Sivasankaran Saravanan
Via Facebook
2017-06-03
நண்பர் ஒருத்தர், அதிமுகவை சேர்ந்தவர்கள் எவரும் இன்று கலைஞரை வசைபாடவில்லை, தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கமுடியாத டோமாங்கோலிகள் தான் வயிற்றெரிச்சலில் வாந்தியெடுத்ததை கவனித்தீர்களா? எனக்கேட்டார்.
உண்மைதான். நான் தனிப்பட்ட முறையில் என் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது (சொந்தக்காரங்க மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பாதி பேரு அதிமுக காரங்க தான்) சொல்வது இதைத்தான் : அதிமுக தொண்டர்களுடைய கருணாநிதி எதிர்ப்பு அரசியல் எதிர்ப்புதானே தவிர அவர்களுக்கு கலைஞர் மீது தனிப்பட்ட வன்மம் எதுவும் கிடையாது. கலைஞர் சாகவேண்டும் என எந்த அதிமுகவினரோ ஜெயலலிதா சாகவேண்டும் என திமுக வினரோ நினைத்ததில்லை.
அதிமுகவிற்கு கருணாநிதியை தேர்தலில் தோற்கடிப்பதும், திமுகவினர்க்கு ஜெயலலிதா வை தோற்கடிப்பதும் தான் மகிழ்ச்சி தருமே ஒழிய அவர்கள் இருவரும் மாண்டு போகவேண்டும் என நினைப்பதில் அல்ல.
களிப்பு என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருக்குமே இயல்பான ஒன்றுதான். உதாரணத்திற்கு காமக்களிப்பு அடையவேண்டுமென்றால் அதற்கு ஒரு இணையர் தேவை. அப்படியென்றால் இணையர் இல்லாத ஒருத்தருக்கு அந்த உணர்வு தோன்றாதா என்றால் கண்டிப்பாக தோன்றும். அந்த உணர்வை கட்டுப்படுத்த இயலாமல் பிடித்த நபரை மனதிற்குள் நினைத்து அவருடன் உடலுறவு கொள்வதாக நினைத்து சுய இன்பம் செய்கிற உரிமை அவர்களுக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டிலே தேர்தல் களத்திலே எதிரெதிரே நின்று ஒருவரையொருவர் தோற்கடித்த பெருமை அதிமுக திமுக என்ற இரண்டு கட்சிகளின் தொண்டர்களுக்குமே இருக்கிறது. அதிமுகவினர்க்கு கருணாநிதியை தேர்தல் களத்தில் தோற்கடிப்பதில் தான் மகிழ்ச்சியே தவிர இணையகளத்தில் அவர் மீது வன்மம் கக்குவதில் அல்ல . எனவே அவர்கள் கருணாநிதி பிறந்தநாட்களில் அவர் மீது வன்மம் கக்கமாட்டார்கள். மாறாக தேர்தல் களத்திலே டெபாசிட் வாங்கக்கூட வக்கில்லாத ஆட்கள் எங்கு போவார்கள்? அவர்களுக்கு இணையகளத்தை விட்டால் வேறு நாதியென்ன? அவர்களை பார்த்து எங்கள் தலைவரை வசைபாடுகிறார்களே என திமுகவினர் கேட்பதில் அர்த்தமில்லை. எப்படி சுயமைதுனம் செய்து மகிழ்ச்சி அடைவது ஒவ்வொருவரின் உரிமையோ அதுபோல இணைய மைதுன உரிமை அனைவருக்கும் உள்ளது. அந்த உரிமையில் தலையிடும் உரிமை நமக்குத்தான் இல்லை..!
No comments:
Post a Comment