Sunday, March 11, 2018

இராமன் கடந்த தொலைவு

Marx Anthonisamy
Via facebook
2018-03-11

ஒரு secular மனம் என்பதன் பொருள்..
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ராமராஜ்ய யாத்திரை என்பது இராமன் அயோத்தியிலிருந்து சீதையை மீட்க இலங்கை சென்ற பாதையில் நடைபெறப் போவதாக அறிவித்துள்ளனர். அதாவது அதுதான் அயோத்தி முதல் ரமேஸ்வரம் வரை..யாம்.

இதைப் பார்த்த பிந்தான் நான் ஒரு ஆறேழு ஆண்டுகளுக்கு முன் எழுதிய "இராமன் கடந்த தொலைவு" எனும் கட்டுரையைத் தேடிப் பிடித்துப் பதிவு செய்துள்ளேன்.

அவசியம் படியுங்கள். சுமார் 400 பக்கங்கள் உள்ள ஒரு ஆங்கில நூலின் சுருக்கம் அது. அதை எழுதியவர் பரமேஸ்வர அய்யர். ஒரு இராம பக்தர், வால்மீகி இராமயணத்தின் சில காண்டங்களை முழுமையாகப் பாராயணம் செய்தவர்.

ஆனால் காந்தியைப் போல வரலாற்றையும்  நம்பிக்கையையும் இணைக்கக் கூடாது என்கிற பெருமனம் கொண்டவர்.

ஒருமுறை நேரு இலங்கை சென்று திரும்பி வந்தபோது வரவேற்பு நிகழ்ச்சியில் ராஜாஜி "இராவணனை வென்று சீதையை மீட்டு வந்த இராமனைப்போல நேரு வெற்றிகரமாகத் திரும்பியுள்ளார்" எனப் பேசுவதைக் கண்டு மனம் வெதும்புகிறார். இதெல்லாம் நாடுகளுக்கிடையே பகையுணர்வை அல்லவா ஏற்படுத்தும் என நினைக்கிறார்.

பிரிட்டிஷ் அரசில் Mile to inch coloured topo sheets சர்வே வரைபடத் துறையில் பணியாற்ரி வெற்றி பெற்ற அனுபவம், வால்மீகி இராமாயணம், அதில் சுட்டப்படும் கிரக மற்றும் பருவ நிலைகள், முக்கிய  இராமாயணச் சம்பவங்கள் நடைபெற்ற தலங்கலின் பெயர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இராமயணக் காதை நிகழ்ந்த அத்தனை இடங்களையும் ஆய்வில் நிறுவுகிறார். லங்கா எனும் சொல் ஆற்றிடை உருவாகும் மண்ல் திட்டு எனும் பொருளுடையது. இராமன் விந்தியமலையைக் கடக்கவில்லை என அறுதியிட்டு இறுதியாக நிறுவுகிறார்.

இனக்குழு மக்களை  வென்று ஒரு அரசுருவாக்கம் நிகழ்ந்த வரலாறுதான் இராமாயணம் என இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் சொல்வதை பரமேசுவர அய்யரின் ஆய்வு உறுதி செய்கிறது. இன்றளவும் தண்டகாரண்ய வனப் பகுதியில் வாழும் கோண்டு இனக்குழு மக்கள் இராவணனைக் கடவுளாக வணங்குவது குறிப்பிடத் தக்கது.
______________________________________________________________

ஒரு மதச்சார்பற்ற மனம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பரமேஸ்வர அய்யர்.

மதச்சார்பின்மை என்பது நாத்திகம் அல்ல. என் நம்பிக்கை எனக்கு உயர்ந்தது. அதேபோல மற்ரவர்களின் நம்பிக்கை அவர்களுக்கு உயர்ந்தது என்பதையும் ஏற்றுக் கொள்வது.

காந்தியிடம் ஒரு முறை இராமன் அயோத்தியில் பிறந்தாந்த்யானே எனக் கேட்டபோது அவர் பட்டென்று அதை மறுத்தார். "என்னுடைய இராமன் ஒரு வரலாற்று இராமன் அல்ல. அவன் ஒரு இலட்சிய இராமன்" -என்றார்.
________________________________________________________________

கட்டுரையை அவசியம் வாசியுங்கள். பரமேசுவர அய்யர் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாக இருந்தவரும், எல்லோராலும் மதிக்கப்படுபவருமான 'ஏ.பி' என அழைகப்படும் மறைந்த தோழர் ஏ.பாலசுப்பிரமணியத்தின் சிற்றப்பர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1867647569974625&id=100001882006615

No comments:

Post a Comment