Chidambaram Periyasamy
Via Facebook
2017-06-25
பார்ப்பண மதம் ஒரு பார்வை
1.யார் அதிக அதிகாரம் படைத்தவர்கள் என்கிற கேள்விக்கு ராமாயணம் சொல்லும் பதில் பிராமணர்கள்
அதாவது பிராமணர்களின் அதிகாரம் என்பது மன்னர்களை விட அதிகமானது என்கிறது அயோத்தியா காண்டம் 111/17
2.சரி அந்த அதிகாரத்தை பெற அவர்கள் போர் செய்யலாமா என்றால் தேவையில்லை
பசு பெண் பார்ப்பணர்கள் மூவரையும் போரில் தாக்கக் கூடாது என்கிறது புறநானூறு 9 ( ரொம்ப சரியான நம்பர் தான்)
சுருக்கமாக சொன்னால் அதிகாரம் வேண்டும் ஆனால் போர் என்று வந்தால் பாவாடைக்குள் ஒளிந்து கொள்ளும் சிறப்பு சலுகையை அவாளுக்கு கொடுக்கிறது சாஸ்த்திரங்கள்
3.திருவிளையாடல் புராணத்தில் ஒரு காட்சி வரும் ஒரு பார்ப்பணர் தன் தாயை புணர்ந்து தந்தையையும் கொலை செய்து விடுவார்
அவருக்கு சிவபெருமான் நேரடியாக காட்சி தந்து கொடுக்கும் தண்டனை சில நாட்கள் பிச்சை எடுத்து உண்ணுவது
தாயை புணர்ந்து தந்தையை கொன்ற பாவமே மூன்று மாத பிச்சையில் முடிவுக்கு வருகிறது
பார்ப்பணருக்கு இது போன்ற கொலைக்கு பாவம் தீர்க்க பிச்சை எடுக்க வேண்டும் என்கிறது மனு 11/72
4.அசுவத்தாமன் பாண்டவர்களின் குழந்தைகளை கொன்றதற்கு அவனை கொலை செய்ய வேண்டுமென்று துடிக்கும் பாண்டவர்களுக்கு
தர்மப்படி அவருக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று சொல்கிறார் கிருஷ்ணன் பாகவதத்தில்
தர்மப்படி மற்றவர்களுக்கு மரண தண்டனை என்றால் பார்ப்பணர்களுக்கு தலைமுடியை எடுத்தால் போதும் என்கிறார் பகவான் கிருஷ்ணன் ஸ்ரீமத் பாகவதம் 1/7/57
அதிகபட்ச தண்டணை என்பது மற்றவர்களுக்கு உயிரை எடுப்பது பார்ப்பணர்களுக்கு மயிரை எடுப்பது என்கிறது மனு 8-379
5.ராமன் சம்பூகனை கொலை செய்வதற்கு
காரணம் அவன் சூத்திரன் என்பதே போதுமானதாக இருந்தது இராமாயணம் உத்திர காண்டம் 75-4
மனு கூட மேல் குலத்தான் தொழிலை கீழ் குலத்தான் செய்தால் அவன் பொருளை தான் பிடுங்க சொல்கிறது மனு 10-85
ஆனால் ராமன் ஒரு படி மேலே போய் சூத்திரன் உயிரையே எடுக்கிறான்
அதாவது தாயை புணர்ந்தவனுக்கு தண்டனை மூன்று மாதம் பிச்சை எடுப்பது
கொலை செய்தவனுக்கு தண்டனை மயிரை புடுங்குவது
ஆனால் கோவிலுக்குள் நுழைந்தவனுக்கு தண்டனை உயிரை எடுப்பது
காரணம் முன்னது கொடிய குற்றம் என்றாலும் செய்தது பார்ப்பணர் பின்னது குற்றமேயில்லை என்றாலும் செய்தது சூத்திரன் அதாவது இன்று பூனுல் போடாத சமூக பிரிவினர்
இதற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல் மகா பெரியவர் தன் தெய்வத்தின் குரலில் ஒரு தந்தை தன் குலம் மேன்மை அடைய வேண்டுமானால் தன் மகளை பருவம் அடைந்தவுடன் பார்ப்பனருக்கு கூட்டிக் கொடுக்க வேண்டும் என்பார்
இதையே தான் மனுவும் சொல்கிறது அதாவது சூத்திரன் பார்ப்பனரின் வைப்பாட்டி மகன் என்கிறது மனு 8-415
இத்தனைக்கும் பிறகும் ஒருவன் இந்த மதத்தை பார்ப்பண மதம் என்று சொல்லாமல் இந்து மதம் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வானேயாயின்
மகாத்மா ஜோதிராவ் பூலேயின் இந்த வரிகளை சமர்ப்பணம் செய்கிறேன்
சூத்திரன் தன் அறியாமையால் பார்ப்பனர்களின் காலை நக்கி நன்மை பெற முயல்கிறான்
நல்ல பட்டம்-- பார்ப்பண கால் நக்கி
No comments:
Post a Comment