ஜீவா
Via Facebook
2017-06-19
ஒரு பெண் ஒரு ஆண்கிட்ட தனக்கு periods-ன்னு வெளிப்படையா சொல்லலாமா கூடாதா?
அத எல்லாம் போய் எதுக்கு சொல்லணும்ங்குற சந்தேகம் நிறைய ஆண்களுக்கு மட்டுமில்ல, பெண்களுக்கும் இருக்கு.
ஒரு பெண்ணுக்கு ஒரு நண்பன் இருக்குறான்னு வச்சுப்போம், ரெண்டு பேரும் சேர்ந்து எங்கயோ வெளில போக plan பண்றாங்க. ஒரு date சொல்லி அன்னிக்கி போகலாம்னு அந்த ஆண் சொல்றான். அதுக்கு அவ, no, அந்த date எனக்கு set ஆகாது, ஏன்னா, அந்நேரம் எனக்கு periods வரும்னு சொல்றா.
இந்த இடத்துல அந்த பெண்ணைப் பத்தின அந்த ஆணோட பார்வை என்ன?
பெரும்பாலான ஆண்களுக்கு உடனே ஒரு எண்ணம் மனசுல ஓடும். அதாவது இந்த நேரம் இவ periods பத்தி எல்லாம் பெருசா யோசிச்சு plan போடுறா-னா, இவளுக்கு நம்ம மேல interest இருக்கு, நாம இவள sexual ரீதியா அணுகலாம்னு ரொம்ப சுலபமா நினச்சிடுறாங்க.
ஆனா அத எல்லாம் தாண்டி, அந்த பெண்ணோட எண்ண ஓட்டங்கள் வேற மாதிரி இருக்கும்.
1. அவளுக்கு அந்த நாட்கள்ல அளவுக்கதிகமான வலி இருக்கலாம்.
2. அதிகப்படியான உதிரப் போக்கு அவள comfort-டா feel பண்ண விடாம வைக்கலாம்.
3. எழுந்தே நடக்க முடியாத அளவு இடுப்பும் முதுகும் படுத்தி எடுக்கலாம்
4. வாந்தியும் தலை சுத்தும் வரலாம்.
இப்படி periods நேரத்துல பெண்கள் சந்திக்குற பிரச்சனைகள் ஏராளம். அதைவிடவும், ஒரு இடத்துக்கு போறதே மனச ரிலாக்ஸா வச்சுக்கத் தான். அங்க போய், நாமளும் கஷ்டப்பட்டு, கூட வர ஆளையும் ஏன் கஷ்டப்படுத்தணும்ன்னு அந்த பொண்ணு யோசிச்சிருக்கலாம். இத எல்லாம் தவிர்க்கவே அவ தனக்கு periods வரும்-ன்னு சொல்லி இருக்கலாம்.
இப்படி பெண்கள் உலகம்னா என்னன்னே தெரியாதவங்க, ஏதோ ஒரு comfort zone-ல உக்காந்துகிட்டு, இவ என்கிட்ட periods பத்தி பேசிட்டா, அதனால இவளுக்கு நம்ம மேல interest இருக்குன்னு நினைக்குறது என்ன நியாயம்?
எனக்கு காய்ச்சல், எனக்கு உடல் வலின்னு easy-யா சொல்ல முடியுற மாதிரி எனக்கு periods-ன்னு எல்லா பெண்களும் சகஜமா சொல்ல ஆரம்பிச்சா, அவங்களுக்கு உள்ள அசவுகரியங்கள easy-யா ஆண்களால புரிஞ்சுக்க முடியும் தானே...
இந்த மாதவிடாய்ங்குறது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியா இருக்குறது இல்ல. அதனால தான் இத பத்தின சரியான புரிதல் பெண்களுக்குள்ளயே இருக்குறது இல்ல.
சில பெண்களுக்கு எல்லா நாட்கள் போலவே அது ரொம்ப சுலபமா கடந்து போய்டும். அதனால தான் இது ஒரு சாதாரண விஷயம் தானே, இத பத்தி ஏன் ஆண்கள்கிட்ட சொல்லணும், ச்சீ ச்சீ, அதெல்லாம் அநாகரிகமான விசயம்னு சில பெண்கள் நினைக்குறதுக்கும் காரணம் இது தான்.
இத பத்தி வெளிப்படையா பேச ஆரம்பிச்சா தான், ஒவ்வொரு பெண்ணும் அந்த நேரத்துல என்ன மாதிரியான சிக்கல்கள சமாளிக்குறாங்க, அவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எல்லாருக்கும் புரியும்.
தன்னோட மனைவியோ, இல்ல அம்மாவோ, சகோதரியோ இப்படி periods நேரத்துல சுருண்டுக் கிடந்தா, எரிச்சலோடவோ, இல்ல, இதுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லனோ கடந்து போற ஆண்கள் எத்தனையோ பேரு இருக்காங்க. ஒரே ஒரு நிமிஷம் நின்னு, அவங்க கை புடிச்சு, தலைகோதி, சீக்கிரம் சரியாகிடும்னு ஆறுதல் குடுக்குறவங்க எத்தன பேரு?
இது எல்லாத்தையும் விட, தன்னோட periods நாட்கள்ல இருக்குற பெண்கள் சந்திக்குற இன்னொரு பெரிய பிரச்சனை மனநிலை மாற்றம். அவங்க உடம்புல அப்போ சுரக்குற hormones அவங்கள normal-லா இருக்க விடாது. அதனாலயே சில பேருக்கு அளவுக்கு மீறின கோபம், அழுகை, பயம் எல்லாம் வரும். மத்த நாட்கள்ல இருக்குற மாதிரி, periods நாட்கள்ல அவங்களால normal-லா இருக்க முடியாது.
இப்படி பெண்கள் கோபப்படுற நேரத்துல அத புரிஞ்சுகிட்டு சூழ்நிலைகேற்ப சரியானபடி react பண்ற ஆண்கள் எத்தன பேரு?
பெண்ணை இன்னொரு ஆணோ பெண்ணோ, சகஉயிரா நினைச்சுப் பாக்க ஆரம்பிச்சாலே போதும்.
வெளிக்காரணங்களுக்காக ஆயிரம் tension ஆகுற ஆண், உடலியல் சார்ந்து tension ஆகுற பெண்ணை சரியா புரிஞ்சு, அந்த நேரம் அவளுக்கு ஆறுதலா இருந்தான்னா, பெண் அவனோட எந்த mental depression நேரத்துலயும் கூட நிப்பா.
இதெல்லாம் ஆண்கள் புரிஞ்சுக்கணும்னா, பெண்கள் கண்டிப்பா தனக்கு periods-ங்குறத பத்தி வெளிப்படையா பேச தயங்கக் கூடாது. ஆண்களும் ஒரு பெண் தன்கிட்ட periods பத்தி பேசினா, அவ எல்லாத்துக்கும் தயார்ன்னு நினைக்கக் கூடாது....
- இன்னும் பேசுவோம்
No comments:
Post a Comment