தோழர் Satva T
Via facebook
2018-02-10
பண்டிதர் அயோத்தி தாசரின் காலம் 1845 - 1914. அவர் பௌத்தம் மதமாறியது 1890.
தந்தை பெரியாரின் காலம் 1879 - 1973.
பெரியார் நீதி கட்சிக்கு தலைமை ஏற்றது 1939. திராவிடர் கழகம் உருவானது 1944.
பண்டிதரின் இறப்புக்கு பின்னர் முப்பது - ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகே திராவிட இயக்கம் உச்சத்தில் இருத்தது. பண்டிதர் பௌத்தம் ஏற்ற பிறகு 50 -54 ஆண்டுகளுக்கு பிறகே திராவிட இயக்கத்திற்கு பெரியார் தலைமை ஏற்கிறார்.
இவ்விருவரும் எந்த வகையிலும் தொடர்பற்றவர்கள். ஆனால் இந்த உண்மையை மறைந்து சிலர் தொடர்ந்து பெரியார் தான் பண்டிதரை மறைத்து விட்டார் என்று குற்றம்சாட்டி வருவது உள்நோக்கம் கொண்டது. பிராமணரல்லாதோர் ஒரு குடையின் கீழ் வந்து விட கூடாது என்ற அடிப்படையில் இயங்கும் பார்ப்பன சக்திகளின் பின்னணியில் இந்த கருத்து பரப்பபடுகிறது. ஏனெனில் மேற்சொன்ன ஐம்பது ஆண்டு இடைவெளியில் பண்டிதரை மறைத்தது யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
மேற்கண்ட கருத்து,
பாபாசாகேப் உயிருடன் இருந்த போது திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரை நட்பு சக்தியாக கருதியதையும், பெரியார் அவர் சம காலத்தில் வாழ்ந்த டாக்டர். அம்பேட்கரை போற்றியதும், அவரே (பெரியார்) முன்னின்று பௌத்த மாநாடுகளை நடத்தியதுடன் ஒப்பிடத்தக்கது.
பண்டிதரை மறைத்து விட்டார்கள் என்ற அபாண்ட குற்றச்சாட்டு வைப்பவர்கள் பாபாசாகேபை பெரியார் மறைத்து விட்டார் என்று பேசுவதில்லை. பேச இயலாது. ஏனெனில் சம காலத்தில் வாழ்ந்த அவர்களை பற்றி தரவுகள் பல உள்ளது.
ஆனால் ஒப்பிட இயலாத வண்ணம் வாழ்நாட்கள் கொண்ட பண்டிதரையும் - பெரியாரையும் முன் வைத்து அவதூறுகளையும், கட்டுகதைகள் எழுதுவதும் வெறுப்புணர்வை உருவாக்குவதும் அவர்களுக்கு எளிமையாக உள்ளது. அதனால் இந்த கதைகள் பரப்பபடுகிறது.
மேலும் இவ்வாறான அவதூறுகள் கொள்கைகளை மையமாக வைத்து பரப்பபடுபவை அல்ல என்பது கவனிக்கத்தக்கது. அதாவது இந்துத்துவ எதிர்ப்பு, பிராமணரல்லாதோர் நலன், சமூக நீதி, இட ஒதுக்கீடு, பௌத்தம், திராவிடம் ஆகியவற்றை மையமாக வைத்து பண்டிதரையும் பெரியாரையும் ஒப்பிட்டால் அதில் முரண்பாடுகள் எதனையும் கண்டறியப்பட இயலாது.
ஆனால் அதை விடுத்து 'லவ் ஜிகாத்' போன்று சும்மா ஒரு வெற்று வாசகத்தை உருவாக்கி அதன் பின் இந்த அவதூறு பரப்பபடுவது வேதனைக்குரியது. இது பள்ளி மாணவர்கள் எனது பென்சிலை மறைத்து வைத்து விட்டார்கள் என்று சொல்வது போல எளிமையான விடயம் அல்ல.
https://m.facebook.com/story.php?story_fbid=277113972820832&id=100015666938445
No comments:
Post a Comment