Saturday, February 23, 2019

காதலே, காதலே 1 to 5 - Hema Shankar

காதலே, காதலே
Hema Shankar

---

Day 1, காதலே, காதலே

College first year-ல நா first bench, நா உக்காந்துட்டு இருந்த எடத்துல இருந்து கொஞ்சம் திரும்பனாலே போதும் அவன் முகம் தான் தெரியும்.

ஒரு நாள் அவன் leave போட, நானும் என்னடா இவன காணமேனு அவன் பக்கத்துல உக்கார்ர பைய்யன் கிட்ட “உங்க friend இன்னிக்கு leave போல, என்னாச்சு" - னு எதார்தமா கேக்க, "வயித்த வலி hostelல இருக்கான்" - னு சொன்னான்.
 
அந்த friend hostel போயிட்டு, நம்ம ஆளு கிட்ட  “டேய் அந்த பொண்ணு நீ ஏன் வரலனு கேட்டாடா, அவ உன்ன தான் பாக்கறாடா" - னு சொல்ல, மறுநாள் Classக்கு வந்ததும் ஒரு look குடுத்தான் பாருங்க.. என்னமோ நா அவன் கைய புடிச்சி இழுத்தா மாதிரி வேறப்பா😂

அட சய், ரொம்ப சீன் போடாதடானு தான நம்ம react பண்ணிற்கனும், ஆனா breakல eye to eye பாத்ததால, “இப்போ பரவாலையா stomach pain” அப்டினு கேக்க, சிரிச்சிட்டே இப்போ ஓகேனு சொன்னான்.

அந்த ஓகேல தான் ஆரம்பிச்சது எல்லாமே 😍

https://m.facebook.com/story.php?story_fbid=2067072323329275&id=100000795812456

---

Day 2, காதலே காதலே♥️♥️♥️

முதல்முறை phoneல பேசறோம்.

அவன்: சொல்லு.. என்ன பேசறதுனு தெரியல
நா: சரி, உன்ன பத்தி சொல்லு

He: நா சங்கர், உனக்கு தெரியுமே.. அதான் classல self introல சொன்னனே என்ன பத்தி

நா: எது, stageல நின்னு, ஒரு நிமிசம் dance ஆடிட்டு போனியே அதான் intro வா. நா கவனிக்கல அப்போ.

He: சரி, நா சங்கர், சென்னை, வளந்தது எல்லாம் சைதாபேட்ட, இப்போ அம்பத்தூர்ல இருக்கோம், அப்பா, அம்மா, தம்பி.

Me: wow. U r from Chennai. Cool. Where u studied? I have been to Chennai. My relatives r in nugambakkam. i guess saidapet is near to tat.

He: நா சைதாபேட்ட Govt Schoolல படிச்சேன். தமிழ் medium. அப்போறம் உன் அளவுக்கு Peter விட வராது. English தப்பா பேசனா சிரிச்சிடாத. சைதாபேட்டல தான் பொறந்ததுல இருந்து இருந்தோம்.செம்மையா இருக்கும். அங்க என் friends,எங்க area பசங்க,play ground, cricket,இப்டியே செம ஜாலியா இருக்கும்.இங்க வந்து hostelல ரொம்ப கஷ்டமா இருக்கு.

இப்டியே சைதாப்பேட்ட பத்தி ஒரு 15 நிமிசம் மூச்சு விடாம பேசனான்.

அந்த innocence, தயக்கமே இல்லாம பொண்ணுக்கிட்ட பேசறோம்னு இல்லாமா இயல்பா இருந்தது.

நம்ம கடந்து வந்த, பார்த்த உலகத்துக்கு நிறைய வித்தியாசம் இருக்க, புதுசா அவனோட உலகத்த கேக்கற அந்த feel இருக்கே...
நீ பேசிட்டே இருப்பியாம், நா கேட்டுட்டே இருப்பனாம்னு இருந்துச்சு ❤️

https://m.facebook.com/story.php?story_fbid=2069442389758935&id=100000795812456

---

காதலே,காதலே - பகுதி -3

அவன் கிட்ட பேசும் போது எப்போவும், நம்ம friendsசா தான பேசறோம், வேற ஒன்னும் இல்லையேனு கேட்டுட்டே இருப்பான். நானும் ஆமா, அதுல உனக்கு என்ன டவுட்னு சொன்னாலும் மனசுக்குள்ள சிரிச்சிக்குவேன். friends கிட்ட இவன பத்தி நிறைய சொல்லிட்டே இருப்பேன்.

அப்போ பொங்கல்னு ஊருக்கு போயிட்டோம். வீட்ல இருந்ததால நானும் பேச முடியல, அவனும் பண்ணல. அம்மாக்கு உடம்பு சரி இல்ல,காய்ச்சல் விட்டு, விட்டு வருதுனு msgல சொன்னான். சரி hospital கூடிட்டு போ, blood test எடுக்க சொன்னா எடுத்துடுங்கனு சொன்னேன். அப்புறம் அவனும் எதுவும் contact பண்ல, நா பண்ண msgக்கும் reply வரல. திரும்பவும் leave முடிஞ்சி college வந்த அப்புறம் தான் பேசனோம்.

எதோ ரொம்ப வருஷம் பாக்காமா இருந்தா எப்டி இருக்குமோ, அப்டி தான் இருந்துச்சு. ஆனா அப்பவும் கொஞ்சம் dulla இருந்தான். என்னாச்சுனு கேட்டதுக்கு, அம்மாவ நினைச்சி தான் ஒரே கஷ்டமா இருக்கு. இப்போ உடம்புக்கு பரவால்லையானு கேட்டேன். இப்போ பரவால்ல ஆனா ரெண்டு வாரம் ரொம்ப கஷ்டபட்டுட்டாங்கனு சொன்னான்.. வீட்ல இருந்து நீ பாத்துட்டு வந்துற்கலாம்லனு கேட்டேன். இல்ல அவங்க தான் இப்போ உடம்பு தேவலாம்னு college போக சொன்னாங்கனு சொன்னான்.

சரி, நான் அம்மா கிட்ட பேசட்டுமா, அவங்க health பத்தி கேக்கட்டுமானு கேட்டேன்.. வேணாம்னு சொல்லிட்டான். இப்டியே சரியா பேசிக்காம ஒரு மாசம் ஓடிடுச்சு. Classல பாக்கற்தோட சரி.. நானும் அவன் family, அம்மானு கவலையா இருக்கானு பேசல. Mobileல atleast forward msg, gud mng, gud night வராதானு, அதையே பாத்துட்டு, ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

Model practical வரப்போகுதுனு observation, record, lab இப்டி ரொம்ப busya போயிட்டு இருந்துச்சு. நேர பாத்தா கூட பேச நினைக்கறான்னு தெரியும், ஆனா பேசாம போயிடுவான். அப்போ தான் friend ஒருத்தி registerல அவங்க அப்பா போன் நம்பர் இருக்கு, அவங்க அம்மா எப்டி இருக்காங்கனு நீயே போன் பண்ணி கேளுனு சொன்னா. நானும் போன் பண்ணேன். முதல் மூணு தடவ அவங்க அப்பா எடுத்துட்டாரு, என்ன பேசறதுனே தெரியாம கட் பண்ணிட்டேன். நாலாது டைம் அவங்க அம்மா எடுத்தாங்க. எனக்கு பயங்கர பதட்டமா இருந்துச்சு. ஆனாலும் Aunty நா சங்கர் கூட படிக்கிற பொண்ணு, இப்போ உடம்பு பரவால்லையானு கேட்டேன்.

அவங்களும், உன் பேரு என்னமா? சங்கர் பேச சொன்னானா?? எனக்கு எதுவும் இல்ல.. ஜொரமா இருந்துச்சு, இப்போ ஒன்னும் இல்ல.. கொஞ்சம் ஜீரண பிரச்சனை தான், சரியா போயிடும்னு சொன்னாங்க. அவங்ககிட்ட பேசிட்டேன்னு அவ்ளோ ஒரு சந்தோசம். ஆனா அந்த சந்தோசம் ரெண்டு நாளைக்கு கூட நிலைக்கல. Lunch time hostel messகு வந்துட்டோம், அப்போ class friend, என் friendகு call பண்ணான். சங்கர் அம்மா தவரிட்டாங்கனு. Mess hallல இத சொன்னதும், கை, கால்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு.. Roomக்கு அழுதுட்டே ஓடி போய் Mobile பாக்கறேன் 2 Missed cal இருக்கு. திரும்ப call பண்ணாலும் line போகல.. Roomல கத்தி கத்தி அழ அரம்பிச்சிட்டேன், friendsலாம் கட்டி பிடிச்சிட்டு, அழாதனு சொல்லிட்டு, அவங்களும் அழ ஆரம்பிச்சிட்டாங்க.

https://m.facebook.com/story.php?story_fbid=2070326596337181&id=100000795812456

---

காதலே,காதலே 🖤 பகுதி-4

போன் பண்ணாலும் அவனுக்கு call போகவேயில்ல. நானும், என்னோட friendsசும் ரொம்ப யோசிக்காம warden கிட்ட permission வாங்ககிட்டு போகலாம்னு போனோம். போனதும், என்ன விஷயம்னு கேட்டுட்டு,permission தர முடியாதுமா, நீங்க இத்தன பேர் போகறதுக்கு parents,department, principal permission வாங்கனும்னு சொல்லிட்டாங்க.அவங்க allow பண்ணாலும், நீங்க போறதுனால என்ன உதவி அவங்களுக்கு, அவங்க வீடு எப்டி இருக்கும்னு தெரியாது, நீங்க எல்லாரும் வேற,வேற ஊரு, அங்க போனா கூட எங்க தங்குவீங்கனு, அதல்லாம் allow பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க.இன்னொரு பக்கம், boys எல்லாரும் சென்னைக்கு பஸ் ஏறிட்டாங்க.. அவங்களுக்கு இந்த மாதிரி rulesலாம் இல்ல.

Warden கிட்ட அவ்ளோ நேரம் கேட்டும் அவங்க கடைசியா, அப்பா/அம்மா வந்து கூட்டிட்டு போனா வேணும்னா நா permit பண்வேன்னு சொல்லிட்டாங்க.உடனே எங்க அப்பாகிட்ட தான் போன் பண்ணேன், வந்து கூட்டிட்டு போங்க, நம்ம போய் பாத்துட்டு வருவோம்னு. ஆனா அப்பாவும், நா கெளம்பி வந்து உன்ன கூட்டிட்டு வரதுகுள்ள அங்க எல்லாம் முடிஞ்சிருக்கும். நீ ஏன் மா இவ்ளோ கேக்கற, அம்மாக்குலாம் இது சொன்னாலே கத்த ஆரம்பிச்சிடுவாங்க.அந்த தம்பி காலேஜ் வந்த அப்புறம் கேட்டுக்கோனு சொல்லிட்டாரு.

அப்போ ஒரு கோவம் வந்துச்சு பாருங்க, ஏன் தான் பொண்ணா பொறந்து தொலச்சோமோ, இப்டி எல்லா எடத்துலையும் இவ்ளோ rules,ஒரு deathகு போறதுக்கு இவ்ளோ permission கேக்கறோம் இப்டி அலக்கழிகறாங்கனு இன்னும் அதிகமா தான் அழுகையா வந்துச்சு. Friends எல்லார் வீட்டலயும் இதே பதில் தான் குடுத்தாங்க. பசங்க போயிட்டு தான் அங்க என்ன நடக்குதுனு தெரிஞ்சது. அப்பவும் அவன் கிட்ட பேச முடியல. அந்த ரெண்டு நாள் சுத்தமா தூங்கவே இல்ல. என்ன பண்றான், எப்டி இத பத்தி அவன் கிட்ட ஆறுதல் சொல்றதுனு ஒன்னும் புரியல.

2 நாள் கழிச்சி அவனே என் msg பாத்துட்டு போன் பண்ணான்.சரி நம்ம அழுக கூடாது, அவன இன்னும் கஷ்ட படுத்த கூடாதுனு தான் போன் attend பண்ணேன். என்னச்சு, எப்டி,நீ எப்டி இருக்கனு தயங்கி கேட்டேன்.எல்லாம் போச்சு,நான் கூடவே இருந்து பாத்துற்கலாம்,இப்டி பாத்துக்காம போயிட்டேனு அழ ஆரம்பிச்சுட்டான். அழாத, தைரியமா இரு, நீ தான் வீட்ல கொஞ்சம் boldடா இருக்கனும், உன் தம்பி,அப்பாக்கு நீ தான் இப்போ ஒரே ஆறுதல், friends நாங்கலாம் இருக்கோம் அப்டினு சொன்னாலும் என்னால சமாதானம் பண்ண முடியல.

ஒரு மணி நேரம் பேசிற்பேன், சரி வெக்கட்டுமா, வீட்ல இருக்க, போய் தூங்கு, நாளைக்கு பண்றேன்னு சொன்னதுக்கு, இல்ல இன்னும் ஒரு 5 mins பேசு, எனக்கு உன் கூட பேசனும் போல தான் இருக்குனு சொன்னான். இப்டி என் கிட்ட சொல்றது அது தான் first time.ஒரு பக்கம் கவல, இன்னொரு பக்கம் என்கிட்ட பேசனும்னு அவனா சொல்றானேனு சந்தோசம். சரி தூங்க போலாம், தூங்க போலாம்னு சொல்லியே 5 mins, 5 mins சொல்லி 1 மணி வரை பேசிட்டு இருந்தான்.பேசி முடிக்கும் போது, உன் கிட்ட எல்லாத்தையும் share பண்ணிக்கிட்டதால கொஞ்சம் மனசே light ஆகிடுச்சு.. 2 நாளா எவ்ளோ பாரமா இருந்துச்சு,Thanks என் கிட்ட இவ்ளோ நேரம் பேசனதுக்குனு சொன்னான். அப்ப ஒன்னு தோனுச்சு பாருங்க “ டே, நீ எப்போ பேசுவனு வெயிட் பண்ணிட்டு இருந்தேன், இப்டி சொல்றையே டானு” ♥️♥️♥️

https://m.facebook.com/story.php?story_fbid=2071479626221878&id=100000795812456

---

காதலே, காதலே பகுதி-5 🖤🖤🖤

College annual day (GECOFEST) நடந்துச்சு,அப்போ orchestraல கண்மணி அன்போடு(குணா) பாட்டு பாடினேன், Orchestra முடிஞ்சி backstageல பாத்தா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான். செமயா பாடின,எனக்காக இன்னொரு டைம் போன்ல பாடிக்காட்னும்,night call பண்றேன்னு சிரிச்சிட்டே போயிட்டான்.அப்போ வரைக்கும் நல்லா இருந்த என் குரல், அவன் இப்டி சொன்னதும் கீச்,கீச்னு ஆகிடுச்சு.Roomல பாடினா friends எல்லாரும் கலாய்பாங்கனு TV hall கிட்ட போயிட்டு பாட ஆரம்பிச்சேன், third yr அக்கா அங்க இருகற்த பாக்காமா நா பாட்டுக்கு பாடிட்டு இருந்தேன்.கிட்ட வந்த அக்கா ‘first yr தான, அதுக்குள்ளவா, வெலங்கிடும்னு’ சொல்லிட்டு போயிட்டாங்க.இத போன்ல கேட்ட அவன், அதெல்லாம் வெலங்கும்னு அந்த அக்கா கிட்ட சொல்லுன்னு சொன்னான்😍

University practicals ஒரு வழியா முடிஞ்சது. Sem study holidayகு எல்லாரும் ஊருக்கு போனோம். எனக்கு போகவே மனசு இல்ல, வீட்ல அம்மா அவ்ளோ strict officer,அதுவும் mobile கையில பாத்தாங்க சாமி ஆடிடுவாங்க.ஆனாலும் நா தெரியாம யூஸ் பண்ணிட்டு இருந்தேன். Sem holsல இது இது படிக்கலாம்னு daily discuss பண்ணுவோம், ஆனா நா வீட்டுக்கு போயிட்டா TV,படம்,friends,அப்பாகூட சுத்தறது,இது தான் வேலையே.daily night அவன் கிட்ட இது படிச்சிட்டையானு கேட்டா, படிச்சிட்டேன் நீயும் முடிச்சிட்டலனு கேப்பான்.எனக்கு அப்டியே தூக்கு வாரி போடும், அப்போ தான் இவன் பயங்கர படிப்பாளினு தெரிஞ்சிகிட்டேன். நா போன் யூஸ் பண்றதுனால divert ஆகறேன்னு அவனா நினச்சிட்டு, Sem முடியற வரைக்கும் நீ Mobile அதிகமா யூஸ் பண்ண கூடாது, நானும் call பண்ணி disturb பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான்.

Semesterகு பேய் மாதிரி விடிய, விடிய நான் படிப்பேன். அவன் study holsல படிச்சிட்டு, night 10 மணிக்கு தூங்கிட்டு,morn 7 மணிக்கு எழுந்து ரெடி ஆகி coola வருவான்.அப்போ இருந்து தான் அவனுக்கும் எனக்கும் உள்ள difference புரிய ஆரம்பிச்சது.அவன் எவ்ளோ பொருப்பா இருக்கான்,படிக்கற விஷயம்னு வந்துட்டா diversion இருக்க கூடாதுனு எனக்கும் சேர்த்து care பண்றான்னு தெரிஞ்சிகிட்டேன்.Exams முடிஞ்சி ஊருக்கு ஒரு மாசம் லீவ்ல போறோம்.college bus stopல பாத்துட்டு,சரி பத்திரம், நா Banglore போறேன் மாமா வீட்டுக்கு,msg பண்றேன், Mobile பாத்துட்டே இருக்காத, உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு,bye அப்டினு சொல்லிட்டு போயிட்டான்.பயங்கர அழுகையா வந்துச்சு, Salem to Tiruvannamalai நாலு மணி நேரம் வரதுகுள்ள நாலு யுகம் மாதிரி இருந்துச்சு.

Bus stopல வெயிட் பண்ணிட்டு இருக்க என் அப்பாவ பாத்ததும் அவ்ளோ அழுக.நா அழுகற்த பாத்துட்டு எங்க அப்பா, ஏண்டா குழந்த அழுகற, exam சரியா பண்லயா, போயிட்டு போகுது, அப்பா வந்துட்டேன்ல, உனக்கு பசி தான், அதனால தான் இப்டி அழுகற, வீட்ல அம்மா இட்லி,தக்காளி சட்னி சூட செஞ்சு வெச்சிற்காங்க, சாப்டா சிரியாகிடுவானு சொல்ல, சிரிப்ப அடக்கவே முடியல😂😂😂 யோவ் daddy, நா மனசுல என்னமா feel பண்ணிட்டு இருக்கேன், அழுதாலே பசிக்கு தான் அழுகறேன்னு இப்டி முடிச்சிட்டியேனு இருந்துச்சு. அவ்ளோ தான் எங்க அப்பா..நா தான் உலகம்,நா தான் உயிரு..ஒரே பொண்ணு, சின்ன வயசுல இருந்து அவ்ளோ செல்லம், அம்மா கொஞ்சம் strict ஆனா ரொம்ப பாசம்,அதுவும் எங்க அப்பா குடுக்கற ஓவர் செல்லத்துல நா ஆடக்கூடாதுனு,என்ன தட்டி வெப்பாங்க🤭

அப்பா,அம்மா ரெண்டு பேருமே teachers,வீட்ல நிறைய பேர் teachers தான்.தாத்தா அத விட strict, Joint family ( தாத்தா,பாட்டி, பெரிம்மா,பெரிப்பா,சித்தி,சித்தப்பா,மாமாஸ், அண்ணா, அக்கா, தம்பி, அத்தைஸ், தாத்தா தங்கைகள், அவங்களோட பசங்க,Cousins ) இப்டி எல்லாரும் பக்தக்துலையே.என் நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க.இந்த ஜாதிய இந்து family set upல loveல, லா கூட சொல்ல முடியுமானு🙄🙄🙄இதுல ஒரே ஆறுதல் அப்பா😍லவ்வுக்கு என்னைக்குமே எதிர்த்து நின்னது இல்ல, கொஞ்சம் நியாயமா நடந்துப்பார்னு ஒரு நம்பிக்கை♥️

https://m.facebook.com/story.php?story_fbid=2072958762740631&id=100000795812456

---

No comments:

Post a Comment