Saturday, December 17, 2016

புரோக்கர் வைகோ 2

Joe Milton
Via Facebook
2016-Dec-17

எப்படிப்பட்ட எதிரியாய் இருந்தாலும் நலம் விசாரிக்க வந்தவரை தடுத்து திருப்பி அனுப்புவது நாகரீகமோ ? இல்லை தான் . ஆனால் இவர் அனுப்பப்பட்டதற்காக மனம் வருந்த மறுக்கிறதே . ஏன் ?

ஏனென்றால் இவர் அநாகரீகத்தின் உச்சம் . அரசியல் செய்பவராக இருந்தால் கலைஞர் குறித்து சாதி ரீதியாக பேசி அசிங்கம் செய்திருக்க மாட்டார் .

தன் தாய் இறப்புக்கு வந்தவர்களின் நோக்கத்தை இழிவுபடுத்தியது அநாகரீகத்தின் உச்சம் இல்லையா ?

முன்னாள் முதல்வரின் இறப்பிலும் ரத்தம் குடிக்கும் ஓநாய் போல தூண்டி விட்டு குளிர்காய நினைத்தது அநாகரீகத்தின் உச்சமில்லையா ?

சில உணர்ச்சிவயப்பட்ட தொண்டர்களின் எதிர்வினைக்காக அறிவுரைகளை அள்ளி வீசும் கனவான்களே .. ஒரு கட்சியின் தலைவர் காட்டிய அநாகரீகத்துக்கு முன் இது மிக சாதாரணம் என்பதை உணருங்கள் .

உடனே .. என்ன இருந்தாலும் என ஆரம்பிப்பதானால் .. ஆம் . என்ன இருந்தாலும் அந்த ஆள் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்திருக்கக் கூடாது என்பதில் ஆரம்பித்தாவது இதில் முடியுங்கள் .

No comments:

Post a Comment