Wednesday, March 21, 2018

எதிர்க்கட்சிகளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம

நேற்று இரவு பேசிய காவல்துறை உயர் அதிகாரி கூறியது.

உண்மையில் நாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.  அவர்கள் இந்த அளவுக்கு ரத யாத்திரையை எதிர்த்து பிரச்சினை செய்யாவிட்டால், எங்கள் நிலைமை மிகவும் சிக்கலாகப் போயிருக்கும். 

வழக்கமாக தமிழகத்தில் இது போன்ற ரத யாத்திரைகளுக்கு அனுமதியே கொடுக்கப்படாது.  ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்றதோடு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார்கள். 

அரசின் ஆதரவு இருக்கிறதென்பது தெரிந்தால் இது போல யாத்திரை, நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் காவல்துறையை மதிக்கவே மாட்டார்கள்.  போக்குவரத்து நெரிசல் ஆகிறது, கொஞ்சம் சீக்கிரம் கிளம்புங்கள் என்று கேட்டுக் கொண்டால், வேண்டுமென்றே தாமதம் செய்வார்கள்.   அடாவடியாக பேசுவார்கள்.   கோபமாக பேசினால், உடனே போனை எடுத்து, அரசில் உள்ளவர்களிடம் பேசுவார்கள்.  

எதிர்க்கட்சிகள் ரத யாத்திரைக்கு எதிராக பெரிய பிரச்சினையை எழுப்பியதும், நாங்களே அரசிடம், எப்போது எந்த பிரச்சினை வெடிக்கும் என்பது தெரியாது.  இவர்களை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக அனுப்ப வேண்டும் என்று கூறியதும், ஆட்சியாளர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். 

இதனால் எங்கள் வேலை சுலபமாகி விட்டது.    ரத யாத்திரை நடத்துபவர்களிடம், ஒரு நிமிடம் தாமதித்தாலும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று மிரட்டியதும், மின்னல் வேகத்தில் கடக்கிறார்கள்.  இதே வேகத்தில் இவர்களை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்.   எங்களால் இதை செய்ய முடிந்ததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்றார்.  

ரத யாத்திரை வேகமா போற வீடியோவை நானும் பார்த்தேன்.   பட் வேகம் கொஞ்சம் கம்மியா இருக்கு.  இன்னும் வெரட்டி வெரட்டி வெளுத்தா நல்லா இருக்கும்.

SHANKAR .A ( ARAATHU)

No comments:

Post a Comment