ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இங்கே ரத யாத்திரை பிரச்சினையில்லை. அதில் வைக்கப்படும் கோரிக்கைதான் பிரச்சினை. யாத்திரையை எதிர்ப்பவர்கள் அரசியல் சாயத்தை பூசவில்லை, யாத்திரையை நடத்துகிறவர்கள்தான் அதை அரசியலாக்கியிருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் யாத்திரை செல்ல அனுமதி உள்ளது உரிமை உள்ளது என்கிறீர்களே, முஸ்லிம்கள் இந்தியாவில் கிலாபத் (இஸ்லாமிய ஆட்சி) வேண்டி யாத்திரை போனாலோ, கிறிஸ்துவர்கள் இந்தியாவை கிறிஸ்துவ நாடாக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்து யாத்திரை சென்றாலோ பொத்திக்கொண்டு இருப்பீர்களா?
இப்போது வி.ஹெச்.பி. நடத்திக் கொண்டிருப்பது இந்த ரகம்தான். இந்தியா என்கிற பன்முகத் தன்மைகொண்ட நாட்டை 'ராமர் நாடாக்க வேண்டும்' என்பதுதான் யாத்திரையின் பிரதானப் பிரச்சாரம். இதே தொனியில் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், வேறு மதத்தவர்களும் சென்றால் இப்படித்தான் 144 தடை போட்டு யாத்திரைக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பீர்களா?
நடக்கும் யாத்திரை மத உரிமை சார்ந்தது அல்ல. அப்பட்டமான அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, அதன் இறையாண்மையைக் கேலிக்குரியதாக்கும் யாத்திரை இது.
-பழனி ஷஹான்
No comments:
Post a Comment