Joe Milton
Via Facebook
2017-06-09
பொதுவா இந்த இந்தி சொம்பை தூக்கிட்டு வர்றவருக்கும் நம்மாளுக்கும் வாக்குவாதம் இப்படித் தான் இருக்கும்
இந்திவாலா : (அதிகாரத்தோடு) இந்தி நம்ம நாட்டு தேசிய மொழி .அதனால..
நம்மாளு : யோவ் ! நிப்பாட்டு ..இந்தியாவுல தேசிய மொழிண்ணு ஒண்ணே கிடையாது .. Constitution படிச்சுட்டு வா மொதல்ல .
இந்திவாலா : (கோபமாக) இருக்கட்டும் .. ஆனா இந்தியனா இருந்துகிட்டு இந்தி தெரியல்லிண்ணா ...
நம்மாளு : இந்தியண்ணா இந்தி தெரிஞ்சிருக்கணும்ன்னு கட்டாயமா என்ன ? நீ எனக்கு இந்தியன் சர்ட்டிபிக்கேட் தர வேண்டாம்
இந்திவாலா : (சாந்தமாக) அதில்ல சார் . இந்தி படிச்சா ஈஸியா வேலை கிடைக்கும்ணு
நம்மாளு : தம்பி .. இந்த ரீல் அந்து ரொம்ப நாளாச்சு .. உங்காளு பூரா இங்க வந்து தமிழ் படிச்சிட்டிருக்கான் .
இந்திவாலா : (கெஞ்சலாக) இன்னொரு மொழி கத்துக்குறது நல்லது தானே ..சார்.
நம்மாளு : நல்லது தான் .. தேவைப்படும் போது நானே இந்தி கத்துக்கிறேன் . நீ எடத்த காலி பண்ணு .இப்போதைக்கு தமிழும் ஆங்கிலமும் போதும்
இந்திவாலா : (மறுபடியும் கோபமாக) ஒரு அன்னிய மொழிக்கு குடுக்குற மரியாதைய ஒரு இந்திய மொழிக்கு குடுங்க சார் .
நம்மாளு : அப்படியா ? தமிழும் இந்திய மொழி தான் .. உங்கூருல உபி , மபி -ல போய் இந்திய மொழி தமிழ் கத்துக்க ரெடியாண்ணு கேட்டு வந்து சொல்லு .. அப்ப பாக்கலாம் .
இந்திவாலா : அவ்வ்வ்வ்வ்
No comments:
Post a Comment