Sunday, December 18, 2016

அதான் அடக்குமுறை தந்திரம், நீ இயலாதவன் என்பதை உன்னையே நம்ப வைத்தல்

வாசுகி பாஸ்கர்
Via Facebook
2016-Dec-17

இந்தியாவின் பிராமண அரசியலை கடுமையாக எதிர்ப்பவரும் கூட உள்ளூர ஐயமருங்க அறிவானவங்க, intellectual , அவங்களுக்கு எல்லாமே புலப்படும் என இது நம்மாளு குமரிமுத்து மாதிரி படிச்சவங்க சொன்னா சரியா தான் இருக்கும் என்கிற புத்தி விலகவே மாட்டேங்கிது, இதை வெறும் கருத்தியல் ரீதியாக அன்றி அறிவுபூர்வமாக இதை அணுகினால் தான் சமரசம் இல்லாத பதில் கிடைக்கும், சில பிரமிப்புகள் அறவே நீங்கும்!

வர்ணாசிரமம் சாத்தியப்பட்டதிற்கும் நான் சொல்ல போவதற்கும் கூட சம்மந்தம் உண்டு, அறிவு என்பது விசாலமானது, இது தான் அறிவு என குறிப்பிட்டு எதையும் சொல்லி விட முடியாது, ஆனால் இங்கே எது அறிவு என உருவகப்படுத்தி வைத்து இருக்கிறார்கள் என்றால்,

ஒரு வருடத்திற்கு முன்பு மூணாறில் இருந்து முப்பது கிலோமீட்டர் வனப்பகுதியில், தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்த காட்டு நாயக்கமார்கள் என்று ஒரு இனம் வாழ்ந்து வருகிறார்கள், சமீபமாய் தான் அவர்களுக்கு கல்வி வாசனை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்க போட்டியில் முன்னேறி வருகிறார்கள், அவர்களோடு ஒரு மூன்று நாள் அவர்களின் குடிலில் தங்கி அவர்களோடவே மூன்று நாள் பயணித்த அனுபவம் கிடைத்தது, அதில் மிக சுவாரசியமாக மிருகங்களின் குணங்கள், பறவைகளின் சப்தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள், தாவர இயல்புகள், தன்மைகள், யானைகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் எல்லாம் சொன்னார்கள். தங்கள் வாழ்க்கை வாழ்வதற்கு தகுந்த அத்தனை அறிவும், அவர்களை ஒட்டிய தகவல்களும், நமக்கு தெரியாத அபூர்வ தகவல்களும் அவர்களிடத்தில் இருக்கு, இதுவும் அறிவு தான், ஆனால் discovery சானலோ, national geographic சேனல் லோ இவர்களை அணுகி, இல்லை ஆப்பிரிக்க பழங்குடியை அணுகி அவர்களோடவே வாழ்ந்து அவர்களது வாழ்க்கையை, அவர்களிடம் இருக்கும் தகவல்களை Document செய்தால், புத்தகமாக எழுதினால், அந்த வேலையை செய்கிறவரை தான் அறிவாளியாக இந்த சமூகம் பார்க்கிறதே ஒழிய, அவர்களிடத்தில் இருக்கும் நுட்பமான விவகாரத்தை நாம் நூதனமாக பார்த்தாலும், அதை வெறும் அவர்களின் வாழ்வியல் என்று சுருக்கி விடுகிறோம்!

உதாரணத்துக்கு மனித அறிவின் பரிணாமத்திலேயே, மனிதனுக்கு பசி எடுக்கிறது, உடலின் தேவை என்னவென்பது மூளைக்கு போகிறது, தனக்கு கைக்கு கிடைக்கிற ஒரு மிருகத்தை அடித்து தின்கிறான், துரத்துகிறான், பிடிபடவில்லை, பிடிப்பட்டதை தின்கிறான், பசி தீர்கிறது, இத்தொடவே இருந்திருந்தால் மனிதனும் மற்றுமொரு மிருகமாக இருந்திருப்பான். மனிதன் தன் உடல் சக்தியால் சாதிக்க இயலாத ஒன்றை பிடிக்க தந்திரத்தை உருவாக்குகிறான், வலைகள், கூர்மையான ஆயுதங்கள், ஈட்டிகள் உருவாகும் போது அவனை விட பலமடங்கு பலமான உயிரினங்களை தன் தேவைக்கு பயன்படுத்தி கொள்ளும் அறிவு விசாலமடைகிறது, இப்படியே தான் பரிணாமம் அடைந்தது!

தனக்கு தேவையானவற்றை தானே தேடி கொள்ளும் வரை இது ஓகே, ஆனால் இதையும் தாண்டி, அடுத்த கட்டமாக, தனக்கு எட்டாத உயரத்தில் ஒரு பொருள் இருக்கிறது, அதை எடுக்க எதையாவது ஒரு பொருளை கொண்டு வந்து வைத்து அதன் மேல் ஏறியோ, குச்சி வைத்து தாவியோ, ஏணி மாதிரி எதையோ வைத்து அந்த பொருளை எடுக்கிறான் என்று வைத்து கொள்வோம், அது அறிவு! மனித அறிவையே அடக்கும் அறிவு எங்கே வளர்கிறது என்றால், ஏணியை தேடாமல், குச்சியை தேடாமல், அதை எடுத்து கொடுக்க இன்னொரு மனிதனை ஆயுத்தப்படுத்தும் போது, தனக்கான காரியத்தை சாதித்து கொள்ள இன்னொருவரை பழக்கப்படுத்தும் அந்த தன்மை தான் இந்திய வர்ணாசிரம முறை!  இதை அடிப்படையாக கொண்டது தான் குலத்தொழில்!

மனிதனை மனிதன் அடக்குவதையே தொழிலாக செய்யும் பட்சத்தில், காலவாக்கில் அந்த மனிதனிடம் எப்படி வெல்வது என்கிற யுக்தி உங்களுக்கு சாதாரணமாக வந்து விடும், இந்த யுக்தி தான் இந்திய சமூகத்தில் அறிவெனப்பட்டது! நீங்கள் எதை குறித்து தீவிரமாக சிந்திக்கிறீர்களாளோ அது சம்மந்தப்பட்ட அறிவு உங்களுக்கு கூர்மையடையும், மனிதனை மனிதனை வெல்லும் இந்த போட்டியில் இன்னும் யாரெரெலாம் பயிற்சி பெறாமல் இருக்கிறார்களோ அவர்களை தூக்கி விடுகிற வேலையை தான் இந்த சமூகத்தை அறிந்தவர்கள் புரட்சியாய் செய்து வருகிறார்கள்!

ஆக, அறிவும், அறிவு போட்டி என்பதும் மனிதன் மனிதனை வெல்வது என்கிற சூட்சமத்தை கற்று கொள்வது தானே ஒழிய, அதை கற்று கொண்டவர்கள் தான் மனித சமூகத்தில் சொல்லப்படுகிற மேலிடம் என்கிற இடத்தை அடைகிறார்களே ஒழிய, அறிவு தனி சொத்து கிடையாது, அறிவு இது தான் என வகுக்க கூடியது அல்ல, இவர்கள் தான் என சொல்லுவதும் அல்ல!

இந்த படத்தை பாருங்கள், இது ஒரு கேரளா ஓவியர் வரைந்தது, கற்றவர், படித்தவர், உயர்ந்த குலத்தவர் என சொல்லப்படுகிற ஒருத்தர் மனிதன் சுமக்கும் பல்லக்கில் போகிறார், பழங்குடி தோற்றத்தில் உள்ள ஒரு குடும்பம் பயந்து, நடுங்கி, ஒளிந்து பார்க்கிறார்கள். இந்தியாவை விளக்கும் இந்த ஓவியத்தில் பல சங்கதிகள் இருந்தாலும், இதில் கூட பாருங்களேன், காட்டில் பலம் பொருந்திய மிருகங்களை கூட அடக்கி வாழ்கிற, அந்த பலத்தை பெற்றவர்கள், காடு முழுவதுக்கும் அச்சம் கொள்ளாமல் சுற்றி வருகிற தன்மை கொண்டவர்கள். கேவலம் இன்னொரு சக மனிதனுக்கு பயப்படுகிறார்கள் என்றால், அதான் அடக்குமுறை தந்திரம், நீ இயலாதவன் என்பதை உன்னையே நம்ப வைத்தல், காட்டில் மிருகங்களின் பலத்தை அவைகளுக்கு உணர்த்தாமல், அவற்றை தன் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தும், யானையை கட்டுப்படுத்தும் ஐந்தடி மனிதனிடம் இருப்பது ஒரு அறிவென்றால், அந்த மனிதனையே தனக்கு கீழ் வைத்து ஆள்வது இன்னொரு வகையான அறிவு, இது தான் அறிவு என இச்சமூகத்தில் நிறுவ படுகிறது! 

இதை படிக்கும் போது யாருக்கேனும் தக தகவென்று எரிந்தால், இந்த சூட்சமத்தை எல்லாம் தோலுரிக்க கண்டிப்பாக பேச வேண்டும் என பொருள்!

No comments:

Post a Comment