Subha Ganeshan
2019-02-19
"Four Phases of Menstrual Cycle"
நான் பொதுவா யாரையும் பெருசா சைட் அடிக்க மாட்டேன். ஆனா திடீர்னு ஒரு நாள், எனக்கே என்னனு புரியாம, ரோட்டுல போற அத்தன பசங்களயும் கண்ணெடுக்காம பாத்துட்டே போவேன். பாக்குற எல்லாரும் அழகா வேற தெரிஞ்சு தொலைவாங்க. நல்லா சூப்பரா ஜாலியா இருக்கும் அந்த ஃபீலிங். ஆனா அது கொஞ்ச நாள் தான் அப்டி இருக்கும். அப்றம் மறுபடியும் பழைய நிலைமைக்கே போயி, பசங்கள பாக்கணும்னு கூடத் தோணவே தோணாது.
இது ஒரு பக்கம்னா, சுபா-ன்னாலே ஒரு சோம்பேறின்னு பேர் வாங்கி வைச்சிருக்குற நான்னு, சில சமயம் எங்க வீட்டுல இருக்குற எல்லாரையும் ஆச்சர்யப்படுத்துற மாதிரி, பாத்திரம் கழுவுறது, துணி தொவைக்குறது, மொட்டை மாடிய பெருக்குறதுனு வீட்டுல இருக்குற அத்தன வேலையயும் இழுத்துப் போட்டு செய்வேன். "சும்மா எப்பப்பாரு படுக்கைலயே கெடைக்காம, எதாது ஒரு வேலையாச்சும் உற்படியா பண்ணு"ன்னு என்னைத் திட்டிட்டே இருக்குற எங்க அம்மாவே, "வேலை செஞ்சது போதும். மொதல்ல வந்து சாப்டுட்டுப் போ"ன்னு சொல்ற அளவுக்கு, பசியெல்லாம் மறந்து வெறித்தனமா வேலை பாப்பேன். அதுவும் சில காலம் தான். அப்றம் பழையபடியே வேதாளம் முருங்கமரம் ஏறிரும்.
இப்டியே வாழ்க்கை மாறி மாறிப் போய்ட்டிருக்கும் போது தான், ஒரு நாள் எதர்ச்சியா ஒரு TED Talk பாக்கும்போது, இந்த four phases of menstrual cycle பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். அதக் கேக்கும்போதே உண்மை மாதிரி தான் தோணிச்சு. இருந்தாலும் எந்தளவுக்கு உண்மைனு தெரிறதுக்காக, கடந்த எட்டு மாசமா என்னை நானே நுணுக்கமா கவனிச்சிட்டு வந்ததுல, மத்தவங்ககிட்ட இதப் பத்தி பகிர்ந்துக்குற அளவுக்கு அது உண்மை தான்னு நம்புறேன். எழுதவும் செய்யுறேன்.
மொதல்ல, Follicular Phase.
Follicleல இருந்து கருமுட்டை வளரக் கூடிய phase. பீரியட்ஸ் முடிஞ்ச நாள்லயிருந்து ஒரு ஏழு எட்டு நாளைக்கு இந்த phase இருக்கும். Day 4 to Day 12. இந்தச் சமயத்துல, பொண்ணுங்களுக்கு உலகத்துல இருக்குற அத்தன எனர்ஜியும் கெடச்ச மாதிரி இருக்குமாம். கவுண்டமணி ஸ்டைல்ல, 'அய்யோ இப்போ நான் எதையாவது செஞ்சாகணுமேடா'-ன்னு, நம்ம ஒரு energy bomb மாதிரி இருக்கக் கூடிய phase தான் இது. புதுசா எதாது கத்துக்கணும், புதுசா எதாது ப்ராஜக்ட் ஆரம்பிக்கணும்னா அதுக்கு இது தான் கரெக்ட்டான டைம். மைண்டு எல்லாத்தையும் பெருசா, big pictureல யோசிக்கும். வீட்டுலயோ, வேலைலயோ இல்ல பிசினஸ்லயோ எல்லாத்தயும் எல்லாக் கோணத்துலயும் யோசிச்சு பாத்து பிளான் பண்றதுக்கு ஏத்த phase. Energetic and Optimistic Phase.
ரெண்டாவது, Ovulation phase.
இது பத்தி நெறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கும். கருமுட்டை விந்தணுக்காகக் காத்திட்டிருக்குற மேட்டிங் phase. பொதுவா Day 12 to Day 16 வரைக்கும் இந்த phase இருக்கும். இந்த நேரத்துல, பொண்ணுங்க இயற்கையாவே ரொம்ப அழகா, attractiveவா ஆகிருவாங்களாம். அதுமட்டுமில்லாம, பேச்சு திறன் பயங்கரமா இருக்குமாம். எதிர்பாலினத்த ஈர்க்குறதுக்காக இருக்கலாம். யாரயாச்சும் எதுக்காச்சும் சம்மதம் சொல்ல வைக்கணும்னா இந்தச் சமயத்துல போய் பேசுனா கண்டிப்பா workout ஆகிரும். காதல் பத்தி வீட்டுல பேசலாம், மேனஜர்கிட்ட ப்ரோமோஷன் பத்தி பேசலாம், public speaking. இப்படி மத்தவங்கள தலை ஆட்ட வைக்கக் கூடிய காந்தக phase இது. Sighting and Enjoyment Phaseனு கூடச் சொல்லாம்.
மூணாவது, Luteal Phase.
Day 16 to Day 28 அதாவது பீரியட்ஸ்க்கு முன்னாடி வரைக்கும் இந்த phase தான். இது தான் இருக்குறதுலயே ரொம்ப நீளமான phase. எனர்ஜி கம்மியா இருக்குற phase வேற. பெரிய பெரிய வேலைகள்லாம் செய்யத் தோணாது. ஆனா இதோட சிறப்பம்சம் என்னனா, எது செஞ்சாலும் அதுலயிருக்குற நுணுக்கமான விஷயங்கள கூர்ந்து கவனிக்கக் கூடிய detail oriented phase. காசு, பணம், பைனான்ஸ் விஷயத்துல கெட்டிகாரியா இருக்கக் கூடிய phase. ஆஃபீஸ்ல ஒரு issue solve பண்றப்போ, சின்ன சின்ன detailsஸ நோட் பண்ணி, சுலபமா root cause கண்டுப்புடிக்கலாம். ரொம்ப Detailed-ஆ ஒரு கதை எழுதலாம். ஒரு படத்துல, ஒரு பாட்டுல வர்ற ரொம்பச் சின்னதான விஷங்கள கூர்ந்து கவனிச்சு ரசிக்கலாம். இல்ல திட்டலாம். மத்தவங்க சாதாரணமா பேசுறதுல ஒரு வார்த்தைய மட்டும் தனியா நோட் பண்ணி, அவங்கள பத்தி குறை சொல்லலாம். சண்டை போடலாம். இப்படிப் பல நிறை குறைகள் கலந்து, நுண்ணறிவு அதிகமா இருக்கக் கூடிய phase இது.
அதுமட்டுமில்லாம, நம்மள சுத்தி இருக்குற எடத்த ஒழுங்குப்படுத்த கூடிய organizing skillsசும் இந்தச் சமயத்துல அதிகமா இருக்குமாம் ஆஃபீஸ் லேப்டாப்ல இருக்குற files-அ ஒழுங்கா organize பண்ணி அந்தந்த folderல போடுறது, வீட்டு அலமாரிய அடுக்கி வைக்குறது, மொபைல்ல, பேஸ்புக்ல, blogலலாம் தேவையில்லாதலாம் தூக்கிட்டு, ஒழுங்கான முறைல வைக்குறது. இப்படி நமக்குத் தொடர்புடைய எல்லாத்துலயும் வேண்டாதத களையெடுத்துட்டு, வேண்டியத ஒழுங்குப்படுத்த கூடிய phase தான் இந்த Luteal phase.
நாலாவது, Menstrual Phase.
அதான் நம்ம, "வந்தாள் உதிர தேவியே"ன்னு பாடக் கூடிய phase. Day 1 to Day 4. பீரியட்ஸ் டைம். சிலருக்கு Luteal phaseலயிருந்த PMS தொந்தரவுலாம் காணாம போயி, மனசு தானா சாந்தமாகுற phase. இது ஓய்வுக்கான நேரம். இந்தச் சமயத்துல நமக்கு சுய பிரதிபலிப்பு எண்ணங்கள் அதிகமா இருக்குமாம். முன்னாடி நடந்தது எல்லாத்தையும் யோசிச்சு பாத்து, நம்மளோட நிறை குறைகள நாமே தெரிஞ்சிக்கக் கூடிய phase. டைரி எழுதுறது, அனுபவக் கட்டுரை எழுதுறதுனு self reflection தொடர்புடைய எல்லாமே நமக்குக் கொஞ்சம் சுலபமா செய்ய வரும். தனிமை விரும்பியா கூட சில சமயம் இருக்கத் தோணும். நம்ம நமக்குள்ள மட்டுமே பேசி, நம்மள பத்தியே நம்ம நல்லா தெரிஞ்சிக்கக் கூடிய phase தான் இந்த menstrual phase.
இங்க நான் 'தனிமை விரும்பி'ன்னு குறிப்பிட்டிருக்குறத வச்சிட்டு, "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. பாத்தீங்களா இதுக்காகத் தான் அப்பவே பொண்ணுங்கள வீட்டுக்கு வெளிய தனியா உக்காரச் சொல்லிருக்காங்க"ன்னு யாரும் கம்பு சுத்திட்டு வர வேண்டாம்.
எந்த அறைல, எந்த நேரத்துல, எந்த மாதிரி தான் தனிமையா இருக்கணும்னு, ஒருத்தங்க விரும்பி முடிவு பண்றது வேற.
இந்த எடத்துல, இந்த நேரத்துல, இந்த மாதிரி தான் நீ தனிமையா இருக்கணும்னு ஒருத்தங்கள தனிமைப்படுத்துறது வேற.
அறிவியல சுத்தி உங்க முன்னோர்கள் கட்டமைச்சிருக்குற மூடநம்பிக்கைனாலயே, அதுல இருந்த கொஞ்சனெஞ்ச அறிவியலும் செத்து சுண்ணாம்பாகி பல காலம் ஆச்சு. அதனால இனிமேலாச்சும், தனிமைய திணிக்காம, அவங்கவங்க விருப்பப்படி இருக்க விடுவோம்.
செரி நம்ம இப்போ, முன்னோர்கள ஒரு ஓரமா உக்காரச் சொல்லிட்டு, நம்மளோட topicக்கு வருவோம்.
பெண்களுக்குத் தான் இந்த 28 days cycle. ஆண்களுக்கு வெறும் 1 day cycle தான். எல்லா நாளும் ஒரே மாதிரி தான் இருக்கும் அவங்களுக்கு. ஆண்களோட மனநிலைக்கு மட்டுமே ஏத்த மாதிரி தான் எல்லா அலுவலகங்களுமே இயங்கிட்டு இருக்கு. பெண்களும் ஆண்கள் மாதிரியே எல்லா நாளும் ஒரே மாதிரி consistent-ஆ இருக்கணும்னு எதிர்ப்பாக்குது. இதனாலயே பல நாளு, அது luteal phaseனு தெரியாம, புது வேலைய கைல வச்சிட்டு, எனக்கு ஏன் எனர்ஜியே இல்ல. எனக்கு ஏன் வேலை செய்யவே புடிக்க மாட்டேங்கிது. எனக்கு ஏன் அறிவே இல்லன்னு கடுப்பாகி பொலம்பிட்டு இருந்துருக்கேன்.
அதனால அலுவலகத்துக்குப் போற பெண்கள், இப்படிப் பண்ணலாம். Follicular phaseல ஒரு புது வேலையப் பத்தி big pictureல யோசிச்சு பிளான் பண்ணிட்டு, Ovulation phaseல மத்தவங்ககிட்ட அதப் பத்தி பேசுறதுக்கு மீட்டிங் arrange பண்ணிட்டு, Luteal phaseல detail orientedட்டா செயல்பட்டு வேலைய முடிச்சிட்டு, Menstrual phaseல அதோட நிறை குறைகள் பத்தி self reflect பண்ணி பாக்கலாம். தவறுகளைச் சரி செய்யலாம்.
அலுவலக அமைப்ப பெண்களுக்கு ஏத்த மாதிரி நாலு பகுதியாவும் பிரிக்க முடியாது. ஏன்னா ஒவ்வொரு பொண்ணுக்கும் அது ஒவ்வொரு மாதிரியான phase-ஆ இருக்கும்.
ஆனா ஒண்ணு பண்ணலாம், பெண்களோட இந்த மாத சுழற்சியப் புரிஞ்சிக்குற மாதிரி, அவளுக்குக் குடுக்கப்பட்ட வேலைய அவ அவளோட இயல்பான நுண்ணறிவோட, நேர்த்தியோட, 'தி பெஸ்ட்'டா முடிச்சு குடுக்குறதுக்கு ஏத்த மாதிரியான சூழ்நிலையயும், அவளுக்குத் தேவையான நேரத்தையும் குடுக்கலாம். பெண்கள் தான் இத தைரியமா கேட்டு வாங்கணும்.
நம்மளோட இயல்புக்கு ஏத்த மாதிரி அந்தச் சூழ்நிலைய மாத்துனா மட்டும் தான், நம்மளால அதுல ரொம்ப நாள் survive பண்ண முடியும். சந்தோசமா வேலை செய்ய முடியும். இல்லனா பாதிலயே மன அழுத்தம்னு சொல்லிட்டு, மறுபடியும் வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கெடைக்க வேண்டிய தான். அதனால, masculine-ஆ இருக்குற அலுவலகச் சூழ்நிலைய பெண்களுக்கு ஏத்த மாதிரியும் கண்டிப்பா மாத்தியே ஆகணும்.
இந்த four phases of menstrual cycle பத்தி நீங்களும் கொஞ்சம் பகுத்தறிஞ்சு பாத்துட்டு, உங்களுக்கும் இது பொருந்துற மாதிரி இருந்துருச்சுனா, இதுல இருக்குற தீர்வ பின்பற்றுங்க. இல்லனாலும் no problem. இதுல இருக்குற எல்லாத்தையும் மறந்துட்டு, எப்போ எந்த மாதிரி வேலை செய்யணும்னு உங்களுக்கு ஆர்வமா இருக்கோ, அப்போ அந்த மாதிரி வேலைய பண்ணுங்க. அது கரெக்ட்டா தான் இருக்கும். Just go with the flow.
- க. சுபா -
#மகளிர்நலம் #WorkingWomenProblems #MenstrualCycle #FourPhases #DareToBeFeminine
No comments:
Post a Comment