சாந்தி நாராயணன்
Via Facebook
2017-06-09
வைகோவிற்கு தடை விதைத்தது மலேஷிய பிரதமர் அலுவலகம்.
வைகோவிற்கு அழைப்பு விடுத்தது பினாங்கு மாநில துணை முதல்வர்
வைகோவின் வருகை முன்னறிவிக்கப்பட்ட ஒன்று.
வைகோ கோலாலம்பூரில், பிரதமர் அலுவலகம் தந்த ஆணையின் படி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பினாங்கு முதல்வர் முயற்சித்தும் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
-
நிற்க
-
oOo
2003இல் பிரபாகரன் குடும்பத்தாருக்கு இந்தியாவில் நுழைய தடைகோருகிறார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா
oOo
ஜெயலலிதாவின் கோரிக்கைப்படி அன்றைய மத்திய பாஜக அரசு பிரபாகரன் குடும்பத்தினர் இந்தியாவில் நுழைய தடை ஆணை தருகிறது.
oOo
ஏப்ரல் 17 2010இல் சிகிச்சை பெற சென்னை நோக்கி விமானத்தில் வருகிறார் பிரபாகரனின் தாயார்.
நள்ளிரவு.
வைகோ நெடுமாறன் போன்றவர்கள் இதை முன்பே அறிவார்கள். (தடை பற்றியும், பிரபாகரன் தாயார் வரவு பற்றியும். )
oOo
நள்ளிரவில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் பிரபாகரனின் தாயாரை தடையாணையை காட்டி தடுத்து நிறுத்துகிறார்கள்
oOo
தொண்டர்களுடன் குவிந்த வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் தடை நீக்கவோ, வருகை பற்றியோ தமிழக அரசுக்கு, கலைஞருக்கு எந்த முன் தகவலையும் தரவில்லை (நேரடியாக மட்டுமல்ல, ஊடகங்கள் வாயிலாக கூட எந்த முன்தகவலும் தரவில்லை )
நள்ளிரவில் 2.00 மணிக்கு தோழர் தியாகு, தனது மனைவி தாமரையின் நண்பர்கள் வாயிலாக செய்தியை அறிந்து, அய்யா சுபவீ அவர்களை தொடர்புகொண்டு, மேற்கொண்டு என்ன செய்ய இயலும் என்பதை குறித்து ஆலோசிக்கிறார்கள்.
அதற்கு முன் நிலை கைமீறி இருந்தது.
பிரபாகரன் தாயார் சென்னையில் இருந்து கிளம்பிவிட்டார்.
oOo
திமுக தலைவரின் கவனத்துக்கு வந்த இந்த செய்தி தொடர்ந்து பாராளுமன்றத்தில் திமுகவினரால் எழுப்பப்படுகிறது .
அன்றைய ஆளும்கட்சியான காங்கிரஸ் மாநிலஅரசு விரும்பினால் பிரபகாரன் தாயார் திரும்ப வர மத்திய அரசிடம் எந்த எதிர்ப்பும் இல்லை என்று அறிவிக்கிறது.
oOo
கலைஞர் பிரபாகரன் தாயாரை , தமிழக அரசு செலவில் திரும்ப அழைத்து சிகிச்சை தரவிழைவதாக கடிதம் அனுப்புகிறார்.
oOo
வேறு சிகிச்சைகளுக்கு தன்னை உட்படுத்திக்கொண்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் " கலைஞரின் கடிதம் , முயற்சிகள் மனஆறுதலை " தந்ததாக கூறி, ஒரு உடன்பிறப்பாக தன்னை கருதி நன்றியும் தெரிவித்திருந்தார்.
oOo
தடை கோரிய செயலலிதா ,
தடை போட்ட பாஜக அரசு இவர்கள் மீதல்ல,
தடையை நீக்கப்போராடிய திமுக, கலைஞர் மேல் தான் அன்றைக்கு
புழுதி வாரி இறைத்தனர். வைகோவும், நெடுமாறனும்.
அவர்கள் நோக்கம் பிரபாகரன் தாயார் உடல்நலன் இல்லை. திமுகவின் மேல் பழி ஏற்படுத்துவது.
oOo
இன்றைக்கு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைகோ, அன்றைக்கு பிரபாகரன் தாயார் நிலையில் நிற்கிறார்.
.
பிரபாகரனின் தாயார் உடல்நலத்துடன் வைகோ அரசியல் செய்த கொடுமையையும்,
திமுக மேல், கலைஞர் மேல் சுமத்திய பழியையும் தாங்கிக்கொண்டு, முதுகிலே குத்தினாலும்
"வைகோ தமிழன்" என்ற காரணத்தினால்,
மக்களுக்கு மட்டுமல்ல, எதிரிகளுக்கும், துரோகிகளுக்கு கூட நீதி கேட்டு நிற்கவேண்டியது திராவிட இயக்கத்தவனின் கடமை என்ற காரணத்தினால்,
வைகோவிற்காக குரல்கொடுக்கவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். நாங்கள் திமுகவினர்.
மலேஷிய அரசிற்கு கண்டனங்கள்.
வைகோவின் மீதான தடையை பின்வாங்கு .
No comments:
Post a Comment