Friday, February 23, 2018

கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல

கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல, ஜாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை.

ஜாதியை ஒழிக்க வழி தேடினேன்.
அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள்.

எனவே மதத்தை ஒழிக்க ஆராய்ந்தேன்.
அது வேதத்துக்குக் கட்டுப்பட்டது என்றனர்.

வேதத்தை ஒழிக்க முற்பட்டேன்.
அது கடவுளுக்குக் கட்டுப்பட்டது என்றார்கள்.

ஜாதி எனும் மரத்தின் கிளைகளை வெட்டினால் அது மீண்டும் மீண்டும் வளரும்.

எனவே ஜாதி மரத்தின் அடிவேரான கடவுளை அழிக்க முற்பட்டேனே ஒழிய, எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறெந்தப் பகையுமில்லை.

ஜாதி ஒழிப்புப் பணியில் எவையெல்லாம் குறுக்கே வந்து தடை ஏற்படுத்துகிறதோ, அவற்றை எல்லாம் அழித்து, இந்த சமுதாயத்தை மானமும் அறிவுமுள்ளதாக மாற்றவும், மனிதனுக்கு மனிதன் ஜாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே என் லட்சியம்.

- தந்தை பெரியார்

No comments:

Post a Comment