காதலே, காதலே
Hema Shankar
---
காதலே காதலே பகுதி - 21 🖤🖤🖤
கம்பெனிகிட்ட இருந்து கால் லெட்டர் வந்துச்சு ரெண்டு பேருக்கும். அவன் போய் ஜாயின் பண்ணான், நா அதே hostel, அதே காலேஜ் ரொடீன்னு போயிட்டு இருந்தேன். அவன் கம்பெனி training periodல நாங்க பாக்கற்து ரொம்ப குறைஞ்சிடுச்சு, போன்ல மட்டும் பேசுவோம், அதுவும் 10 நிமிசம் மேல இல்ல.சரி அவனுக்கு assessmentலாம் இருந்ததால நானும் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டேன்.ஆனா training timeல அவனுக்கு அங்க ஒரு புது friends gang create ஆச்சு,அவங்க கூட டைம் spend பண்ண ஆரம்பிச்சான், வெளிய போக, ஹாங் அவுட்னு போக ஆரம்பிச்சான்,அது வரைக்கும் அவனா வராவாரம் வா பாக்கனும்னு சொன்னவன், கம்பெனிக்கு போனதுல இருந்து நான் தான் அவன்கிட்ட ரெண்டு வாரம் ஆச்சு நம்ம பாத்து இந்த வீக் மீட் பண்லாமானு கேப்பேன்.எனக்கே ஒரு இன்செக்யூரிட்டி வர ஆரம்பிச்சுச்சு,ச்ச நம்பளோட career இவனுக்காக விட்டுட்டோம், ஆனா இவன் இப்டி நமக்கான டைம்ம கூட தர மாட்றானேனு இருந்துச்சு. அவன்கிட்ட ரொம்ப சண்ட போட ஆரம்பிச்சேன். அந்த சண்ட எப்போ அதிகமாச்சுனா, என்ன பாக்க வர சொல்லிட்டு அரமணி நேரம் தான் இருந்துற்பான், அதுக்குள்ள அவனுக்கு அவ friend ஒருத்தி கால் பண்றா, beachகு போலாம்னு சொன்னோமே நாங்க on the way, சீக்கரம் வந்துடுனு.
யாரு பண்ணாங்கனு கேட்டதும், பிரண்ட், கோச்சிக்காத நேத்தே plan பண்ணிட்டோம் எனக்காக தான் வெயிட் பண்றாங்க, நீ உனக்கு வேற வோர்க் இருந்தா பாத்துட்டு hostelகு போறையானு கேட்டான்.அப்போ வந்துச்சு பாருங்க ஒரு கோவம்,என்ன பாத்து ரெண்டு வாரம் ஆச்சு, என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு உனக்கு தோணவே இல்லயா, இன்னிக்கு மட்டும் தான் எனக்கு அவுட்டிங்,அடுத்து 2வாரம் டெஸ்ட் இருக்கு,வெளிய விடவே மாட்டாங்க,உன்ன பாக்ககூட முடியாது, நீ அவங்ககிட்ட போன் பண்ணி வரலனு சொல்லுனு சொன்னேன். நா நேத்தே கமிட் பண்ணிக்கிட்டேன்,அவங்ககிட்ட ரீசன் வேற சொல்லனும், எதுக்குனு தான், இந்த ஒரு தடவ நீ போ, இனி clash ஆகாத மாதிரி plan பண்ணிக்கலான்னு சொன்னதும் எனக்கு அழுகையா வந்துச்சு. அப்போ நா உனக்கு priority இல்ல, நேத்து வந்த பிரண்ட்ஸ் கூட இப்போ பீச்க்கு போய் ஆடனும் அதான,சரி அப்ப நானும் வரேன் என்னையும் கூட்டு போனு சொன்னேன். அது எப்டி கூட்டிட்டு போறதது,அவங்களுக்கு நா கமிடட்னு தெரியாது, இப்போ ஏன் சொல்லனும்னு கேட்டான்.கமிடட்னு சொன்னா இப்போ என்ன,நம்ம லவ் தான பண்றோம் அத உன் பிரண்ட்ஸ் கிட்ட சொல்றதுக்கு என்னனு கேட்டேன்.
நா கொஞ்சம் சந்தோசமா இருந்தா உனக்கு பிடிக்காதே,நா அவங்களுக்கு போன் பண்ணி வரலனு சொல்லிட்றேன், வந்து தொல, உன் கூடவே இருக்கேன் இன்னிக்கு போதுமானு சொன்னான். இத கேட்டதும் எனக்கு அவ்ளோ அழுக வந்துச்சு, அழ ஆரம்பிட்சிட்டேன்,அதுக்கும் அவன் இப்போ எதுக்கு அழுது சீன் போட்றனு சொன்னான், அந்த வார்த்தலாம் நான் அவன் பேசி கேட்டது கூட இல்ல.அவன்கிட்ட ஒரு வார்தை கூட பேசாம அழுதுட்டே பஸ் ஸ்டாபுக்கு நடக்க ஆரம்பிச்சுட்டேன்.பதில் சொல்லிட்டு போ,நா இருக்கவா, இல்ல கெளம்பவானு கேட்டுட்டே வந்தான்,பஸ்க்கு என் பிரண்ட் வெயிட் பண்ணிட்டு இருந்தா, அவக்கிட்ட போயிட்டேன், அவ ஏண்டி இப்டி அழுகற, அவன் கூட சண்டையானு கேக்கும் போது,பாரு இப்டி அழுது சீன் போட்டு என்ன எல்லாரும் வில்லன் மாதிரி பாக்கனும் உனக்கு அவ்ளோ தான இப்போனு சொன்னான்.வந்த கோவத்துக்கு, ஆமா நீ பெரிய இவன் உன்கிட்ட அழுது சீன் போடனும்னு எனக்கு அவசியம் இல்ல, போ எங்கயாவது போ, உன் பிரண்ட்வெயிட் பண்றால, இங்க ஏன் வர, இனி நானா உன்ன பாக்கனும்னு எப்பவும் சொல்ல மாட்டான், போயிடுனு நா கத்தி அழுதத அம்பத்தூர் பஸ் ஸ்டாப்பே வேடிக்க பாத்துச்சு.😓
Hostel போயிட்டு என் best friend Febi கிட்ட அப்டி அழுதேன்,நா தான் எல்லாத்தையும் தொலச்சிட்டு நிக்கறேன், என் ஜாப், எங்க அப்பா, அம்மாகிட்ட சண்ட போட்டு, வீட்ல இவனுக்காக எவ்ளோ face பண்றேன், எதுக்குனே தெரியாம இங்க வந்து படிச்சிட்டு இருக்கேன், ஆனா ஒரே வார்த்தைல அழுது சீன் போடாதனு சொல்லிட்டாண்டி, இப்போ வரைக்கும் ஒரு மெசேஜ் கூட இல்ல, நா எதுக்கு அவன நினைச்சு இப்போ அழனும்,அவனுக்கு நா bore அடிச்சிட்டேன் போல, IT job,புது பிரண்ட்ஸ், பெரிய exposure இதெல்லாம் பாத்ததும் நான் least priority மாதிரி,boring ah இருக்கேன் போலனு இன்னும் அழுதேன்.அவளும் நீ கொஞ்சம் டைம் எடுத்துக்கோ, அவனுக்கு என்ன பிரச்சனைனு தெரியாம நீ எதையும் தப்பா யோசிக்காத, அழாதடினு சமாதானம் பண்ணா.இந்த மாதிரி எமோசனல்லா இருக்கும் போது அவள மாதிரி ப்ரெண்ட் இல்லாட்டி எப்டி நொறிங்கிற்பேன்னு தெரியல, காலேஜ் hostelல அவ கூட share பண்ணிக்காத பெர்சனல்லே இல்லனு சொல்லலாம்❤️பின்ன bestieநா சும்மாவா😄
அந்த வாரம் முழுக்க test இருந்ததால நா போன் switch off பண்ணிட்டேன், அவன் கூட பேசனும்னு ரொம்ப தோணும்,பாத்ரூல்ல அவ்ளோ அழுதுற்கேன்,அந்த ஒரு வாரம் என்னவோ ஒரு வருஷம் மாதிரி இருந்துச்சு, ஆனா அதுல ஒரே நல்ல விஷயம், எல்லா testலயும் நல்லா மார்க் வாங்கனேன், room mates, friends, college இப்டி எல்லாமே ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. அப்போ தான் என் பிரண்ட் ஒருத்தி அவன் Fb profile பாத்துட்டு, உன் ஆள் beachல செம ஆட்டம் போல, நீ போனையா, போட்டோஸ் tag ஆகிற்கனு கேட்டா, அதப்பாத்ததும் தான் தோணுச்சு ‘it’s time to move on’. 😭 FBல,போன்ல எல்லாத்துலையும் அவன block பண்ணேன்😪
https://m.facebook.com/story.php?story_fbid=2096928620343645&id=100000795812456
---
காதலே காதலே பகுதி - 22 🖤🖤🖤
அவன்கிட்ட பேசாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, இது தேவயில்ல முடிச்சிக்கலாம்னு ஒரு பக்கம் நினைச்சாலும், இவன் இல்லாம நம்ம எப்டி தான் இருக்கறதுனு இருந்துச்சு. காலேஜ்,க்ளாஸ்,ப்ரண்ட்ஸ்னு என்னையே டைவேர்ட் பண்ணிக்க ஆரம்பிச்சேன்.அவன்கிட்ட பேசாம மூணு வாரம் ஓடுச்சு, அப்போ நான் படிச்சிட்டு இருந்த புக்ல என்னைக்கோ ஹேமா சங்கர்னு எழுதி வெசிற்கேன்,அத பாத்ததும் ரொம்ப அழுகையா வந்துச்சு,அவன்கிட்ட அப்பவே பேசனும் போல இருந்துச்சு,போன்ல அவன் நம்பர் ப்ளாக் பண்ணத எடுத்தேன். அவன் நம்பர் டயல் பண்ண போயிட்டு பத்து தடவயாச்சும் வெளிய வந்துற்பேன்,பைத்தியம் பிடிக்கற மாதிரி இருந்துச்சு,சரி லாஸ்ட்டா ஒரு முறை போன் பண்ணுவோம்னு போன் பண்ணேன். போன் எடுத்ததும் சொல்லு, எப்டி இருக்கனு கேட்டான், பதில் சொல்லவே முடியல, திரும்பவும் அவன் கேக்குதா நா பேசற்துனு கேட்டான், கேக்குது நீ எப்டி இருக்கனு கேட்டேன்.
நல்லா இருக்கேன்,Training முடிஞ்சிடுச்சு,இனிமே சிறுசேரில தான் பிராஜெட்க்கு ரிப்போர்ட் பண்ணனும்னு சொன்னான். எப்டி அவ்ளோ தூரம் போவ, ஆபிஸ் cab இருக்கானு கேட்டேன், இல்ல வீடு மடிப்பாக்கம்க்கு மாற போறோம், அடுத்த வாரம் ஷிப்ட் பண்ணிடுவோம்னு சொன்னான். அது வரைக்கும் என்கிட்ட ஷார் பண்ணிக்காத விஷயமே இல்ல, ஆனா இவ்ளோ நடந்துற்கு எனக்கு தெரியல, நா அவனவிட்டு ரொம்ப தூரம் போன மாதிரி இருந்துச்சு.என்கிட்ட ஏன் பேசல இவ்ளோ நாளா, ஒரு தடவ கூட பேசனும்னு தோனவே இல்லையானு கேட்டேன், நீ கோவமா இருந்த அதான் நீயா புரிஞ்சிக்கற வரைக்கும் உனக்கு டைம் குடுக்கலாம்னு தான் போன் பண்ணலனு ரொம்ப casualலா சொன்னான். அப்போ நா பேசாட்டி அப்டியே விட்றுப்பியானு கேட்டேன்,பேசிற்பேன் அப்டியேலாம் எப்டி விட்றுப்பேன்னு சொன்னான்.அவன ரொம்ப பாக்கனும் போல இருந்துச்சு, அவன் அவ்ளோவா interest இருக்கா மாதிரி பேசலனாலும் என்னால கேக்காம இருக்க முடியல.நா உன்ன பாக்கனும் போல இருக்கு நாளைக்கு மீட் பண்லாமானு கேட்டேன், அவனும் பாக்கலாம்,எப்போனு கேட்டான். நீயே சொல்லு நா சொல்லி அது உன் பிளான் கூட கிளாஷ் ஆச்சுனானு சொன்னேன்.
நாளைக்கு ப்ரண்ட் மீட் பண்லாம்னு இருந்தேன், பரவாயில்ல நா மதியம் மேல போய் பாத்துக்கறேன் நீ கெளம்பும் போது எனக்கு மெசேஜ் பண்ணுனு சொன்னான்.சரி வேற ஒன்னும் இல்லையானு கேட்டேன், மனசுகுள்ள ஒரு முறை லவ் யூ சொல்லிட்றா ப்ளீஸ்னு இருந்துச்சு, ஆனா அவன் வேற ஒன்னும் இல்ல வெச்சிட்றேன்னு சொன்னான். போன் வெச்சதும் எதுக்கு அவன இப்போ பாக்கனும்னு போறோம், திரும்ப பேசி சண்ட வந்தா, பேசாம அப்டியே விட்றுலாம்னு தோணுச்சு. ஆனா அடுத்த நாள் சீக்கரமே அலார்ம் வெச்சி எழுந்து ரெடி ஆகிட்டு போனேன். அவன பாத்ததும் அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு, முகத்த பாத்ததும் கண்ணுக்கு முதல்ல பட்டது பிம்புல் தான், டக்குனு எப்பவும் போல முகத்த தோட்டேன், ஏன் இப்டி வந்துற்கு body heat ஆகிச்சானு கேட்டேன், அவன் அதல்லாம் இல்ல, ஏன்னு தெரியலனு சொன்னான், ஒரு restaurantகு போனோம். பத்து நிமிசம் அவன பாத்துட்டே இருந்தேன், எதுக்கு புதுசா பாக்கற மாதிரி பாக்கறனு சிரிச்சான், இல்ல புதுசா பாக்கற மாதிரி தான் இருக்குனு சொன்னேன்.
ஜூஸ் வந்துச்சு, அப்போ தான் பேசலாம்னு அவன் கைய ரொம்ப நாள் கழிச்சு பிடிச்சேன், அப்போ பாத்து ஒரு கால் வந்துச்சு,எங்க ரெண்டு பேர்க்கும் மியூசுவல் பிரண்ட் ஒருத்தி அவக்கிட்ட இருந்து போன். என்னாச்சுனு கேட்டேன், இல்ல அவளோட தம்பி ஊர்ல இருந்து வரானாம் அவபோய் பிக்கப் பண்றாலாம், central போறதுக்கு கூட கூப்டானு சொன்னான்.சரி அவ எதுக்கு உன்ன கூப்பட்றா, அவளுக்கு வேற யாரும் இல்லயா கூட்டிட்டு போகனு கேட்டேன், நீ அவ கூடலாம் பேசிட்டு தான் இருக்கியானு கேட்டேன். இல்ல ஒரே ஆபிஸ் அதனால சும்மா பேசுவானு சொன்னான்.சரி வரலனு சொல்லிட்டியானு கேட்டேன், இல்ல இன்னும் one hourல தான் வர சொல்லிற்கா, அதான் வரேன்னு சொல்லிற்கேன்னு சொன்னான். அப்போ எனக்கு வந்துச்சு பாருங்க ஒரு கோவம், என்ன வர சொல்லிட்டு இப்போ ஏன் இத கமிட் பண்ணிக்கிட்டனு கேட்டேன், இல்ல அவ தம்பிக்கு சும்மா intro குடுக்கறேன்னு சொன்னா,அப்டியே லன்ச் போலாம்னு சொன்னானு சொன்னதும் அழறதா,கத்தறதானு தெரியல.இப்போ என்ன சொல்ல வரனு கேட்டேன், இல்ல இன்னும் ஒன் அவர் இருக்கு, உன்ன பஸ்ல விட்டுட்டு நா போறேனு சொன்னான். வந்த கோவத்துக்கு அப்டியே அரையலாம் போல இருந்துச்சு😓
அப்டியே கலம்பிட்டேன், ஏன் போறனு கேட்டான், உன்கிட்ட பேச ஒன்னும் இல்ல அதான்னு சொன்னேன், அப்டியா நா அப்ப போகவானு கேட்டான், போ எனக்கு பஸ் ஏற தெரியும், எவளுக்காவது பஸ் ஏற தெரியாம இருக்கும் அவளுக்கு போய் ஹெல்ப் பண்ணு, எனக்கு என்ன பாத்துக்க தெரியும்னு சொல்லிட்டு வேகமா பஸ்கு போயிட்டேன். பஸ்ல போகும் போது அவ்ளோ அழுதேன்,ச்ச இவன எதுக்கு நம்ம இனி பாக்கனும்னு முடிவு பண்ணேன், இந்த முறை ப்ளாக் பண்ணல, ப்ளாக் பண்ணாம அவன Fbல பாத்துட்டே இந்த பேஸ்ல இருந்து வெளிய வரனும்னு நினைச்சேன், கிட்டதட்ட டிப்ரசன்ல தான் எப்பவும் இருந்தேன்,அழுகறது, தூங்காம கண் முழுக்க கருவலையம், வீட்டுக்கு போனா கூட சரியா யார்கிட்டையும் பேசாம, பித்து புடிச்சா மாதிரி, pre break up Stageல இருந்தேன். அப்போ தான் என் ப்ரண்ட்ஸ் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க, அவங்க இல்லாட்டி அப்போவே உடஞ்சிற்பேன்.They made my days so beautiful ❤️இப்பவும் எனக்கு அந்த stage நெனச்சா தலசுத்துது. ஆனா படிக்கறதுல,friends கூடனு என்னையே நான் டைவேர்ட் பண்ணிக்கிட்டேன்.அவன் என் வாழ்க்கைல வந்ததாவே மறக்க ஆரம்பிச்சுட்டேன்னு ப்ரண்ட்ஸ் கிட்ட சொன்னாலும், யாரவது ரோட்ல ஜோடியா கைய புடிச்சு நடந்து போன அவன் நியாபகம் வந்துடும்😪
அவன் இல்லாம நான் ஜாலியா தான் இருக்கேன்னு அவனுக்கு காட்டிக்க Fbல போட்டோஸ் போடுவேன். பாத்து சாவுடானு தோணும்😂
Pics: PG life 😍
https://m.facebook.com/story.php?story_fbid=2098362850200222&id=100000795812456
No comments:
Post a Comment