Sunday, March 4, 2018

பெரும்பான்மை மாநிலங்களில் பிஜேபி ஆட்சியா?

Surakkudi DMK
Via facebook
2018-03-04

//ஊடகங்களின் உதவியோடு பிஜேபி கும்பல் செய்யும் பொய் பிரச்சாரம்...//

ப்ரோ, பாத்திங்களா.. பிஜேபி 22 மாநிலங்களில் ஆட்சி செய்யிது..

அப்படியா? அந்த 22 மாநில முதல்வர்களின் பேர் சொல்லு பாக்கலாம்..

அதுவந்து ப்ரோ.. எல்லோரும் பிஜேபி கிடையாது..

அப்படிவா வழிக்கு.. குஜராத், ராஜஸ்தான் போன்ற 8 மாநிலங்களில் மட்டும் தான் பிஜேபி தனி கட்சியாக, பெரும்பான்மையோடு ஆட்சி செய்கிறது... கோவா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம் போன்ற 7 மாநிலங்களில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு ஆட்சி செய்கிறது.. ஆந்திரா, காஷ்மீர், பீகார் போன்ற 7 மாநிலங்களில் வேறு கட்சிகளின் ஆட்சியில் பிஜேபி பங்கெடுத்துள்ளது..

தனி பெரும்பான்மையோடு ஆட்சி செய்யும் அந்த எட்டு மாநிலங்கள் தவிர, மீதமுள்ள பெரும்பாலான மாநிலங்களில், தேர்தல் கமிஷன் உதவியோடு மோசடி & குறுக்கு வழிகளை பயன்படுத்தித்தான் பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது..

எதிர்கட்சிகள் ஜெயிக்கும் வாய்ப்புள்ள இடங்களில், அவர்கள் பெரும்பான்மை பெற முடியாதவாறு தேர்தல் கமிஷன் மூலம் சதி செய்வது.. மத்தியில் இருக்கும் அதிகாரம், பணம் & பதவிகளை கொண்டு ஆசைகாட்டி, சிறு கட்சிகள், சுயேட்சைகளை வளைப்பது.. எதிர்கட்சியில் அதிக உறுபினர்கள் ஜெயித்தாலும், அவர்களை ராஜினாமா செய்யவைப்பது, விலைக்கு வாங்குவது.. இப்படி எல்லாவிதமான முறைகேடுகளை செய்துதான் பிஜேபி பல மாநிலங்களில் ஆட்சி அமைகிறது. கோவா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம்.. இப்படி உதாரணங்களை அடுக்கலாம்.. பீகாரில், எதிர்த்து போட்டியிட்டு தோற்றப்பின்னும், ஒரே ஆண்டில், நித்தீஷ் குமாரோடு மீண்டும் சேர்ந்து ஆட்சியில் அங்கம் வகிக்கும் கேவலம் எங்காவது உண்டா?? தேர்தலின் போது நிதீஷ் குமார் மீது, பீகார் வீதிகளில் மோடி கூவிய நூற்றுக்கணக்கான ஊழல் முறைகேடுகள் என்னவானது??

இப்போதுகூட, திரிபுராவில், பிஜேபி சார்பில் நின்றவர்கள் பெரும்பாலும் முன்னாள் காங்கிரஸ் கட்சியினர், MLAக்களாக இருந்தவர்கள்.. தேர்தலுக்கு முன்பாக பிஜேபிக்கு கட்சிமாறி நிற்கிறார்கள். அதினால் தான், காங்கிரஸ் வாக்குகள் அப்படியே பிஜேபிக்கு சென்றுள்ளது..

மேலும் தெலுங்கு தேசம், சிவசேனை போன்ற கூட்டணி கட்சிகளுடன் பிஜேபிக்கு முட்டலும் மோதலும் உள்ளது.. அவை மீண்டும் கூட்டணி அமைப்பது சந்தேகமே..

https://www.facebook.com/vairavan.kalyanasundaram/posts/424719074615376

No comments:

Post a Comment