்தா மாதிரி பாக்கலாம், உன் இஷ்டதுக்குலாம் இருக்கனும்னு நினைக்காத,சொல்லு என்ன நினைச்சிட்டு இருக்கனு’ கேட்டாரு.

நான் ஒன்னும் நினைக்கல, இப்போ கல்யாணத்த பத்தி பேசாதீங்க, யாரா இருந்தாலும் எனக்கு இப்போ பண்ணிக்க தோணல, எனக்கு மினிமம் 2 வருஷம் டைம் வேணும் அது வரைக்கும் என்ன தொந்தரவு பண்ணாதிங்கனு சொன்னேன். ரெண்டு வருஷம் வேல தான் பாக்க போறனா, சிட்டில இருக்க மாதிரி பாக்கலாமே, உன் வயசுல சொந்தக்கார பொண்ணுகளுக்கு கல்யாணம் ஆகி நல்லா தான இருக்காங்க, நாங்க அப்டியா உன் வாழ்க்கைய கெடுத்துடுவோம், சின்ன வயசுல இருந்து உன் இஷ்டபடி தான விட்டுற்கோம், இந்த ஒரு விசயத்துல நாங்க சொல்றத கேலுமானு திரும்பவும் கன்வின்ஸ் பண்ணாங்க.இவங்க கிட்ட எத சொல்லி சமாலிக்கனும்னு தெரியாம நா higher studies பண்ண போறேன், கல்யாணத்துக்கு அப்பறம் படிக்கறது ரொம்ப கஷ்டம், break எடுத்துட்டு படிச்சாலும் ஒரு continuity இருக்காதுனு சொன்னேன். என்ன திடீர்னு படிக்கனும்னு சொல்ற உனக்கு அப்டிலாம் எந்த யோசனையும் இல்லையேனு கேட்டாங்க.

ஆமா, அப்போ குழப்பமா இருந்துச்சு, ஆனா இப்போ தெளிவா இருக்கேன், ஒரு 2 வருஷம் படிக்கறேன், at a stretch PG முடிச்சிட்டா எனக்கு ஈசியா இருக்கும்,அப்பறம் என் career எப்டி இருக்கனனும்னு நா பாத்துக்கறேன், 2 வருஷம் என்கிட்ட இந்த கல்யாண பேச்ச எடுக்காதீங்க, நா யாரையும் லவ் பண்ல, எனக்கு கொஞ்சம் டைம் தாங்க, நானே mentally prepare ஆகிக்குறேன்னு எங்க அப்பாகிட்ட சொன்னேன்.அவரும் சரி நீ இவ்ளோ கேக்கறதுனால சரினு சொல்றேன், ஆனா படிப்புல மட்டும் தான் கவனம் இருக்கனும், அப்பா நம்பிக்கைய கெடுத்துட கூடாது, நா நாளைக்கு அவங்கள வர வேணாம்னு தாத்தா கிட்ட சொல்லிட்றேன்னு சொன்னாரு♥️ அன்னிக்கு சாயங்காலமே PG entranceகு apply பண்ணேன்.இவன் கிட்ட போன் பண்ணி அடுத்த நாள் நடந்த எல்லாத்தையும் சொன்னேன். அடிப்பாவி, இப்டி ஒரே நைட்ல மாறிட்டியேனு சிரிச்சான். எல்லாம் உன்ன லவ் பண்ண நேரம் இன்னும் ரெண்டு வருஷம் வேற படிச்சி தொலைய வேண்டி இருக்கு, அதுக்குள்ள ஓரளவுக்கு settle ஆகு, இல்ல எங்க அப்பா பாக்கற பைய்யன கல்யாணம் பண்ணிட்டு போயிடுவேன்னு சொன்னனேன். எங்க ரெண்டு பேருக்கு நடக்கறத நெனச்சி கடுப்பு தான வரனும், ஆனா அன்னைக்கு போன்ல அப்டி சிரிச்சோம், 2 வருஷத்துக்கு சமாளிச்சிடலாம்னு😍♥️♥️

https://m.facebook.com/story.php?story_fbid=2092340700802437&id=100000795812456

---

காதலே காதலே பகுதி- 19🖤🖤🖤

PG entrance எழுதி counseling அட்டண்ட் பண்ண சென்னை முந்தின நாளே வந்தோம், அவன் கிட்ட பேச முடியல, மெசேஜ் மட்டும் அனுப்பனான், தப்பி தவிரி கூட சென்னைய தவிர எங்கையும் காலேஜ் எடுக்காதனு,என்னையும் கம்பெனி கூப்டுட்டா அப்பறம் பாக்கவே முடியாது, சென்னைல இருந்தா மட்டும் எடுனு சொன்னான். அடுத்த நாள் நான் எதிர்ப்பார்த்த course CEGல fill ஆகிடுச்சு, கோயம்பத்தூர் GCT, PSG,மத்த காலேஜ்லாம் இருந்துச்சு, எங்க வீட்ல கோவைலாம் எடுக்க மாட்டேன், ரெண்டு பஸ் மாறனும்,சென்னைலையே நல்ல காலேஜ் எடுக்கறேன்னு உள்ள போயிட்டேன்.அங்க நெறைய ஆப்சன்ஸ் சொல்லியும் சென்னை காலேஜ் தான் வேணும்னு ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நான் எதிர்ப்பார்த்த course கடைச்சதால எடுத்துட்டேன், இதுல என்ன இன்னொரு பியூட்டினா, அந்த காலேஜ் அவனோட வீட்டுக்கு மிக அருகில் இருந்துச்சு😂 ஆனா அந்த காலேஜ் ரொம்ப strict அப்டினு சொன்னாங்க, பரவால்ல கழுத இருந்துட்டு போகுது சமாளிச்சிக்கலாம்னு எடுத்துட்டேன். வீட்லையும் காலேஜ் ரொம்ப strict nu எல்லாரும் சொன்னதும் கன்வின்ஸ் ஆகிட்டாங்க. 🤭

சென்னைக்கு போக போறேனு அவ்ளோ சந்தோசம், வீட்ல வெளிய காட்டிக்கல. அப்போ தான் எனக்கு பெரிய ஷாக் காத்துட்டு இருந்துச்சு,காலேஜ்ல போன் யூஸ் பண்ணக்கூடாது, outing போக parent sign பண்ண லெட்டர் குடுக்கனும், ஊருக்கு போக parent வரனும்,இல்ல guardian வரனும்னு இப்டி list ஏறிட்டே போச்சு, எனக்கு பக்குனு இருந்துச்சு. அப்பாக்கிட்ட இந்த காலேஜ் வேணாம் டாடி, fees refund பண்ணுவாங்களானு கேளுங்க, என்னால hostelல இருக்க முடியாது, ஜெயில் மாதிரி இவ்ளோ ரூல்ஸ்னு சொன்னதுக்கு, எங்க அம்மா பரவால்ல PGna சும்மாவ, உனக்கு எப்போ தான் பொருப்பு வரது,ஹாஸ்ட்டல்ல தான் காயின் போன் இருக்குல்ல, அதுல இருந்து எங்களுக்கு கால் பண்ணு, ஊருக்கு வரனும்னா போன் பண்ணு டாடி கூட்டிட்டு வருவாங்கனு சொன்னாங்க.Hostel போறதுக்கு முன்னாடி எல்லா friends கிட்டயும் கால் பண்ணி ஒப்பாரி வெச்சேன், கடைசியா உங்ககிட்ட பேசிக்கிறேன்னு சொல்லி அவ்ளோ பொலம்பல், அவன் கிட்ட இன்னும் அழுதேன், உன்னால தான் இங்க எடுத்தேன், உன்னால தான் எல்லாமேனு அவன் கூட செம சண்ட.

முதல் நாள் hostel போயிட்டேன், என்ன விட்டுட்டு சீக்கரம் எங்க அப்பா, அம்மா கெளம்பிட்டாங்க, ரூம்ல நா மட்டும் இருந்தேன், சரி காயின் போன்ல அவனுக்கு கால் பண்ணேன், வார்டன் நான் போன்ல அழறத பாத்து என்னமா வீட்டுக்கு பேசறையா, அழாதனு கிட்ட வந்தாங்க, என் கிட்ட போன் வாங்கிட்டாங்க, உங்க பொண்ண பத்திரமா பாத்துக்கறோம் கவலப்படாதீங்கனு இவன்கிட்ட சொன்னாங்க, அவனும் ஓகே மேடம்,நீங்க பாத்துப்பீங்கனு தெரியும் மேடம்னு சொன்னதும் என் கிட்ட அழாம போன் பேசுனு சொல்லிட்டு போயிட்டாங்க, எனக்கும் அவனுக்கும் சிரிப்பு தாங்கல😄 யாருமே இல்லாததால, அப்டியே போய் ரூம்ல தூங்கிட்டேன். கண் முழிச்சு பாத்தா, ரூம்ல எல்லாரும் வந்துற்தாங்க, எனக்கு கண்ண கட்டி காட்ல விட்டா மாதிரி இருந்துச்சு, hi nu சின்னதா சிரிச்சுட்டு பெட்சீட் போத்திட்டு திரும்பவும் படுத்துட்டேன், நைட் டின்னர் அப்போ எழுப்பி வாங்க சாப்ட போலாம்னு கூப்டாங்க,Mess hallகு போற வழில தான் intro ஆனோம்,ரூம்ல எல்லாரும் என் dept தான் , எல்லாரும் நாகர்கோவில்ல இருந்து வந்துற்காங்க.எனக்கு அவங்க பேசறதே வித்யாசமா இருந்துச்சு, நீங்க மலையாளம் பேசறீங்கலானு கேட்டேன், இல்லடே இது எங்க சைட் தமிழ்னு சொன்னாங்க.

சாப்ட்டு வந்ததும் திரும்பவும் காயின் போன் கிட்ட போய் கியூல நின்னுட்டு இருந்தேன், கூட என் ரூம் மெட் வந்தா, அவ போன் பேசறத பாத்ததும் அவ கமிடட், அவ ஆளுகிட்ட தான் பேசறானு தெரிஞ்சிகிட்டேன், போன் பேசிட்டு அவகிட்ட கேட்டேன், நீ கமிடட் தானனு, அவளுக்கு என்ன சொல்றதுனு தெரியாம முழிச்சா, நா உடனே நா கமிடட், என் ஆளு சென்னை தான்னு என்னோட வரலாறு எல்லாத்தையும் சொல்லிட்டேன், அவளும் என் கிட்ட கமிடட்னு சொல்லி கதைய சொன்னா, ரெண்டு பேரும் ஒரு மணி நேரம் stepsல உக்காந்துட்டு பேசிட்டு இருந்தோம்.எனக்கும் அவளுக்கு அவ்ளோ match ஆச்சு,அடுத்த நாள் class போனோம்.Govt collegeல படிச்சிட்டு, சென்னைல private collegeல ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு, என்னடா இப்டி class எடுத்து spoonfeed பண்றாங்கனு இருந்துச்சு, இப்டியே காயின் போன், class, Mess hall, room, nagercoil friends nu ஒரு ரெண்டு வாரம் போச்சு, அந்த ரெண்டு வாரத்துல இவங்க கூட ரொம்ப flexible ஆகிட்டேன்.ரூம்ல எப்டி மொமைல் யூஸ் பண்லாம்னு plan பண்ணிட்டு ஊருக்கு அப்பா கூட கேளம்பனேன், அவன பஸ் stopல தூரத்துல பாத்தேன்,அப்பாக்கிட்ட rest room போறேனு சொல்லிட்டு அவன பாத்தேன், அவ்ளோ அழுக, கைய விடவே மனசு இல்லாம விட்டு போனேன்♥️

https://m.facebook.com/story.php?story_fbid=2093913793978461&id=100000795812456

---

காதலே காதலே பகுதி - 20 🖤🖤🖤

வீட்ல இருந்து திரும்ப வரும் போது அம்மா கிட்ட சண்ட போட்டு மொபைல் எடுத்துட்டு வந்துட்டேன்.காலேஜ்ல dayscholar பிரண்ட் ஒருத்தி கிட்ட கேட்டு extra mobile battery வாங்கனேன்,அப்பா கிட்ட outing போகாம வீக்கெண்ட் ரொம்ப மொக்கையா இருக்குனு சொல்லி ஒரு 30 காலி A4 sheetல சைன் வாங்கிட்டேன், அப்பா அத பாத்து ஏம்மா குழந்த என் சொத்த எழுதி வாங்கற மாதிரி இப்டி வெத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கறியேனு என்ன கேட்டாரு🤭 ஒரு வழியா போனுக்கும், வெளிய போகவும் வழி பண்ணிக்கிட்டேன்னு நிம்மதியா இருந்துச்சு.காலேஜ் ஒரு பக்கம் ரொம்ப சீரியஸ்சா தான் போயிட்டிருந்துச்சு, முதல் வாரம் outing கேட்டுட்டு போனேன் அவன பாக்க, அம்பத்தூர் பஸ் சாட்ப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தான், அவன பாத்ததும் சகஜமா போய் கைய புடிச்சிக்கிட்டேன், கூட வந்த பிரண்ட் ஒருத்தி அங்க காலேஜ்ல நிறைய spy சுத்திட்டு இருப்பாங்கனு சொன்னா, எரிச்சலா வந்துச்சு, பஸ்ல ஏறிட்டோம்.அண்ணா நகர்ல இருக்க
அண்ணா டவர் பார்க்கு போனோம்.

முதல் முதல்ல சென்னைல போன பார்க் அது தான், எங்களுக்குனு ஒரு பெஞ்ச் தேடி உக்காந்துட்டோம், அங்க அவன பாத்ததும் இன்னும் எத்தன நாளைக்கு தான் நம்ம இப்டியே இருக்கறது, கடுப்பா இருக்கு,உன்ன காலேஜ்ல தினமும் பாத்துட்டு இருந்தேன், ஆனா இங்க class போகவே எறிச்சலா இருக்குனு சொன்னேன்,அவனும் என் கைய இருக்க புடிச்சிட்டு, கவல படாதா, இன்னும் 2 வருஷம் தான் நீ கொஞ்சம் பொறுத்துக்கோ, நம்ம லவ்காக உன் career, ambition எல்லாத்தையும் விட்டுற்கேனு எனக்கு தெரியும், எனக்காக PG முடிச்சுடு, அதுக்குல்ல பாத்துக்கலாம், கம்பெனி கூப்டுட்டா நான் கொஞ்சம் stable அகிடுவேன்னு சொன்னான். காலைல பேச ஆரம்பிச்ச நாங்க,அண்ணா நகர் முழுக்க நடந்தே சுத்திற்போம்,ஷார் ஆட்டோ,MTC bus,இப்டி அவன் கூட ஜென நெருசல்ல பக்கத்துல உக்காந்துட்டு, கை புடிச்சி நின்னுட்டு போறதே ஒரு தனி feel😍❤️ Evening hostel போக புடிக்கவே, பிடிக்காது,வேற வழியே இல்லையானு ஏக்கமா அவன் கைய விட்டுட்டு போவேன்😒

இப்டியே போயிட்டு இருந்துச்சு அந்த வாழ்க்கை, அப்போ தான் ஒரு நாள் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான். ரொம்ப சின்ன வீடு, வீட்ல அம்மா இல்லாததால அவ்ளோ கசமுசானு தான் வெச்சிற்தாங்க.அவங்க அப்பா மட்டும் அன்னிக்கு வீட்ல இருந்தாங்க,அவர்கிட்ட காலேஜ் பிரண்ட்னு என்ன அறிமுக படுத்தனான், அவரும் ரொம்ப அலட்டிக்கல, ஓ அப்டியா, எந்த ஊரு நீனு கேட்டாரு, நானும் சொன்னேன்,காபி குடிப்பியா, டீ போடவானு கேட்டாரு, எதுவும் வேணாம் அங்கில்னு சொன்னேன், பரவால்ல சொல்லு என்ன குடிப்பனு கேட்டாரு, நா உடனே நானே போட்றேன்,காபி போடட்டானு கேட்டேன், அவரு டீ போட்றையா எல்லாரும் குடிக்கலாம்னு சொன்னாரு. நானும் சரி போட்றேன்னு போயிட்டேன், ஆனா எனக்கு டீ போட தெரியாது, முதல்முறையே சோதப்பிட்டியேனு என்ன நானே திட்டிட்டு இருந்தேன், அவன் வந்தான் அப்போ😍 என்ன பாத்தரத்த உரிட்டிட்டு இருக்க, கொஞ்சம் நகருடி டீ போடலாம்னு சொன்னான்😂

சாரி டா, எனக்கு டீ போட தெரியாது, கொசிக்காதனு சொன்னேன், உனக்கு தெரியாதுனு தான் எனக்கு தெரியுமேனு சொன்னான்🤭 ச்ச, நா சமைக்க டீ போடலாம் கத்துக்குறேன், இப்டி இருக்கனேனு சொன்னேன். நீ எதுக்கு அதல்லாம் இப்போ கத்துக்கனும், நான் தான் நல்லா சமைக்கரனே கல்யாணத்துக்கு அப்பறம் நானே சொல்லி தரேன், அப்ப கத்துக்கோ, இப்போ ஜாலியா இருடி, படிக்கற வேலைய மட்டும் பாருனு சொன்னான்😍 இல்ல இருந்தாலும்னு நா ஆரம்பிச்சதும், டக்குனு ஒரு கிஸ் குடுத்தான், வாய மூடு, இதுலாம் ஒரு பிரச்சனையே இல்ல, லவ் யூனு சொன்னான்♥️ டீ குடிச்சிட்டு அவங்க அப்பா நல்லார்க்கு, சங்கர் கூட நல்லா டீ போடுவான், சமைக்க கத்துக்கிட்டான், அவங்க அம்மா இல்லாததால அவன் தான் எல்லாமே பண்றான் இப்போனு சொன்னாரு.கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு,அவங்க வீட்டு மொட்டமாடிக்கு போயிட்டு அவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தோம், அவ்ளோ முத்தமும்❤️ அவங்க வீட்டு house owner பாட்டி மூணு தடவ மேல வந்து பாத்துட்டு போனாங்க😂 இப்டியே அவன் கூட போயிட்டு இருந்துச்சு.

சேலம் காலேஜ்ல Graduation day வந்துச்சு,எங்க வீட்ல ஒரு function இருந்ததால வரமுடியல, நானும் அவனும் தான் சென்னை டூ சேலம் போணோம்😍காலேஜ் திரும்ப போனதும், friends பாத்ததும் அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு, எங்க dept, canteen, hostel, இப்டி நானும் அவனும் மீட் பண்ற எல்லா எடத்துக்கும் திரும்ப போய் போட்டோ எடுத்துக்குட்டோம்❤️ கடைசியா நாங்க வாங்கன டிகிரியோடவும் போட்டோ எடுத்தோம்😍 ரெண்டு பேர் கிட்டையும் First Class with Distinctionல pass ஆனா Degree certificateடும், வேலையும் மட்டும் தான் எங்க காதலுக்கான , வாழ்க்கைக்கான ஒரே நம்பிக்கைய குடுத்துச்சு❤️ Yes v r officially engineers❤️

https://m.facebook.com/story.php?story_fbid=2095466670489840&id=100000795812456

---

No comments:

Post a Comment