Tuesday, June 20, 2017

திராவிட அரசியல், ஓட்டரசியல்

Thameem Tantra
Via Facebook
2017-06-20

நான் ஏன் திராவிட அரசியலை ஆதரிக்கறேன் ?

குறிப்பாக தொடர்ந்து இணைய தலித் போராளிகள்  திராவிட அரசியலை அவதூறாக பேசி வருவதை காணமுடிந்தது... அதில் அவர்கள் திராவிட இயக்கங்கள் ஒன்றும் செய்யவில்லை, திமுக ஒரு சாதி கட்சி, அவர்கள் வேட்பாளர்களைக்கூட சாதிவாரியாகதான் நிறுத்துகிறார்கள் இவர்களா சமூகநீதி பேசுகிறவர்கள் ?
ஏன் திமுகவில் ஒரு தலித் மாவட்ட செயலாளர்கள்கூட இல்லை ? என்று பல கேள்விகள் அவதூறு வாயிலாக பரப்பப்படுகின்றன ...

நேரடியாக விசயத்துக்கு வருகிறேன்....

தமிழ்நாட்டில் பல ஜாதிகள் இருப்பினும்  கௌண்டர்,முக்குலத்தோர்,வன்னியர் ஆகிய மூன்று ஜாதிகள் டொமினன்ட் காஸ்ட்டாக (ஆதிக்கம் செலுத்தும் சாதிகளாக) இருக்கின்றனர்..

இதில் வன்னியர் சமூகம் பொருளாதாரரீதியில் கௌண்டர்களையும் முக்குலத்தோர்களையும் விட மிகவும் பின் தங்கி இருந்தாலும், மக்கள் தொகையில்இவர்கள் மூவர்களே அதிகம்... இவர்களுக்கு பிறகு இதில் நாடார்களை சேர்க்கலாம்.

எனவே தமிழ் நாட்டில் தலித் இயக்கங்களை தவிர எந்த கட்சியை எடுத்தாலும் இந்த நான்கு சாதிகள் அதிகமாக இருப்பார்கள் முக்கியமாக திமுக அதிமுக போன்ற பெரிய கட்சிகளில் அதிகம், இது மிக இயல்பான ஒன்று.

மக்கள் தொகை கணக்கு எடுப்பின் படி தலித் மக்கள் 20-22% இருக்கிறார்கள். ஆனால் கான்செண்ட்ரட்ட் அதாவது ஒரு இடத்தில மையபடுத்தி எங்கும் கிடையாது ... தலித் என்பது ஒரு பொது சொல்லே தவிர அது ஒரே சாதி கிடையாது... அதற்குள் பல்வேறு பிரிவுகள் உண்டு அதிலிலும் சாதி கட்டமைப்பு உண்டு. இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கின்றனர், அது பல் வேறு உட்பிரிவுகளாக இருக்கின்றது .. புரியும்படி சொல்லாமல் தர்மபுரியில் பறையர்கள் இருக்கின்றார்கள் என்றால் கோவையில் சக்கலியர் இருப்பார்கள் ... எனவே அந்த 20-22% மொத்தமாக கணக்கில் எடுத்துக்கொள்வது அரசியலுக்கு சிரமமான ஒன்று.

ஒட்டு அரசியலில் இதுதான் மிக பெரிய பிரச்சனை.  ஒன்றை தெளிவாக நாம் அனைவரும் புரிந்து  கொள்ளவேண்டும். சாதி இல்ல சமூகம் அமைக்கவேண்டும் என்ற ஆசை வேறு நடைமுறை வேறு.... சாதியை அரசியல் மாற்றத்தால் ஒருபோதும் ஒழிக்க முடியாது அப்படி ஒழித்து காட்டுவோம் என்று சொல்பவர்கள் முட்டாள்கள் மற்றும் ஏமாற்று பேர்வழிகள் ! இதை நன்கு உணர்ந்ததால்தான் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒட்டு அரசியலுக்கு வரவில்லை, ஏன் என்றால் அவர்களுக்கு நன்கு தெரியும் ..அவர்கள் வந்த உடன் தோற்று இருப்பார்கள்.
அந்த படுதோல்வி அவர்களின் சமூக புரட்சிக்கு மிகப்பெரிய எதிர்வினையாக அமைந்துஇருக்கும்,

நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள் , தமிழகத்தில் 7.5 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் ...அதில் குறைந்தது 90% பேர் சாதி பற்று மற்றும் சாதி வெறியர்களாகவே உள்ளனர்.  இதுதான் நிதர்சனம் .

நீங்கள் உதாரணத்துக்கு கோவையில் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸை கொண்டு வந்து நிறுத்தினால் அவர் தோற்கடிக்கப்படுவார் ! உலகின் மிக சிறந்த புலிப்படைக்கே இதான்  நிலைமை, புலி மியாவ் ஆகிவிடும்.
கௌண்டரை நிறுத்தினால்தான் ஓட்டுபோடுவான் ஏன்னா அவன்தான் அங்கு மஜோரிட்டி.

எதாவது ஓரிரு இடங்களில் மாறுதலாக நடைபெற்று இருக்கலாம் ஆனால் exceptions are not examples.

சாதியை அரசியலால் ஒருபோதும் மாற்ற முடியாது, சமூக புரட்சியால் மட்டுமே மாற்ற முடியும். குறிப்பாக தலித்கள் தங்களை இழிவுபடுத்தும் மதத்தில் இருந்து வெளியேறுவது, அதைத்தான் அம்பேத்கரும் செய்தார்.

ஒரு கட்சி ஒரு வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்தும்போது கண்டிப்பாக அவரின் வெற்றி வாய்ப்பை மட்டுமே பார்த்து முடிவெடுக்கும் அதில் சாதி முக்கிய பங்கு வகுக்கிறது.

நேரடியாக சொல்கிறேனே ..சீமான் அண்ணனிடம் எனக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தேர்தலில் நான் சொன்ன மாறி இல்லாமல் ஊருக்கு ஓர் ஜாதி மாற்றி வேட்பாளர்களை அறிவித்தார்...கண்டிப்பாக பாராட்டுக்குரியது ஆனால் இதை அவரை போன்ற புது சிறிய கட்சிகளால் மட்டுமே செய்ய முடியும் ஏன் என்றால் அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை... இப்போது ஜெயிக்க மாட்டோம் என்று அவரே கூட சொல்லி இருக்கிறார்... இங்குதான் இருக்கு பிரச்சனை .சீமான் நொடிக்கு ஒருமுறை எங்கள் நாம் தமிழரில் சாதி இல்லை,நாங்கள் சாதி பார்க்க மாட்டோம் என்று சொல்கிறார் அவருக்கு ஒரு விசயம் புலன்படவேவில்லை ..இப்போது சீமான் தலித்தாக இருந்துருந்தால் அவருக்கு இதே ஆதரவும் கூட்டமும் கூடி இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது. முற்றிலும் புறக்கணித்து இருப்பார்கள்.

திருமாவளவன் அண்ணனை விடவா சீமானுக்கு பேச்சாற்றல் ? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இங்கு நிதர்சன கொடுமை.

எந்த ஒரு பெரிய கட்சியும் அவர்களே நினைத்தால் கூட இதை மாற்ற முடியாது. இதற்கு முதலில் சமூகம் மாற வேண்டும் அது அம்பேத்கர் சொன்னதுபோல்  அரசியலால் முடியாது பண்பாட்டுப்புரட்சியால் மட்டுமே முடியும்.  இன்னும் நெறைய விவரங்கள் இருக்கிறது அதை பொதுவெளியில் போட விருப்பம் இல்லை.

எனக்கு என்ன அதிர்ச்சியாக இருக்கிறது என்றால் திமுக போன்ற கட்சியை  எதை பற்றியும் யோசிக்காமல் சாதிக்கட்சி என்று இணைய போராளிகள் சொல்வதுதான் ...அதாவது அவர்கள் வைக்கும் குற்றம் "திமுக தலித்துகளை ஏமாற்றி ஆதிக்க சாதி பக்கம் இருக்கிறது" என்று ...

அடிப்படை அறிவு, ஒட்டு அரசியலை பற்றி தெரிந்தவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.... சிதறிக்கிடக்கும் தலித் வாக்குகள் நிச்சயமாக ஒரு கட்சின் வெற்றி தோல்வியை தமிழ்நாட்டில் நிர்ணயிப்பது கிடையாது ... இன்னும் சொல்லப்போனால் திடீர் தலித் போராளிகளின்  காதலன் பாஜக போல் போலாரிசஷன் (Polarization) பண்ணினால்தான் எந்த கட்சிக்கும் லாபம் . முஸ்லீம் ஒட்டு தேவை இல்லை ..வெறியை தூண்டி இந்துக்களை ஒன்றிணைத்து அந்த ஓட்டை கைப்பற்றிநாலே பெருபான்மையுடன் ஆட்சி அமைத்துவிடலாம் என்று இந்தியஅளவில் பாஜக சாதித்தும் காட்டியது.

ஆனால் தலித் ஓட்டுகள் தேவையில்லை, ஏற்கனவே இருக்கும் ஆதிக்க ஜாதி வெறிக்கு ஆதரவளித்து அந்த ஓட்டை கைபற்றினாலே பெருபான்மையுடன் ஆட்சி அமைத்துவிடலாம் என்று திமுக ஒருபோதும் முற்பட்டது இல்லை.  குறிப்பாக தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் கோகுல் ராஜ் படுகொலை பற்றி வாய் திறக்காமல் இருந்துருந்தால் கௌண்டர்களின் ஓட்டை கைப்பற்றி இருக்கலாம் ...ஆனால் இது நிச்சயமாக அவருக்கு பாதகம் விளைவிக்கும் என்று தெரிந்தும் அவர் அதை கண்டிக்கப்போக, கோவை பெல்டில் திமுக washout ஆனதுதான் மிச்சம் ..இந்த மாறி கட்சி மிகவும் தேவை ..இதுதெல்லாம் தெரிந்துதான் சீமான் விவரமாக கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டார் என்று பேட்டி குடுத்தார். தலித்துகள் பெரும்பாலும் அதிமுகவிற்கே ஒட்டுதளித்துள்ளனர் இருந்தும் திமுக ஒருபோதும் தலித் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லை மாறாக எப்போதும் ஆதரவாகவே குரல்கொடுத்து வந்துள்ளனர். அதற்கு ஒரே காரணம் திராவிட சித்தாந்தம்.

இதில் மிக முட்டாள்தனமாக விஜயகாந்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் திருமாவளவனுக்கு இல்லை என்று கேள்விகள் ... அப்படியெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது ... விஜயகாந்தை  யாரும் வந்த உடனே மடியில் தூக்கி வைத்துக்கொள்ளவில்லை ... அவர் அவரை முதல் தேர்தலிலேயே நிரூபணம் செய்தார். 8 சதவிதம் ஒட்டு வாங்கி நிரூபித்தார் இதனால்தான் தலைக்கனத்திற்கு பேர்போன விஜயகாந்த் குடித்து விட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று சொன்ன ஜெயலலிதாவே அவரை கூப்டு கூட்டணி வைத்தார்.

உன் பலத்தை நிரூபித்தால், உனக்கு ஒட்டு இருக்கு என்று நிரூபித்தால் உனக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும்.  உதாரணம் நேத்து வந்த விஜயகாந்திற்கு கிடைத்த அங்கீகாரம் இன்றும் ராமதாஸுக்கு கிடைக்கவில்லை, அவர் பின்னாடி ரெண்டு கோடி வன்னியர் இருப்பதாக சொல்லிகொண்டே இருக்கிறார் ...ஆனால் ஒட்டு அரசியலை பொறுத்தவரை வாயில் வடை சுடுவதெல்லாம் உதவாது, உன்னை நீ நிரூபித்தால், உனக்கு ஒட்டு இருக்கு என்று நிரூபித்தால் உனக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும்.  இதுதான் நடைமுறை உண்மை. திருமா அண்ணனே இதை தெளிவாக தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் பேட்டியில் ஒப்புக்கொண்டார்.
அவருக்கெல்லாம் என்ன பிரச்சனை என்ன நடைமுறை சிக்கல் என்று தெளிவாக தெரியும் , அதனால் இணைய போராளிகள்போல் மனசாட்சில்லாமல் அவருக்கு பேச வராது. என்ன வருத்தம் என்றால் இதையும் தெரிந்தும் அவர் ஆட்சியில் பங்கு என்ற வாதத்தை வைத்தது ...வாங்கு வங்கியை நிரூபிக்காமல் எந்த கட்சி அப்படி கொடுக்கும் என்றே எனக்கு தெரியவில்லை, 40 mla இருந்த காங்கிரஸ் கூட அமைதியாகத்தான் இருந்தது.

மாவட்ட செயலர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வமில்லை.

சாதி வெறியர்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் அதுவும் அவர்கள் பெருபான்மையாக இருக்கும் சமூகத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பல முடிவுகள் எடுப்பதே ஓர் போராட்டம் , பிரதிநித்துவத்தை இன்னும் அதிக படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும்  இல்லை ...அதை கண்டிப்பாக சரி செய்ய வேண்டும் ஆனால் அது இங்கு மட்டுமே பிரச்சனை இல்லை, தலித் இயக்கமாகவே தன்னை காட்டிக்கொள்ளும் விடுதலை சிறுத்தை கட்சிகளும் அவர்களுக்குள் இருக்கும் சிறுபான்மையினருக்கு கொடுத்து இருக்கிறார்களா என்றால் இல்லை.. இதற்கு அருந்ததியர்ளின் புகார்களே சான்று., வேணும் என்றால் வெளிப்படையாக அதை வெளியிடட்டும்.

ஒரு தெளிவான உண்மை என்ன என்றால் தலித் இயக்கங்கள் மட்டுமல்ல, மக்கள் தொகையில் அதிமாக இருக்கும் வன்னியர்,கௌண்டர் தேவர் என தனியாக யார் சென்றாலும் வெற்றி பெறமுடியாது.

அப்படி சென்றால் மைய நீரோட்டத்தில் விலகியே செல்வார்கள் ....

இதை பொதுவில் சொல்ல பலபேர் தயங்குகிறார்கள், நான் வில்லனாகவே இருந்துவிட்டு போகிறேன்...
ஆனால் இதை சொல்லியே ஆகவேண்டும் ... தயவு செய்து அரசியல் நிலவரங்களை எடுத்து பாருங்கள் ... வாங்கு வங்கிகளை எடுத்து பாருங்கள் ...

தமிழ்நாட்டில் தலித்வாக்கு என்பது சிதறிக்கிடக்கிறது, அந்த வாக்குகள் எந்த கட்சியின் வெற்றி தோல்வியையும் தீர்மானிப்பது இல்லை ... நீங்கள் அவதூறுகளை பரப்பி விலகி போனால் கண்டிப்பாக இழப்பு அந்த கட்சிக்கு இல்லை மாறாக  தலித் மக்களை நீங்கள் மைய்ய நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்கிறீர்கள் அது அவர்களுக்கு பேரிழப்பாக முடியும்.

சாதியை அரசியலால் ஒழிக்க முடியாது, பண்பாடு புரட்சியால் மட்டுமே முடியும்.
அம்பேத்கரும் பெரியாரும் ஏன் ஒட்டு அரசியலில் ஈடுபடவில்லை என்று ஆழமாக யோசியுங்கள்.

அப்போரம் சொன்னதை எதுவும் படிக்காமல் பாரு இந்த தமீம் தந்தரா மிரட்டும் தொனியில் பேசுகிறான் என்று உளறினாள் அது உங்கள் மூளை கோளாறு பிரச்சனை அதற்கெல்லாம் நாம ஒன்னும் பண்ண முடியாது.

நமக்குள் இருக்கும் கருத்து  வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டியது ...இந்த குழப்பத்தில் ஹிந்துத்துவா விஷமிகளை ஒருபோதும் அனுமதிக்க கூடாது !

- Thameem Tantra

No comments:

Post a Comment