Sunday, December 4, 2016

பேரழிவு (17) - ஒரு POS card swiping மெஷின் வாங்குறதுக்கு என்ன தேவைப்படும்

92000 ரூபா குடுத்து போன் வாங்குறவனுக்கு Net banking- னா என்ன, Mobile banking- னா என்னனு தெரில. இதான் நம்ம மக்களோட லட்சணம்.

ரெண்டு வருசத்துக்கு முன்ன வந்த ஒரு வாட்சப் வீடியோவ சொல்லி 'பிச்சக்காரன் கூட கார்டு மெஷின் வச்சிருக்கான்'னு சிரிக்கிறார் மோடி.

'Demonetisation பண்ணியதால் இந்தியர்களுக்கு இப்போ  கல்யாணம் பண்றதே கஷ்டமா போச்சு'னு ஜப்பானில் சிரித்து மானத்தை வாங்கியது போல இன்று உத்திரப்பிரதேசத்தில் பிச்சைக்காரரை மேற்கோள் காட்டி சிரித்துள்ளார்.

இவ்வளவு குரூரமாக யாரும் தன் நாட்டு மக்களின் துயரங்களை அணுகமாட்டார்கள்.

*ஒரு POS card swiping மெஷின் வாங்குறதுக்கு என்ன தேவைப்படும்னு ஒரு பிரதமருக்கே தெரில. தெரியணும்னு அவசியமில்லதான். தெரியலனா அத பத்தி பேசக்கூடாது.*

1) அதுக்கு கரண்ட் அக்கவுண்ட் இருக்கணும்.
2) கரண்ட் அக்கவுண்ட்ல வங்கி எதிர்பாக்குற அளவுக்கு பரிவர்த்தனைகள் இருக்குணும்.
3) உங்க கிட்ட இருக்குற Stocks-ஐ காட்டணும்.
4) Field visit பண்ணி Verification பண்ணுவாங்க.
5) மெஷினுக்கு டெபாசிட்டா சில ஆயிரங்களுக்கு கரண்ட் அக்கவுண்ட்ல இருந்து செக் குடுக்கணும்.
6) அதெல்லாம் இல்லாம மாச மாசம் 750+ taxes மெஷினுக்கு வாடகை அழணும்.

இதெல்லாம் இருந்தாதான் PoS -க்கு தேவையான TID எனப்படும் Terminal Identification Number குடுப்பான் பேங்க்ல. அப்புறம்தான் மெஷின் கைக்கு வரும்.

முட்டாள்களுக்கு இடையில் வாழ்வதுதான் எத்தனை துயரமானது.

Muthu Ram

No comments:

Post a Comment