Monday, February 19, 2018

வீரமணிக்கு 20 கேள்விகள்

வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா இந்து விரோத பகுத்தறிவாதிகளுக்கும் தான்.

---

*கேள்வி 1*
ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

*பதில்*
பிராமணர்கள் மட்டும் அல்ல இன்னும் பலர் சாதிய பாகுபாடோடு அலைகிறார்கள். ஆனால் பூணூல் போட்டுக்கொண்டு தமிழையே தங்கள் சாதிக்கென்று ஒரு சுருதியோடு பேசி அடுத்தவனை தீண்டத்தகாதவனாக உணர செய்வது பார்ப்பனர்கள் தான்.. தோளை தடவி அவன் நம் இனமா என இனம் காணுவதும் பார்ப்பனர்கள் தான். கோவில் கருவறைக்குள் மற்ற இந்துக்களை அனுமதிக்காமல் இருப்பதும் அவர்கள் தான். பார்பனர்கள் தான் இந்த சாதிக்கு ஆதி.. அவர்களை திருத்தினால் கீழ் படியில் உள்ளவன் தானாக திருந்துவான்

---

*கேள்வி 2*
கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

*பதில்*
கடவுள் இல்லை என்பதில் அனைத்தும் அடக்கம். மேலும் கிருத்துவமும் இஸ்லாமும் இங்கே மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் கடவுளின் பெயரால் பிரிப்பதில்லை. இங்கே என்னை சூத்திரன் என்றும் தேவிடாய பிள்ளை என்றும் சொல்லும் இந்து மதத்தையும் அதன் கடவுள்களையும் எதிர்ப்பதே முதல் பணி.

திராவிடர் கழகத்தின் விடுதலை மற்றும் உண்மை இதழ்களில் கிறித்துவ மதத்தை விமர்சித்து பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் அறிஞர்கள் ரூஸோ,வால்டேர்,மார்க்ஸ் போன்றவர்களும் அமெரிக்காவின் இங்கர்சால் போன்ற பல அறிஞர்களும் கிறித்துவ மதத்தை மட்டுமே விமர்சனம் செய்துள்ளனர்.

அவர்கள் இந்து மதத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதற்கு காரணம் அவர்கள் இந்து மத கைகூலிகள் என்று யாரும் சொல்லவில்லை. எந்த மதத்தை பற்றியாவது விமர்சனம் வந்தால் சரியான விளக்கம் இருந்தால் பதில் தரலாம். அதை விட்டு எங்களை மட்டுமே குறை சொல்லலாமா என்று புலம்புவது வீண்

---

*கேள்வி 3*
தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

*பதில்*
தியாகராயர் ஆராதனையில் புஷ்பவனம் குப்புசாமியை பாட அனுமதியுங்கள் திட்ட மாட்டோம்

---

*கேள்வி 4*
பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

*பதில்*
அப்போது பிராமணன் தனி மதம் என்று ஒத்துக்கொள்ளிங்கள் அறுக்க மாட்டோம்.. பூணூல் என்ன ஒட்டுமொத்த இந்துக்களின் அடையாளமா??

---

*கேள்வி 5*
தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

*பதில்*
திமுக வை சேர்ந்த எவரிடமும் தட்சணை வாங்க மாட்டோம் என்று நீங்கள் சொன்னால் உடனே செய்து விடுகிறோம். தாலி என்பதை திக ஆதரித்தது இல்லை. மனமுவந்து நீக்குபவர்களை ஆதரிக்கிறோம். இன்னும் சில நாட்களில் மனமாற்றம் நடக்கும் போது தாலியை பெண்களே கழட்டி வைக்கும் நிலை வரும். அதன் புனித தன்மையை உடைப்பதற்காகவே இந்த போராட்டம்

---

*கேள்வி 6*
எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

*பதில்*
இது வீரமணியிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்ல திமுக விடம் கேட்க வேண்டிய கேள்வி. பதில் இருக்கிறது அதற்கும். தி.க என்றால் திராவிட'ர்' கழகம்-தன்னை திராவிடனாக உணர்ந்தவர்களின் கழகம். அது வாக்கரசியலை புறக்கணித்த இயக்கம். அதற்கு யாருடைய ஆதரவும் தேவை இல்லை. திமுக என்பது திராவி'ட' முன்னேற்ற கழகம். அதாவது திராவிட நாட்டில் வாழும் அனைத்து நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய மக்களுக்கான இயக்கம். இதில் யாரையும் புறக்கணிக்க முடியாது, பிராமணர்கள் உட்பட.. திமுக போடும் திட்டத்திலும் இவர்கள் புறக்கணிக்கப்படுவது இல்லை. பிராமணர்கள் நலனிலும் அக்கறையுடன் திட்டம் தீட்டியுள்ளது திமுக. தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தை படியுங்கள். இந்த வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்

---

*கேள்வி 7*
கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை , காமராஜர்,எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

*பதில்*
இல்லாத கடவுளுக்கு மாலை போடும் நீங்கள் எங்களுடன் இருந்த பெரியாருக்கு மாலை போடுவதை ஏன் எதிர்க்க வேண்டும். பெரியார் ஒரு குறியீடு அவ்வளவு தான். பெரியார் சிலையை கோவில்களுக்கு எதிராக நிறுவுவது எதற்காக?? கடவுள் இருக்க என்று சொல்லும் மண்ணில் கடவுள் இல்லை என்று சொன்னவர் இத்தனை ஆண்டுகளாக பெருமையோடு வாழ்ந்தார் என்பதை நிறுவுவதற்காக

---

*கேள்வி 8*
இந்துக்களை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூற அஞ்சுகிரீர்களா?

*பதில்*
இங்கே எங்களை தேவிடியா பிள்ளை என்று சொல்லும் மதமே எங்களின் எதிரி.. மற்ற நம்பிக்கைகளை அவர்களின் மதத்தினர் பார்த்துக்கொளுவர். இஸ்லாமிய மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசி உயிரிழந்த தோழர் பாரூக்கும் எங்களிடம் உண்டு

---

*கேள்வி 9*
நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள், ஹவாலா திருட்டுக்கள் இவற்றில் இந்துக்கள்  பங்கு எவ்வளவு சதவிகிதம்,  பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா அதை மேடையில் பட்டியளிடும் துனிவுஇருக்கிரதா?

*பதில்*
முதலில் இந்த நாட்டில் நடந்த ஊழலே பார்ப்பனர்கள் நிகழ்த்தியது தான். டிடிகே அவருடைய பெயர். அதனால் பதவி இழந்ததும் முதலில் அவர்தான். ஊழல் என்பதை கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்கலாம். சாதிய சுரண்டல்களை?? முடிந்தால் உங்கள் பாசகவை லோக் பால் சட்டம் கொண்டுவர சொல்லுங்கள் முதலில். பிறகு ஊழலை பற்றி பேசலாம்

---

*கேள்வி 10*
இந்துக்களிடையே ஜாதி வெறியைதூண்டி பிறித்தாழ நினைக்கும் கருமர்களே பிற மத ஜாதிவேறுபாடுகளை மூடிமறைப்தேன் மேடையில் நாபேச நடுங்குதேன்?

*பதில்*
பைபிளிலோ, குரானிலோ சாதிய பாகுபாடு உள்ளதா?? அப்படி இல்லை என்றால் அந்தந்த மதத்தில் சாதி பாகுபாடு பார்ப்பவர்களும் சூத்திரர்கள் தான். அவர்கள் அந்தந்த மதத்தில் உள்ள இந்து sleeper செல் கள். அவர்களை தனியாக எதிர்க்க வேண்டியதில்லை. இந்து மதத்தை எதிர்த்தாலே போதுமானது

---

*கேள்வி 11*
சிவனும் இல்லை அல்லாவும் இல்லை ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்பு பலகையில் எழுத தைரியம் உள்ளதா?

*பதில்*
அதான் கடவுள் இல்லை என்று எழுதியிருக்கிறோமே.. இந்து கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறோம்

---

*கேள்வி 12*
உங்கள் மனைவிகளையும் உங்கள் கட்டுமரங்களின் துனைவிகளையும் பொதுமேடையில் வைத்து தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த முடியுமா?

*பதில்*
அவர்கள் விருப்பப்பட்டால் நடத்துவோம். அதுவும் பெண்ணுரிமை தானே

---

*கேள்வி 13*
இந்துக்கள்  உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

*பதில்*
இதை விட அபத்தம் எதுவுமே இருக்க முடியாது. டிசிஎஸ் காக்னிசன்ட் கம்பெனிகள் முதலில் திராவிடர்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியில் கடன் வாங்க மாட்டேன் என சொல்ல முடியுமா??

---

*கேள்வி 14*
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

*பதில்*
இதை நாங்கள் சொன்னதற்கு ஆதாரத்தை கொடுங்கள்

---

*கேள்வி 15*
குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

*பதில்*
ராமனுஜர் வேதங்களை கற்று கொடுக்காவிட்டிருந்தால் அவரையும் விமர்சிப்போம். எங்கள் கொள்கைக்கு தோதானவர்களை பாராட்ட தவறியதில்லை.. பார்ப்பனர்களை போல் காரியமான உடன் தூக்கி எறிவதில்லை
---

*கேள்வி 16*
ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லீம்கள் பர்தா அனிகிறார்கள்.ஹிந்துக்கள் தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும் பர்தா கழட்டும் நிகழ்ச்சி நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

*பதில்*
தாலி என்பது இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தில் இல்லை. மோதிரம் அணிவது இரு பாலரும் செய்கின்றனர். அதில் பெணடிமைத்தன குறியீடு இல்லை. இஸ்லாமியர்களின் மூட நம்பிக்கைகளை திராவிட இயக்கங்கள் எதிர்ப்பதை மேலே ஏற்கனவே பாரூக் மூலம் நினைவு கூர்ந்தேன்

---

*கேள்வி 17*
பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?

*பதில்*
இந்தியர்களில், டாபர்மேன் யார் பாமரேனியன் யார் என்று முதலில் விளக்கமாக கூறுங்கள். பிறகு இந்த கேள்விக்குறி பதில் சொல்கிறேன்

---

*கேள்வி 18*
ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?

*பதில்*
நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகள் யார் யாரால் எப்படி எப்படி பார்ப்பனீயத்தை கட்டமைக்க பயன்படுத்தி கொள்கின்றனர் என்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். பெரியாரின் படைப்புகளை அழித்தொழிக்காமல் காப்பது தான் எங்கள் பணி. மற்ற நூல்களை போல் பெரியார் படைப்புகள் ஒன்றும் 100, 200 ரூபாய் விலைக்கு விற்கப்படுவது இல்லை. அடக்க விலையை விட குறைவான விலைக்கு தான் விற்கப்படுகிறது. அதை வைத்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் திக வுக்கோ ஆசிரியர் வீரமணிக்கோ இல்லை.

---

*கேள்வி 19*
பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

*பதில்*
பூணூல் ஒரு குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே போடாமல் அனைத்து இந்துக்களும் போட அனுமதித்தால் பூணால் பற்றி சர்ச்சை இல்லை.. கறுப்பு சட்டை எந்த ஒரு சாதிக்குமான அடையாளமல்ல.. பார்ப்பனர்கள் வேறுபாடுகளை விடுத்து அனைவரும் சமம் என்று சொல்பவர்கள் கூட கருப்பு சட்டை காரர்கள் தான்.. கறுப்பு சட்டை ஒரு போராட்டத்தின் குறியீடு.. பூணூல் எதன் குறியீடு??

---

*கேள்வி 20.*
ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் தூற்றி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.

*பதில்*
எது உங்கள் நம்பிக்கை.??  நான் தலையில் இருந்து பிறந்தவன் மற்றவன் எல்லாம் தேவிடியா மகன்கள் என்று சொல்வது தான் உங்கள் நம்பிக்கையா?? எல்லோருக்கும் பொதுவான கடவுளை பூசை செய்ய குறிப்பிட்டவர்களுக்கே உரிமை என்று சொல்வது தான் உங்கள் நம்பிக்கையா?? வெறும் 3% மக்கள் தொகையில் உள்ளவர்களுக்கு தான் எல்லா சலுகையும் மிச்சமுள்ள 97% மக்கள் இந்த 3% க்கு அடிமை என்பது தான் உங்கள் நம்பிக்கையா.. அப்படி ஆம் என்று சொன்னால் அதை எதிர்ப்பது தான் எங்கள் பணி.. அது மட்டுமே எங்கள் தலையாய கடமை, வேலை, வாழ்வியல் எல்லாம்.

1 comment: