Wednesday, June 7, 2017

ஆணின் விந்து மேல் எழுப்பப்பட்ட ஜாதி/மத நம்பிக்கை

வாசுகி பாஸ்கர்
Via Facebook
2017-06-08

யார் தமிழன், யார் தமிழன் இல்லை என்பதற்கான வரையறைகளை பார்த்தாலே அதை ஆணின் sperm தான் முடிவு செய்கிறது. தமிழ் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தாய்வழி லாஜிக்கப்படி தமிழராக இங்கே அறியப்படுவதில்லை, ஆவணப்படுத்தப்போவதும் இல்லை.

ஒரு பார்ப்பன ஆண் வேறு சாதி பெண்ணை மணம் முடிப்பதற்கும், பார்ப்பன பெண் வேறு சாதி ஆணை மணம் முடிப்பதற்குமான மனு சாஸ்திரத்தின் சட்டதிட்டங்களை பார்த்தால், பார்ப்பன பெண் வேறு சாதி ஆணை திருமணம் செய்வதற்கு தான் பதட்டப்பட்டு இருக்கிறது.

ஆணின் விந்து மேல் எழுப்பப்பட்ட இந்த நம்பிக்கை மூலமாக, வேறு சாதி பையனை திருமணம் செய்வதால் பிறக்கும் பிள்ளையும் வேற்று சாதியாகி விடும் என்பதால் தான் பார்ப்பனீயம், சாதிமறுப்பு திருமணம் மூலம் சாதிகள் dilute ஆகிவிடும் என்று பீதியாகிறது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த விதியின் நீட்சி தான், சாதிமறுப்பு திருமணம் செய்யும் பெரும்பான்மையான ஆண்களை விட, பெண்கள் திருமணம்  செய்துகொள்ளும் போது அது ஆணவ கொலையில் முடிகிறது. பெண் மீது குடும்ப கெளரவம் பின்னப்படுவதும் இதனால் தான்.

ஆம்பளை விந்துவை வைத்து சமூகத்தை நிர்ணயம் செய்யும் இதுவே ஒரு அடிப்படை அறிவற்ற தனம் தான்.

புள்ள பெக்குற மிஷின் மட்டும் ஆம்பளை வயிற்றில் இருக்குமானால், பெண்ணை வெறும் கலவிக்கு கட்டிபோடப்பட்டு, பிராணியை போல இவர்கள் நடத்தியிருப்பார்கள்.

இனத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கருவியாக மட்டுமே இனவாதக்காரர்களால் பெண்பார்க்க பட்டிருக்கிறாள். ஒரு இனத்தின் மக்கள்தொகை குறையும் பட்சத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், இந்துக்கள் அதிகம் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும்போது, பெண்ணின் கருத்து அங்கே கேட்கப்பட்டதா வரலாறு உண்டா? யார் சுமக்க வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது?

தான் இன்னார் என்று அடையாளப்படுத்தி கொள்ள விரும்பாத கூட்டத்தால் மட்டுமே இங்கே பெண் சக மனுஷியாக பார்க்கப்பட்டு இருக்கிறாள்.

தாய்வழி, தந்தைவழி உறவு மூலமாக காணப்படுகிற இன அடையாளம் ஏதோவொரு வகையில் அறிவியல் அடிப்படையற்ற பிற்போக்குத்தனத்தை சுமந்து கொண்டே திரியும்.

No comments:

Post a Comment