Monday, February 4, 2019

கல்வியும்,வேலையும்தான் பெண்களுக்கு எப்பவுமே நிலையானது,

பனிமலர் பன்னீர்செல்வம்
2019-02-04

Big day in my life ❤️

வாழ்க்கைல எல்லாருக்கும் ஹீரோயிக் மொமண்ட்னு ஒண்ணு இருக்குமானு தெரியாது ஆனா எனக்கு மாஸா ஒண்ணு இருக்குன்னா, அது இன்னைக்கு ஆறு வருசம் முன்னாடி நடந்துச்சு. இப்பயும் நினைக்கும்போது புல்லரிக்கும்.

எல்லாரும் புதிய தலைமுறைல வேலை பாக்கனும்னு ஆசைபட்டபோது அந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப சுலபமா கிடச்சுது. ஆனா அது நிலைக்கல, கட்டாயபடுத்தி வேலைய விட வேண்டிய சூழல் வந்துச்சு, அதோட வேலைய விட்டு துரத்தப்பட்டேனு யாரால வேலைய விட்டேனோ அவுங்களே சொல்லி சொல்லி சந்தோஷபட்டுடிருந்தாங்க. மொத்தமா எல்லாத்தையும் தூக்கிப் போட்டு வெளிய வந்ததும், மீண்டும் அடைக்கலம் குடுத்தது அதே புதிய தலைமுறைதான். அப்பவும் நான் எந்த கஸ்டமும்படல, சீனிவாசன் சார்க்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல கால் பண்ணிருந்தேன், என்ன பண்றீங்கனு கேட்டாரு ஒன்னும் பண்ணலனு சொன்னேன், திரும்ப வந்துடுங்கனு சொல்லிட்டு போன் வச்சுட்டாரு. அப்பவும் நிறைய பேருக்கு புதிய தலைமுறை  கனவுதான் அதுனால நான் சார் சொன்னத முழுசாகூட நம்பல, நாலு நாள்க்கு பிறகு ஹெச்ஆர் கூப்டு எப்ப ஜாய்ண்ட் பன்றீங்கனு கேட்டாரு, ஆனந்த கண்ணீர் எப்டி இருக்கும், ஒரு பொய்ய திரும்ப திரும்ப சொல்லிடிருக்கும்போது அத இல்லனு நிருபிக்குற மாதிரி தானா ஏதோ ஒன்னு நடக்கும்போது அதெல்லாம் வேறலெவல் சந்தோஷம். சித்ரா அப்பார்ட்மெண்ட் பால்கனில போன்ன கட் பண்ணிட்டு சந்தோஷத்துல குதிச்சது இன்னும் நியாபகம் இருக்கு. அது வாழ்க்கை முழுமைக்குமான சந்தோஷம், பொக்கிஷம். உங்களுக்கு ஒரு வேலைதானேனு இருக்கும், அதுக்கு முன்னாடி ஒரு வருசம் நீங்க பனிமலரா இருந்து பாத்தாதான் புரியும் அதோட அருமை.

ஒரு வேலை, பொருளாதார சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு என்னவெல்லாம் செய்யும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த நாள் இன்று. தனித்துவிடப்பட்டாலும், வெறிபிடித்து உங்களை குதற ஒரு கூட்டமே துரத்தி துரத்தி வந்தாலும், எப்போது விழுவேன், எப்போது அடிக்கலாம் என காத்திருந்தாலும், உங்கள் அறியாமையை அவரவர் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டதன் விளைவாக அதற்கான தண்டனையையும் நீங்க அனுபவிக்க நேரிடும்போதும், தன் சொந்த ஊரிலேயே அடுத்த ஊருக்கு பஸில் போகத்தெரியாத பிள்ளையை, அத்தனையையும் எதிர்த்து நிற்க துணிச்சலை தரும்னும், நமக்குள்ளேயே இவ்ளோ வலிமை இருக்குனு உணர வைத்தது ஒரு நல்ல வேலையும், மரியாதையான சம்பளமும்தான். நாம அழியனும்னு நினைக்குறவுங்க முன்னாடி வாழ்ந்துகாட்றதவிட மிகச்சிறந்த பழிவாங்கல் வேற எதுவும் இல்ல. அப்படி ஒரு நன்னாள் இன்று.

கல்வியும்,வேலையும்தான் பெண்களுக்கு எப்பவுமே நிலையானது, மற்றவை அத்தனையும் மாற்றத்திற்குட்பட்டதே.

https://www.facebook.com/100003203701947/posts/2050995801683857/

No comments:

Post a Comment