காதலே காதலே
Hema Shakar
---
காதலே காதலே பகுதி - 6 🖤🖤🖤
ஒரு வழியா sem hols முடிஞ்சு second yrகு வந்துட்டோம், ஆனா இன்னமும் ரெண்டு பேரும் லவ் தான் பண்றோமானு ரெண்டு பேருக்கும் டவுட்.Proper proposal இல்லாம, என்ன ரிலேசன்சிப்னு தெரியாமையே போயிட்டு இருந்துச்சு.Exam results வந்துச்சு, ரெண்டு பேரும் all clear பண்ணோம்.என் birthday வந்துச்சு, நா அதுக்கு close friendsக்கு டிரீட் குடுத்தேன், அப்போ அவன் ஒரு gift தந்தான், ஒரு wedding couple doll. அத பாத்ததும் friends எல்லாரும் எதுக்கு இத குடுதுற்கனு அவன கலாய்க ஆரம்பிச்சுட்டாங்க. சும்மா தான் குடுத்தேன், நீங்க நினைக்கற மாதிரிலாம் இல்லனு சொல்லிட்டான். எனக்கு செம கோவம், ஆமானு சொல்லாம இல்லனு சொல்லிட்டான்னு.Hostelகு வந்து போன் பண்ணி கண்டபடி திட்டிட்டேன். ஒன்னும் இல்லாட்டி எதுக்கு இந்த gift குடித்து tempt பண்ற, உருகி, உருகி போன்ல பேசுவ,ஆனா எல்லார் முன்னாடியும் ஒன்னுமே இல்லாத மாதிரி சீன் போட்ற, இதெல்லாம் எனக்கு செட் ஆகாது, எனக்கு உன்ன மாதிரி act பண்ண தெரியாது, சும்மா time passku வேற யார் கூடையாவது கடல போடு,உன் giftட திரும்ப வாங்கிக்கோ, தயவு செஞ்சு இனி போன் பண்ணாதனு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்.
திரும்ப திரும்ப போன் பண்ணிட்டே இருந்தான், ஆனா எனக்கு பயங்கர கோவம், switch off பண்ணிட்டேன். Friendsகு போன் பண்ணான், அப்போவும் உனக்கு வேற வேல இல்லையா, போன் பண்ணாதனு சொன்னா புரியாதானு கட் பண்ணிட்டேன்.அடுத்த நாள் தான் Mobile switch on பண்ணேன். நிறைய sorry msg.Classகு போனதும் அவனோட deskல gift வெச்சிட்டு நா போயிட்டேன். Class முடிஞ்சதும் lunchல பேச வெயிட் பண்ணிட்டு இருந்தான், sorry எனக்கு கொஞ்சம் டைம் குடு, நா உன்ன disturb பண்றேன்னு தெரியும் ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும். உன்ன மாதிரி நினச்சத அப்டியே பேசற டைப் இல்ல நா, ரொம்ப யோசிப்பேன், நா உன்ன hurt பண்ணிட கூடாதுனு தான் டைம் கேக்கறேன், அது வரைக்கும் நீ பேச வேணாம் , நானும் உன்ன disturb பண்ண மாட்டேன்னு சொன்னான்.
Friends கிட்ட ரொம்ப கஷ்டமா இருக்குனு அழுதேன், எங்களோட close friends அவன்கிட்ட ஏன் நீ complicate பண்ற, நல்லா தான பேசிட்டு இருந்தீங்க, திடீர்னு இப்டி ஏன் பண்றனு கேக்க, அவன் இன்னும் கடுப்பா ஆகிட்டான். எனக்கும் advice பண்ணாங்க, அவன நீ ignore பண்ணு, short time தான் பேசிற்கீங்க, கோவத்துல எதுவும் பேசாதீங்கனு..Classல பாத்தாலும் பேசறது இல்ல, போன்லையும் msg/call இல்ல. இப்டியே ஒரு மாசம் போய்டுச்சு.Classல பாக்கும் போதெல்லாம், மகனே நீ வாடி, என் கிட்ட வரும் போது மிதிக்கிறேன்னு நினச்சிக்குவேன்.அப்போ தான் national symposium (Reboot) deptல நடந்துச்சு, second yr students paper present பண்ணுங்கனு சொன்னாங்க. நானும் என் friendடும் அதுக்கு name குடுத்து prepare பண்றோம்னு busy ஆகிட்டோம், Sep 11 அந்த symposium.
Sep I0 night தான் அதுக்கு ரொம்ப ஆர்வமா prepare பண்ணிட்டு இருந்தோம், அப்போ தான் போன் பண்ணான்.இவன் எதுக்குடி இப்போ call பண்றான்,சும்மாவே மணிக்கனக்கா பேசுவீங்க, இப்போ ஒரு மாசம் கழிச்சு போன் பண்றான்,நாளைக்கு presentation இருக்கு,தயவு செஞ்சு அப்புறம் பேசறேன்னு போன கட் பண்ணுனு என் friend சொல்லிட்டே இருக்கும் போதே call attend பண்ணிட்டேன்😂 Busya இருக்கியானு கேட்டான், ஆமா நாளைக்கு presentationகு prepare பண்றோம்னு சொன்னேன்.sorry, disturb பண்ணிட்டனா, அப்புறம் call பண்றேன்னு சொன்னான். உடனே பதறி போன நான், பரவாயில்ல சொல்லு நா என் part prepare பண்ணிட்டேன்னு சொன்னேன். Friend அங்க system முன்னாடி உக்காந்துட்டு இருகற்தையே மறந்துட்டேன்😄
பி.கு: நாளைக்கு தான் proposal scene 😍 என் friend எனக்காக system முன்னாடி எப்டி wait பண்றாலோ, அது மாதிரி நீங்களும் கொஞ்சம் பொறுமையோட wait பண்ணுங்க friends 🤭
https://m.facebook.com/story.php?story_fbid=2074357622600745&id=100000795812456
---
காதலே, காதலே பகுதி-7🖤🖤🖤
Proposal
அவன்: அப்பறம் எப்டி இருக்க, பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல
நான்: ஆமா இன்னியோட 35 நாள் ஆக போகுது. நா செமையா இருக்கேன்.நீ?
அ: உன் அளவுக்கு இல்லைனாலும், ஏதோ இருக்கேன்
நா: என்ன ஆச்சு, எதாவது problem மா?
அ: உனக்கு என் கிட்ட பேசனும்னு தோனவே இல்லையா, என்ன மிஸ் பண்ணவே இல்லயா?
நா: பேச தோனாமலாம் இல்ல, சொல்ல போன போன் எடுத்து call வரைக்கும் போயிடுவேன்.ஆனா நீ தான டைம் வேணும்னு சொன்ன,அதனால உன்ன பேசி confuse பண்ணக்கூடாதுனு பண்ல. உனக்கு தோனுச்சா பேசனும்னு?
அ: தோனுச்சாவா.. எவ்ளோ நாள் உன் கூட பேசாம இருக்க முடியும்னு என்ன நானே test பண்ணா மாதிரி இருந்துச்சு,classல உன்னையே பாத்துட்டு இருப்பேன், நீ திரும்புவியா, என்ன பாக்கறியானு.இப்டிலாம் நா இருந்ததே இல்ல.
நா: அட, பார்டா. அப்போ அப்பவே வந்து பேசிற்கலாம்ல.. எதுக்கு இவ்ளோ நாள்
அ: அப்போவே பேசிற்ந்தா, இந்த feel கிடைச்சிற்காது, நீ இல்லாம, உன் கூட பேசாம இருக்க feel இருக்கே.அது சொல்ல தெரியல. ஆனா உன்ன விட்டு 😦இனிமே தூர போகக்கூடாதுனு மட்டும், தெரிஞ்சிகிட்டேன்❤️
நா: டேய், நீதான் பேசறையா.எதோ சினிமால வரா மாதிரி drama வா இருக்கு.. நம்பவே முடியல, ஆனா கேக்க நல்லா இருக்கு.அப்புறம்?
அ: so உனக்கே புரிஞ்சுற்கும்னு நினைகறேன்.எப்டி சொல்றதுனு தெரியல
நா: பரவால்ல.. எதுவா இருந்தாலும் சொல்லு நா தப்பா எடுத்துக்க மாட்டேன்
அ: நீ கேட்டல்ல, நம்ம என்ன ரிலேசன்சிப்ல பேசறோம்னு... அது வந்து..
நா: ஹே.. wait .. wait.. டைம் 12.10 ஆகிடுச்சு டா.. இப்போ சொல்லாத.. நாளைக்கா சொல்றியா
அ: எதுக்கு.. என்னாச்சு.. prepare பண்ணனுமா
நா: அட அது இல்ல, இன்னிக்கு sep 11..US Twin tower இடிச்ச நாள், Black day. sep 11 நாலே இது தான் நியாபகம் வரும்..சொல்லறதுனு ஆகிடுச்சு, ஒரு நாள் கழிச்சு சொல்றியா
அ: அடி லூசு😁 love u de ♥️ இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது. Black day நமக்கு இருக்காது பயப்படாத..இனியும் உன் கிட்ட பேசாமா, வாய் வரைக்கும் இருக்க லவ் யூவ உன் கிட்ட சொல்லாம இருக்க முடியாது..love u de lusu..😍
நா: 😭😭😭😍💃🏻💃🏻💃🏻💃🏻😬😌😌😜😜😘😘😘 எனக்கு சரியா கேக்கலலலலலலலலா...................சத்தமா சொல்லு...
அ: கேட்காட்டி பரவால்ல...போடி
நா: pls ஒரே டைம் சொல்லு....
அ: love u, love u, love u ♥️ நீ சொல்ல மாட்டியா
நா: நா சொல்லட்டா, எனக்கு வெக்க வெக்கமா இருக்கு. சரி... 😌 லவ் யூயூயூயூயூயூயூ❤️❤️❤️
அ: சிரிப்பா வருது,உன் கூடதானா இனிமே..
நா: எனக்கும் தான், உன்கூட தான் இனி குப்பகோட்னோமா
அ: ஆமா, நீயே வேணாம் போடானு சொன்னாலும் போக விடமாட்டேன்..என் கூடாதான் இனிமே♥️
இப்டியே பேசி 3 மணி ஆகிடுச்சு, friend system முன்னாடியே தூங்கிட்டா..நானும் சரி காலைல presentation இருக்கு, தூக்கறேன்னு போன் வெச்சிட்டோம்.. ஆனா பாருங்க6 மணி வரைக்கும் தூக்கமே வரல, விடிஞ்சிடுச்சு..Ready ஆகி auditorium போயிட்டோம் அப்டியே..அங்க பாத்தா எனக்கு முன்னாடியே அவன் வந்துட்டான். அவன பாத்ததும் சிரிப்பு, சிரிப்பா வந்துச்சு, proposal அப்பறம் first பாக்கறோம். Stageல presentationகு ஏறிட்டு அவன தான் பாத்தேன். Centerல உக்காந்துட்டு இருந்தான், பாத்ததும், சிரிச்சுட்டு கண் அடிச்சான்😉.Prepare பண்ணது எல்லாம் மறந்து போய் ஒரு நிமிசம் blank ஆகிட்டேன்.அப்பறம் conscious ஆகி நல்லா present பண்ணி முடிச்சிட்டோன்.இப்படியாக இனிதே commit ஆகியாச்சு♥️😍
பிகு: இப்போ பாத்தது வெறும் கமிட் ஆகற வரைக்கும் தான்.. ஆனா இந்த காதல் டூ கல்யாணம் phase இருக்கே அதுல வராத action sequence, குழாழ் அடி சண்ட, ஆயிரம் முறை நம்ம பிரேகப் பண்ணிக்குவோம்னு சொன்னது, இப்டி அதகளமாதான் இருக்கும்.. பின்ன இப்டி கொஞ்சிட்டே இருப்பாங்களா என்ன.🤧
https://m.facebook.com/story.php?story_fbid=2075867672449740&id=100000795812456
---
காதலே காதலே பகுதி - 8 🖤🖤🖤
லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்னு ஒரு பக்கம் இனம் புரியாத சந்தோசமா இருந்தாலும், இன்னொரு பக்கம் வீடு, அப்பா, அம்மா இப்டி எல்லாரையும் பாக்கும் போது, பேசும் போது ஏதோ உரித்திட்டே இருந்துச்சு. அதுவும் அப்பாவோட எல்லையில்லாத அன்பு ரொம்பவே பாரமா இருந்துச்சு.சின்ன வயசுல இருந்து நீ இப்டி தான் இருக்கனும், இதத்தான் பண்ணும்னு கம்பல் பண்ணதே இல்ல. எல்லாமே என் இஸ்டம் தான், ஆனா என் கல்யாணத்த பத்தி மட்டும் நிறைய கனவு வெச்சிற்காங்கனு தெரியும். வீட்ல ஒரு பக்கம் அத்த பையன் ( அப்பாவோட அக்கா பையனுக்கு) கட்டி தந்துடுங்கனு, அத்த மாமா வரும் போதல்லாம் அவ்ளோ pressure கொடுக்க ஆரம்பிச்சாங்க. தட்டு மாத்திக்கலாம், படிச்சி முடிக்கும் போது கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஏகப்பட்ட டார்சர். ஆனா இதெல்லாம் எனக்கு பிடிக்கலனு அப்பாவுக்கு நல்லாவே தெரியும். அதனால கல்யாணம் பத்தி பேச்சு எடுக்காதிங்க, இது என் பொண்ணு வாழ்க, நீங்க கேக்கற்துகாகலாம் இப்போவே முடிவு பண்ண முடியாதுனு சொல்லிட்டார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சங்கரும் நானும் என்ன பண்ண போறோம், எப்டி இவங்கள சமாளிக்க போறோம்னு பேசிட்டு இருப்போம். அவனோட வீட்ல சின்னதுல இருந்தே கஷ்டம், அப்பாக்கு மட்டும் தான் வேலை, சொத்து, சொந்த வீடு இப்டி எதுவும் இல்லனு சொன்னான், மாமா தான் மெஸ் பில் கூட கட்றாங்க, காலேஜ் பீஸ் லோன்ல தான் கட்றேனு சொன்னான்.இதல்லாம் எனக்கு கேக்க புதுசா இருந்துச்சு,lifeல நான் எவ்ளோ சொகுசா வீட்ல வளர்துற்கேன்னு தோனுச்சு.ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுது, படிப்பு மட்டும் தான் எங்க வாழ்க்கைக்கு ஒரே துணைனு..எப்டியாச்சும் first class with distinction la degree முடிக்கனும், campus interviewல select ஆகிடனும்னு தெளிவா இருந்தோம்.தமிழ் மீடியம்ல படிச்சதால அவனுக்கு communication மட்டும் தான் சின்ன தடையா இருக்குனு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அவன் technically செம strong.இதுக்காகவே போன்ல பேசும் போது Englishல பேசனும்னு சொல்லி பேசிட்டு இருந்தோம். நா கொஞ்சம் சோம்பேரி, மெனக்கடுக்க மாட்டேன், ஆனா அவனுக்காக என்னயே மாத்திக்க ஆரம்பிச்சேன்.
Salem to Chennai போயிட்டு இருந்த அவன், Salem to Tiruvannamalai என் கூட பஸ்ல வந்து என்ன விட்டுட்டு சென்னை போக ஆரம்பிச்சான். பஸ்ல ஒரு ஒரு முறையும் stopல எறங்கும் போது கண் கலங்கி தான் நிப்பேன்.அப்பாகூட bikeல போகும் போது அதே பஸ்ல அவன் ஜன்னல் ஓரம் என்ன பாத்துட்டே போவான்.அந்த 4 மணி நேரம் பஸ் டிராவல் அவ்ளோ அத்மார்த்தமா இருக்கும். அவன் தோல்ல சாஞ்சுட்டு, அவன் கை பிடிச்சுட்டு நிறைய அழுதுற்கேன். ஊர் வர போகும்போது அவன் வேற சீட்க்கு போயிடுவான். அப்போ என் கைய விட்டுட்டு போறப்ப வரும் பாருங்க ஒரு அழுக 🖤 இப்டியே போயிட்டு இருந்த போது தான், semester holidays leaveகு ஊருக்கு போனோம். அப்போ தான் நா பஸ்ல இவன் கூட வரத எங்க தாய் மாமா பாத்துடாரு. அவர் பாத்ததே எனக்கு தெரியாம இருந்துச்சு.அப்பா ஒரு கல்யாணம்னு வெளி ஊருக்கு போயிருந்தாரு, நானே வீட்டுக்கு எப்பவும் போல போயிட்டேன்.
Night வரைக்கும் ஒன்னும் தெரியல, night 11 மணி இருக்கும், எங்க அம்மா வந்து எழுப்பனாங்க.தூக்கத்துல பதறி எழுந்தேன், என்ன நடக்குதுனு ஒன்னும் புரியல.என்ன மா, என்னாசுனு கேக்கும் போதே பலார்னு ஒன்னு கண்ணத்துல உட்டாங்க பாருங்க, காதே கேக்கல அப்டி இருந்துச்சு.மா என்ன மா,ஏன் மா அடிக்கறனு கேக்க கேக்க இன்னும் அடிச்சாங்க. தலக்காணிய வெச்சி முகத்த மறைக்க try பண்ணேன், எதுக்கு அடிக்கற டாடிக்கு போன் பண்ணுவேன் இப்போ நிறுத்துனு கத்தனேன். கத்தாதாடி, கத்தனா உன் மானம் தான் போகும், எவன் கூட போய் பொறிக்கிட்டு வந்தனு கேட்டாங்க.மாமா யாரோ உன் கூட பஸ்ல வந்ததா சொன்னாங்க. யாரு அவன்? எவ்ளோ நாளா பழகம், எங்க போய் மேஞ்சிட்டு வர, அப்டி என்ன தேவைக்கு அவன் கூட வந்தனு விடாம அடிச்சிட்டே இருந்தாங்க.மா classmate மா, அடிக்காத வலிக்குது pls ma அப்டினு சொல்லியும் கேக்கல. 11 மணிக்கு அரம்பிச்சவங்க நைட் 2 மணி வரைக்கும் அடி பிண்ணிட்டாங்க.காதுல இருந்த கம்மல் உடஞ்சு ரத்தமே வர ஆரம்பிச்சுடுச்சு, ஆனா அப்ப கூட உன்ன மாதிரி ஒரு பொண்ணு நா பெத்ததுக்கு நீ செத்தே போலாம்,எங்க மானத்த வாங்க வந்து பொறந்துற்கியா, உனக்கு என்ன தேவை இப்போ, வயசு தேவைக்கு நீயே ஆள புடிச்சிக்கிட்டியானு அடி வயத்துல மிதிச்சாங்க பாருங்க. அங்கேயே செத்துட்டேன்னு நினைச்சேன்👻
https://m.facebook.com/story.php?story_fbid=2077419645627876&id=100000795812456
---
காதலே காதலே பகுதி - 9🖤🖤🖤
அப்பா அடுத்த நாள் வீட்டுக்கு வந்துட்டு இருக்கறதா போன் பண்ணாங்க. என்கிட்ட அப்பா முகத்தபாத்துட்டு எதாவது கேட்ட, வயிறு வலி அதனால அழுதேன்னு சொல்ல சொன்னாங்க அம்மா.அப்பாக்கு நடந்ததெல்லாம் தெரிஞ்சா அவ்ளோ தான், தாங்க மாட்டாங்க, உனக்காக தான் வாழ்ந்துட்டு இருக்காங்க, நீ இப்டி பண்ணத மட்டும் தெரிஞ்சுது நொந்து போயிடுவாங்க, எத பத்தியும் பேசக்கூடாதுனு சொன்னாங்க.காலைல சங்கர் போன் பண்ணான், ஆனா அம்மா தான் அட்டண்ட் பண்ணாங்க. ரொம்ப திட்டனாங்க, எங்க குடும்பம் நல்லா இருக்கறது புடிக்கலையா, நீ யாரு எதுக்கு அவகிட்ட பேசற, இனி போன் பண்ண அவள காலேஜ்கே அனுப்பமாட்டோம், படிச்சது போதும்னு கல்யாணம் பண்ணிடுவோம்,தயவு செஞ்சு இனி போன் பண்ணாதனு சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க.
அப்பா வந்ததும் என்ன பாத்த உடனே நான் சரியில்லனு கண்டு பிடிச்சிட்டாங்க, கண்ணு, கண்ணம்லாம் அப்டி வீங்கி காச்சலா இருந்தது, அம்மா சொன்ன மாதிரி வயிறு வலி அதான் அழுதேன்னு சொன்னேன், டாக்டர் கிட்ட போலாம்னு கம்பல் பண்ணி கூட்டிட்டு போயிட்டாரு,அவர் கிட்ட எதுவும் சொல்ல முடியல, அம்மாவோ இனி சங்கர் கூட பேசவே கூடாதுனு போன் seize பண்ணிட்டாங்க.sem holidays முழுக்க பேசிக்கவே இல்ல, காலேஜ் reopen முன்னாடி school friends வந்தாங்க,அவங்க ரொம்ப request பண்ணதால அம்மா வெளிய போகவிட்டாங்க, வெளிய போன உடனே முதல்ல அவனுக்கு தான் போன் பண்ணேன், அவன் குரல் கேட்டதும் அவ்ளோ அழுக, வீட்ல இனி உன் கூட பேச கூடாதுனு சொல்லிட்டாங்கனு பயங்கர அழுக,அவனும் ரொம்ப கஷ்டமா தான் இருக்குனு சொன்னான், இன்னும் ரெண்டு நாள் பொருத்துக்கோ, காலேஜ் வர வரைக்கும் எதுவும் பேசாத,சரி, சரினு சொல்லு,நீ காலேஜ் வரனும் அதுக்காக கொஞ்சம் பொருத்துக்கோனு சொன்னான்.
லீவ்ல ஒரு மெடிகல் ஷாப்ல வேலைக்கு போயிட்டு இருக்கேன்னு சொன்னான், அத கேட்டு இன்னும் கஷ்டமா இருந்துச்சு, ஒழுங்கா சாப்டு,நா உன்ன பத்தி மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கேன், தைரியமா இரு, இன்னும் ரெண்டு நாள்ல பாக்கலாம்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான்.வீட்ல அம்மா அவ்ளோ advise. நீ காலேஜ்ல என்ன பண்றனு இனி எனக்கு தெரியும், என்ன ஏமாத்தறதா நினைச்சு, உன்னையே ஏமாத்திக்காத, உனக்கு எப்டி life இருக்கனும், என்ன பண்ணனும்னு எங்களுக்கு நல்லா தெரியும், மீறி எதாவது பண்ணா அவங்கள உயிரோடவே பாக்க முடியாதுனு சொன்னாங்க.சரி ஓகே புரிஞ்சது, சரி ஓகேனு மட்டும் தான் பதிலா இருந்துச்சு.அடுத்த ரெண்டு நாள்ல காலேஜ் போயிட்டேன். ஒரு மாசம் கழிச்சு அவன பாத்தேன்.
எப்டி இருக்க, Sorry என்னால தான நீ இவ்ளோ கஷ்ட பட்றனு சொன்னான்.உன்னால இல்ல, அவங்களால ஏத்துக்க முடியல, இதுல நம்ம தப்பு எதுவும் இல்ல, நீ கஷ்ட படாத,என்ன பண்ணாலும் course முடிக்கறவரைக்கும் நா face பண்ணிகிறேன், நீ பயப்படாத,இதெல்லாம் எதிர்பாத்தது தானனு சொல்லி அவன சமாதானம் பண்ணேன்.3 yr ஆரம்பிச்சதால placement preparation, mock interview, sem, இப்டியே போச்சு. வீட்டுக்கு போனா மட்டும் போன் எடுக்கவே மாட்டேன், அங்க ரொம்ப சதாரணமா இருக்க மாதிரி நடந்துக்குவேன்.அம்மா, அப்பா அடிக்கடி hostel வந்து பாத்தாங்க. அப்டி தான் அப்பா மட்டும் வரும் போது சங்கர் காலேஜ் பஸ் stopல அப்பாவ பாத்தான். பாத்த உடனே அவனும் அதே பஸ்ல ஏறிட்டான். அப்பா பக்கத்துல இடம் இருந்ததால, அப்பாவே தம்பி இங்க இடம் இருக்கு வாங்கனு கூப்டாரு.அந்த டைம்ல என் heart beat அடிச்சது பாருங்க..அப்பாவும், சங்கரும் சகஜமா பேச ஆரம்பிச்சுட்டாங்க.பக்கத்துல இருந்து என்ன ரியாக்ட் பண்றதுனே தெரியல.இந்த தம்பிய உனக்கு தெரியுமா குழந்தனு என்கிட்டேயே கேக்கும் போது, ஒரு முழி முழிச்சேன் பாருங்க ❤️❤️❤️😍
https://m.facebook.com/story.php?story_fbid=2078643932172114&id=100000795812456
---
காதலே காதலே பகுதி - 10 🖤🖤🖤
தம்பிய தெரியுமானு கேட்டதுக்கு, தெரியும் டாடி, இவங்க என்னோட class தான்னு சொன்னேன். அப்டியா, என் பொண்ணு ரொம்ப talented,பெருமைக்கு சொல்றேன்னு நினைக்காதிங்க, படிக்கறது மட்டும் இல்ல, நல்லா பாடுவா, காலேஜ்ல கூட பாடிற்கா,இப்போகூட farewella dance பண்ணா,ஒரே ஆட்டம் தான் எப்போவும், இவங்க gang எல்லாரும் செம கலாட்டா, அரட்ட தான்னு ஆரம்பிச்சுட்டாரு, டாடி இப்போ எதுக்கு அதல்லாம்னு சொல்லியும், இல்லடா குழந்த உன்ன பத்தி அப்பாக்கு சொன்னா ஒரு பெரும தான்னு சொன்னதும் அவன் சிரிக்க ஆரம்பிச்சுட்டான்.hostel la non veg போட மாட்றாங்க, அது சாப்டாம எப்டி தான் இருக்கானே தெரியலனு சொன்னதும்,அதான் ரெண்டு நாளைக்கு ஒரு முறை காலேஜ் கிட்ட இருக்க அஜ்மீர் பிரியாணில பார்சல் வாங்கிட்டு போவாங்கலே uncle, இவங்க friends சேலத்துல போகாத ஹோட்டல்லே இல்ல, எப்பவும் வெளிய தான்னு நல்லா போட்டு விட்டுட்டான், இப்டியே new bus stand வரைக்கும் எல்லா கதையும் பேசிட்டு வந்தாரு.எப்டியோ அப்பாக்கிட்ட பேசன முதல்முறை எந்த சொதப்பலும் இல்லாம இருந்தது.
எல்லா காலேஜ்லையும் லவ் பண்ணாலே பிடிக்காத staff இருப்பாங்க, அப்டி சில psycho staffs எங்க காலேஜ்லயும் deptகு ஒருத்தர்னு இருந்தாங்க. ஒரு தடவ இவனுக்கு fever nu DBMS( database mgmt systems) assignment நான் எழுதி submit பண்ணேன், ஏற்கனவே என்ன பாத்தலே அந்த sir ku கடுப்பா இருக்கும் போல, இத கண்டு பிடிச்சுட்டுட்டாங்க. அவர் எங்க சீனியர் தான், company கூப்பட்ற வரைக்கும் part time la work பண்ணிட்டு இருந்தாரு. Staff roomகு ரெண்டு பேரையும் கூப்ட்டு, class advisor முன்னாடி ஒரு மணி நேரம் advice பண்ணி உயிர வாங்கிட்டாங்க.அப்போ வந்த series testல என் பேபர் correct tey பண்ணாம, எல்லாத்தையும் அடிச்சி வெச்சி இருந்தாரு,classல எல்லார் முன்னாடியும் நிக்க வெச்சு, படிகறத தவர எல்லாம் பண்ற போலனு கேட்டாரு.எதுக்கு எல்லத்தையும் strike பண்ணிற்கீங்கனு கேட்டதுக்கு,meet me in staff room nu சொல்லிட்டு போயிட்டாங்க.அவ்ளோ கடுப்பா இருந்துச்சு,நம்ம லவ் பண்றோம்னு இப்டி படுத்தறானே, மெண்டல் டார்ச்சர் தரானேனு இருக்கும்.
Staff roomகு நா போனதும் அவ்ளோ attitude,எதுக்கு இப்டி பண்றீங்க, என் கிட்ட என்ன problem உங்களுக்குனு கேட்டதுக்கு, நீ லவ் பண்ண தான் காலேஜ் வரையா, ஒழுக்கமா இல்லைனா இப்டி தான்னு சொன்னாங்க,எனக்கு ரொம்ப அழுகையா வந்துச்சு, இவன் ஒரு ஆளு இவன்கிட்டலாம் இப்டி நிக்கறோமேனு.sir நா இது வரைக்கும் எந்த arrear வெச்சது இல்ல,academicsல எதாவது பிரச்சனனா நீங்க கேளுங்க, இப்டி personal la என் கிட்ட பேசனா HOD கிட்ட தான் complaint பண்ணுவேன்னு சொன்னதும் செமயா காண்டாகிட்டார்.என்ன நீ ஓவரா பேசற, உங்க internal, lab எல்லாம் எங்ககிட்ட தான் இருக்கு, மறந்துடாது சொன்னதும்,எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு. Internal fail பண்ணுவீங்கலா பரவாயில்ல, நா external la படிச்சு pass பண்ணிக்கிறேன், இப்டி manners இல்லாம என்ன இனி staff roomகு கூப்டா கண்டிப்பா நானே நீங்க mental torture பண்றீங்கனு complaint பண்ணிடுவேன்,apart from academics என் character, personal la தலையிட உங்களுக்கு எந்த rightsum இல்லனு சொல்லிட்டு வந்துட்டேன்.
அப்பவும் record,lab இப்டி எல்லாத்துக்கும் அலையவிட்டாரு.மனசுக்குள்ள போடா சொட்டனு திட்டிக்குவேன்.அதே மாதிரி internal la கேவலமா மார்க் போட்டுற்தார், எப்டியோ external எடுத்து தான் pass ஆனோம்.காலேஜ் hostel la வருஷா வருசம் ஒரு hit list ready பண்வாங்க.யாரு, யாரு லவ் பண்றாங்க, outing யார் அதிகம் போறாங்கனு பாத்து அவங்கள இந்த list la வெச்சிற்பாங்க, சீனியர்ஸ்ல இருந்து dept staffs, HOD வரைக்கும் இந்த list போகும். இது girlsகு மட்டும் தான், பசங்களுக்கு எந்த rulesum கிடையாது. அந்த listல நானும் என் friendsum எப்போவும் இருப்போம், CSEல நாங்கனாலே, இதுங்களா அராத்துங்கனு அவங்களே முடிவு கட்டிடுவாங்க, so called கலச்சார காவலர்கள் ரொம்பவே எங்கள சுத்தி அதிகம். சில நேரம்லாம், அட செய், லவ் தான பண்றோம் இதுக்கு எதுக்கு கொலக்குத்தம் பண்ணா மாதிரி corner பண்றாங்கனு நொந்து போயிற்கேன்.ஆனா எது சுத்தி நடந்தாலும் pass ஆகனும், place ஆகனும்னு மட்டும் தெளிவா இருந்தோம். அப்போ தான் campus interviewகு வந்தாங்க😍
https://m.facebook.com/story.php?story_fbid=2080029935366847&id=100000795812456
---
No comments:
Post a Comment