Monday, February 26, 2018

பேஸ்புக் போராளிகளின் போலி முகங்கள்

வாசுகி பாஸ்கர்
Via facebook
2018-02-26

* பார்ப்பன சித்தாந்தத்தை பிடித்தவர்களுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ "அவர்களிடம் ஏதோ ஒரு நியாயம் நிச்சயம் இருக்கும்"

* எவனொருவன் தமிழ் தமிழென்று பிரிவினை பேசுகிறானோ அவன் தமிழுக்கு எதுவும் செய்திருக்க மாட்டான்.

* மூச்சுக்கு முன்னூறு  முறை பாரத் பூமி, ஹிந்துஸ்தான், பாரத் மாதகி ஜே என்கிற அரசியல் கோஷங்கள், உண்மையில் பற்றற்ற அயோக்கியத்தனங்கள்

* ஒரு நிலப்பரப்பில் பூர்வீக பங்காற்றியவன், என் நிலம், என் மக்கள் என கல்யாண் ஜிவல்லர்ஸ் புரட்சி போராட்டம் போல பேசிக்கொண்டு இருக்க மாட்டான். சொந்த மக்களிடத்திலேயே தஞ்சம் அடைந்தவனுக்காக சண்டையிடுவான். குடியேறியவன் தான் பிழைப்புக்கு அங்கே நிகழும் தவறுகளை நியாயப் படுத்துவான், பிரிவினையை கையாள்வான்.

* தமிழ் மொழியை உள்ளூர பிடிக்காதவன், இந்தி திணிப்பிக்கும், இந்தி கற்பதற்கும் வேறுபாடு தெரியாதவன் போலவே நடிப்பான்.

* பணமும், பதவியும், புகழும் வருகிற ஒருவனுக்கு உருவாகும் திடீர் பக்தி, கடவுளை தொழிலாக, அரசியலாக வைத்திருப்பவனையே மிஞ்சும் அளவு மேட்டுமைத்தனத்தோடு இருக்கும்

* மாற்று சிந்தனை உடையவன் மாற்றத்தை யாரிடமும் எதிர் பார்த்து காத்திருக்க மாட்டான்

* பார்ப்பனர்களால் தூற்றப்பட்டு, பின்பு பார்ப்பனர்களாலே  கொண்டாப்படுகிற பாரதி, ஒரு நபரை, கருத்தை எப்படி பார்ப்பனீயம் தேவைக்கேற்ப வளைத்துக் கொள்கிறது என்பது live example  

* பாகிஸ்தானை பாகற்காய் போல பார்ப்பவன் தான், அது இந்தியாவை விட்டு விலகியதற்கு அதிகம் விசனப்படுவதாய் காமிப்பான்

* gslv ராக்கட் லாஞ்ச், அப்துல் கலாம் புகழ், இறந்த ராணுவ வீரருக்கு வீர வணக்கம் மட்டும் செலுத்தி கொண்டிருப்பவன் தான் சிறந்த தேச பக்தன் என்பதை தனக்கு தானே சொல்லிக் கொள்கிறான்.

* சுதந்திரத்துக்கு முன்னான பிரிட்டிஷ் அரசாங்கத்தை திட்டும் 75% பேர் குடும்பம், பிரிட்டன் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள். பிரிட்டிஷால்  உண்மையிலேயே வதைக்கப் பட்டவர்கள் அவன் செய்து விட்டு போன மாற்றங்களுக்கு நன்றி மறவாமல் இருப்பது இந்தியாவின் வியப்பான இருவேறு நிலைப்பாடுகள்

* அமெரிக்க எம்பசி கூட்டத்தை பார்த்து slaves ன்னு சொல்லவிட்டு போகிறவன் அமெரிக்க விசா மறுக்கப்பட்டவனாகவும் இருக்கலாம்

* நான் சிறுபான்மையினருக்கு எதிரி இல்லை என சொல்லிக் கொள்ள தேர்ந்து எடுக்கப்பட்ட நபர் தான் ஐயா அப்துல் கலாம்

* அம்பேத்கரை படிக்காத தலித் மக்களின் கொண்டாட்டத்தை விட, அவரை படித்த பின் மௌனமாகும் ஆதிக்க சாதிகளின் மௌனத்தில் தான் அம்பேத்கரின் வெற்றி இருக்கிறது

* கடவுளை மனப்பூர்வமாக நம்புவன், கடவளின் existence குறித்து எந்த ஆதாரத்தையும் யாருக்கும் நிரூபிக்க முயற்சி செய்யாமல், நம்பிக்கைக்கு எதுக்கு ஆதாரம் என வாழ்பவன்.

* மேல் என்று சொல்லப்படும் சாதி செய்தால் தப்பு, கீழ் என்று சொல்லப்படும் சாதி செய்தால் "புத்தி" என்று சொல்லும் புத்தி இன்றும் உள்ளது.

* சேகுவேரா ப்ரோபில் பிக்சர்  t-shirt வைத்திருக்கிற பாதி பேருக்கு அவர் எந்த ஊரில் பிறந்தார் என்பது கூட தெரியாது.

* நான் pure vegetarian என்பதை கடந்த இருபது வருடத்தில் பிராமணர் அல்லாதவர் pride statement ஆக  சொல்லிக் கொள்ள ஆசை படுவது அதிகரித்து இருக்கிறது.

* guitar 'னா அஞ்சு விரலை ஆட்டி கொண்டே இருப்பது என stylish க்கு ஆசை பட்டு கற்றுக்கொள்ள போனவர்களில், முக்கலுக்கும் மேல், மூன்றாவது வாரத்தோடு மியூசிக் கிளாசுக்கு முழக்கு போட்டவர்கள்.

* மாடர்ன் பெண்கள் தமிழை தமிழாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

* “நான் நீ நினைக்கும் மாமியாராக இருக்க மாட்டேன், நீ வேணா பார்" என திருமணத்துக்கு முன் மகனிடம் சொல்லும் அம்மக்கள் பெரும்பாலும் கடைபிடிக்க முடியாத statement

* தாய் வேறு தாரம் வேறு என்கிற புரிதல் இல்லாமல் எமோஷனல் ஒப்பீட்டளவில் அதிகம் குழப்பி கொள்பவர்கள் இந்திய கணவர்கள்

* ஆண்களின் தவறுகள் பொதுவானதாகவும், பெண்களின் தவறுகள் பெண் குரலையே நசுக்குவதற்கான சந்தர்ப்பமாகவே எடுத்து கொள்ளப்படுகிறது

* immaturity யை அங்கீரிக்க, ரசிக்க தெரியாதது maturity இல்லை.

* புரிந்து கொள்ளப்படாமலே, படிக்காமலேயே அதிகம் கொண்டாடப்படும் புத்தகம் கீதை.

* ஏன் எதற்கென்று தெரியாமலேயே, மிகப்பெரிய மேதையாக நம்மிடையே நம்ப வைக்கப்பட்டவர் விவேகானந்தர்

* இந்துத்வத்தை, பார்ப்பனியத்தை  பரிபூரணமாக ஏற்றுக்கொண்ட பார்ப்பனர் அல்லாதவர், எங்கேனும் ஒரு கட்டத்தில் பார்பனீயத்தால்  நவீனமாய் ஒடுக்கப்பட்டால், அதை வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத வலி, பைல்ஸை விட கொடியது 

#memories Sharing 3rd time😝

https://m.facebook.com/story.php?story_fbid=10214521783734077&id=1104997241

No comments:

Post a Comment