Friday, February 1, 2019

அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் தரத்தை விட குறைவாக இருக்கிறதா?

The Trojan horse
2019-02-01

*அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் தரத்தை விட குறைவாக இருக்கிறதா?*

ஆம்.

*ஏன்?*

தனியார் பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகையை விட அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகை குறைவு.

*அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கப்படும் தொகை எவ்வளவு?*

ஆண்டுக்கு 1300 ரூபாய். மாதத்திற்கு 110 ரூபாய்

இந்தப் பணத்தில் அரசு கல்வி மட்டும் வழங்கவில்லை:

* சத்துணவு
* முட்டை
* புத்தகங்கள்
* சீருடை
* பாடப்புத்தகப்பை
* அட்லஸ்
* அகராதி
* மிதிவண்டி
* பஸ்பாஸ்
* சானிடரி நாப்கின்
* லேப்டாப்

என்று அனைத்தும் இந்த 1300குள் அடக்கம்.

*இந்த அளவு குறைந்த செலவில் எந்தத் தனியாராவது பள்ளி நடத்த முடியுமா?*

கண்டிப்பாக முடியாது

*பிறகு அரசால் எப்படி முடிகிறது?*

அரசு ஆசிரியர்களின் கடின உழைப்பு தான்.

அரசு ஆசிரியர்கள் தான் அங்கு

* ஆசிரியர்
* ஸ்டோர் கீப்பர்
* கிளர்க்

எல்லாம்.

மேலும் ஒரே ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்ட வகுப்புகள் எடுக்க வேண்டும். ஏனென்றால், அரசு நிதி குறைவு.

*தனியார் பள்ளி போல் ஆசிரியர்கள் ஒரு வகுப்பிற்குப் போதிக்கும் பணி மட்டும் செய்வதாக மாற்ற முடியாதா?*

முடியும். அதற்கு நிறைய ஆசிரியர்கள், நிறைய ஊழியர்கள் வேண்டும்.

அதாவது, இன்று ஒதுக்கப்படும் 1300ஐ விட அதிகம் ஒதுக்க வேண்டும். அதற்கு நிதி இல்லை. இந்தியாவிலேயே கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம்.

*ஆசிரியர்களின் சம்பளத்திற்கே நிதி சென்றால் மீதி எங்கு நிதி கிடைக்கும்?*

ஐயா, ஆசிரியர்களின் சம்பளமே இந்த 1300ல் இருந்து தான் வழங்கப்படுகிறது.

*அரசு பள்ளிகள் தனியார் பள்ளி போல் மாற என்ன செய்ய வேண்டும்?*

அதிக நிதி வேண்டும்.

*ஆசிரியர்கள் அதிகம் வேலை பார்த்தால் முடியுமா?*

முடியாது. ஏற்கனவே ஆசிரியர்கள் அதிக வேலை தான் பார்க்கிறார்கள். இதற்கு மேலும் அவர்களால் பார்க்க முடியாது

*ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்கிறீர்கள். ஆனால், தனியார் பள்ளி அளவு தேர்ச்சி இல்லையே?*

காரணம் - அரசு பள்ளி, தனியார் பள்ளி நிதி ஒதுக்கீடு தானே தவிர ஆசிரியர்கள் குறைவாக வேலை செய்வது அல்ல.

அரசு பள்ளி - ரிக்‌ஷா
தனியார் பள்ளி - ஆட்டோ

"ரிக்‌ஷாவை விட ஆட்டோ சீக்கிரம் செல்கிறது,
அதற்குக் காரணம் ஆட்டோ ஓட்டுபவரின் திறமை" - என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,

அதே போன்ற முட்டாள் தனம் தான் "அரசு ஆசிரியர்கள் திறமை குறைவு, அல்லது வேலை குறைவாக செய்வதால் தான் அரசு பள்ளிகள் தனியார் பள்ளி அளவு தேர்ச்சி இல்லை" - என்று கூறுவதும்.

"ரிக்‌ஷா ஓட்டுபவரின் ரிக்‌ஷாவில் அவரது பையன் ஏறினால் அந்த ரிக்‌ஷா ஆட்டோவை விட வேகமாக செல்லும்" - என்று கூறுவது
எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,

அதே போன்ற முட்டாள் தனம் தான் அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு பள்ளிகளின் தரம் உயரும்" - என்று கூறுவதும்.

அரசு பள்ளி - அம்மா கேண்டீன்.
தனியார் பள்ளி - ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

"அம்மா கேண்டினில் வேலை செய்பவர்களின் குடும்பம் அம்மா கேண்டினில் சாப்பிட்டால் அம்மா கேண்டின் தாஜ் ஹோட்டல் ஆகிவிடும்" - என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,

அதே போன்ற முட்டாள் தனம் தான் "அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு பள்ளிகளின் தரம் உயரும்" - என்று கூறுவது.

https://m.facebook.com/story.php?story_fbid=10158286422623569&id=576438568

No comments:

Post a Comment