Thursday, June 1, 2017

‘அதிபுத்திசாலித்தன’ கருத்துகளைத் தொடர்ச்சியாக  இங்கு நம்நாட்டில் கக்கியதில்லை.

1. "முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவதால், அவர்கள் தேர்வுகளில் எளிதாக காப்பி அடிக்க முடிகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் பர்தா அணிவதைத் தடை செய்ய வேண்டும். பர்தா அணிவதால், மாணவிகளிடையே பிரிவினைதான் உண்டாகும்" - ஹெச். ராஜா

2. ”போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஒரு மோசடிப் பேர்வழி. அவரை எனக்குத் நன்றாகத் தெரியும்..அய்யாக் கண்ணுவுக்கு, 200 ஏக்கர் நிலமும், ஆடி காரும் இருக்கிறது. அய்யாக்கண்ணுவுக்கும் தீவிரவாதி அப்சல்குருவுக்கும் தொடர்பு இருக்கிறது. அய்யாக் கண்ணுவை கைது செய்து விசாரிக்கவேண்டும்” - டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் பற்றிய கருத்து. சொன்னவர்??? ஹெச். ராஜாவேதான்.

3. "நக்சல் தலைவர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இந்தப் புகழ் தமிழக முதல்வரையே சாரும். இன்னும் பலர் வரிசையில் உள்ளனர்" -ஹெச். ராஜா.  நக்சல் தலைவர் என்ற அவதூறைக் கவனியுங்கள்.

4. ” ”இந்திய அரசியல், ராணுவ வீரர்களின் மனைவியரை போன்றது. ராணுவ மனைவியர் கணவனுக்கு உண்மையானவர்கள் அல்லர். கணவன்மார் எல்லையில் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களது மனைவியரோ கர்ப்பமாகி பிள்ளையை பெறுகிறார்கள். கணவன் இல்லாமலேயே குழந்தையை பெறுகிறார்கள். கணவன் எல்லையில். மனைவி கையில் குழந்தை” - ப்ரஷாந்த் பரிசாரக்

5. ''மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை துண்டித்து எடுத்து வரும் நபருக்கு, 11 லட்சம் ரூபாய் பரிசளிக்க தயார்,'' - யோகேஷ் வர்ஷ்ணி

6. "முஸ்லிம்களின் ஓட்டுரிமையை ரத்து செய்தே ஆகவேண்டும். அவர்கள் வெறும் ஓட்டு வங்கிகளே” - சஞ்சய் ரௌத்

7. ”ஷா ருக் கான் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி” - யோகி ஆதித்யநாத்

8. ”மாட்டிறைச்சி உண்பவர்கள் அனைவரையும் தூக்கில் போடவேண்டும். பாரத் மாதா கி ஜெய் என்று உச்சரிக்காதவர்கள் இந்தியாவிலேயே வாழக்கூடாது” - சாத்வி ப்ராச்சி

9. ”முஸ்லிம்களை வெல்ல, இந்துக்கள் ஒவ்வொருவரும் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்” - சாக்‌ஷி மஹராஜ்

10. ”ராஜீவ் காந்தி ஒரு நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருந்து, வெள்ளைத்தோல் பெண்மணியாக இல்லாமல் இருந்தால், சோனியா காங்கிரஸின் தலைவர் ஆகியிருக்க முடியுமா?” - கிரிராஜ் சிங் (நைஜீரியன் ஹைகமிஷன் இவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கடுமையாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது).

11. ”வன்புணர்வு என்பது சில சமயம் சரியானது; சில சமயம் தவறானது. அரசு எப்போதும் பெண்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்க முடியாது” - பாபுலால் கௌர்

12. ”ஹிந்துஸ்தான் என்பது ஹிந்து ராஷ்டிரம். ஹிந்துத்வா என்பது நமது தேசத்தின் அடையாளம்” - மோஹன் பகவத்

13. விநாயகர் என்பவர் பழங்காலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்ததன் ஆதாரம்” - நரேந்திர மோதி

14. ”ராமனின் அரசு வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் அரசு வேண்டுமா”- சாத்வி நிரஞ்சன் ஜோதி

இவையெல்லாம் வெறும் சாம்பிள்களே. இன்னும் ஆயிரக்கணக்கில் இவைபோன்ற கருத்துகள் கொட்டிக்கிடக்கின்றன. எனக்கு நினைவு தெரிந்து எந்தக் கட்சியையோ அமைப்பையோ சேர்ந்தவர்கள் இத்தனை வெளிப்படையாக இவைபோன்ற ‘அதிபுத்திசாலித்தன’ கருத்துகளைத் தொடர்ச்சியாக  இங்கு நம்நாட்டில் கக்கியதில்லை.

எப்போதோ யாரோ எழுதிவைத்த விஷயங்களில் முரட்டுத்தனமான பிடிப்பு - அதனால் பிறரின் மீது கொலைவெறி என்று நான் சொன்னது இப்படிப்பட்டவர்களையே.

No comments:

Post a Comment