Monday, February 26, 2018

கலைஞரின் "#மஞ்சள்துண்டு" வரலாறு;

Surakkudi dmk
Via facebook
2018-02-26

கலைஞரின் "#மஞ்சள்துண்டு" வரலாறு;

கலைஞரை வசைபாட நினைப்போர் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தை "மஞ்சள் துண்டு" .

சரி ஏன் வந்தது ? ஏதற்க்காக வந்தது??
அந்த மஞ்ச துண்டின் வரலாறு என்ன???
இதற்க்கு எல்லாம் கலைஞரை விட
வன்னிய சங்க நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு தெரியும்.

80களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டிற்காக பல போராட்டங்களை செய்து கொண்டிருந்தர்கள். மரம் வெட்டினார்கள், கடுமையான போராட்டங்கள். இருந்தும் மறைந்த திரு MGR ஆட்சியில் ஒன்றும் கிடைக்கவில்லை.

.பல கைதுகள், பலருக்கு குண்டர் சட்டம்.. சரி அடுத்து கவர்னர் ஆட்சி..அதிலும் வன்னியர்கள் போராட்டத்தில் வன்னியர்கள் தாக்க பட்டனர். வன்னியர்களும் திருப்பி தாக்கினார்கள்.  பல பேர் பாதிக்க பட்டனர்..

திரும்பவும் கலைஞர் ஆட்சி 1989ம் ஆண்டு வந்தது..
வந்தவுடன் #முதல் அரசானையாய்
#மிகவும்_பிற்படுத்தவர் பட்டியல் என்று ஒன்று வெளியிட்டு அதில் வன்னியர்களையும் இனைத்து 20 சதவீதம் கொடுத்தார்.. வன்னியர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்..

அதன் விளைவாக அப்போது வன்னியர் சங்க நிறுவனரான
மருத்துவர் ராமதாஸ் அவரகள் திண்டிவனத்தில் கலைஞருக்கு
ஒரு பாராட்டு விழா நடத்தினார்..

அதில் ராமதாஸ்
"வன்னியர் சங்கத்தின் கொடியை பார்தீர்களேயானால் மஞ்சள் கொடியில் அக்னி சட்டி இருக்கும்..மஞ்சள் நிறம் வன்னியர்களின் நிறம். வன்னியர்களின் ஆத்மார்த்த மஞ்சள் நிறத்தை கொண்ட துண்டை, எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த சமூக போராளிக்கு போர்த்துவதில் பெரு மகிழ்ச்கி அடைகிறேன்." என்று மஞ்சள் துண்டை போர்த்தினார் மருத்துவர் ராமதாஸ்.

அன்று மருத்துவர் ராமதாசால் போடபட்ட மஞ்சள் துண்டு கலைஞருக்கு பிடித்து போய்விட்டது. அதிலிருந்து மஞ்சள் துண்டை போட ஆரம்பித்தார்.  1989ம் ஆண்டுக்கு முன் அவர் மஞ்சள் துண்டை அணிந்ததே இல்லை..

இந்த வரலாறு தெரியாமால், மஞ்ச துண்டு மஞ்ச துண்டு என்று கிண்டல் கேலி பேசும் பலர் அந்த நேரத்தில் சிறுவராகவே இருந்துருப்பீர்கள்..இது தெரிய வாய்ப்பில்லை,

கலைஞர் கொடுத்த அந்த 20 சதவீத இடஒதுக்கீட்டால் இன்று வன்னியர்களில் பலர், டாக்டர்களாகவும்,
எஞ்சினியர்களாகவும், மெத்த படித்தவர்களாகவும் இருக்கிறார்கள்..
கலைஞரின் மஞ்சள் துண்டு என்பது , அவரை பொருத்தவரை
ஒரு சமூக நீதிக்காக அவருக்கு கிடைத்த ஒரு சின்னம்..

அன்புடன்
கா.கலைச்செல்வன்.BE., DEEE.,HDCA.,
Cell: 9524777477
தாராபுரம் நகர தி.மு.க
திருப்பூர் தெற்கு மாவட்டம்.

https://m.facebook.com/story.php?story_fbid=422236338196983&id=100012318609807

No comments:

Post a Comment