Monday, February 26, 2018

ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு நூல்கள்

ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு நூல்கள்.....

1.என் பெயர் சிவப்பு
ஓரான் பாமுக் (ஆசிரியர்),
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.475
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஒப்படைக்கிறார்.


2.பனி
ஓரான் பாமுக் (ஆசிரியர்),
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.450
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல். தனது படைப்புகளின் நிரந்தரக் களமான இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக்.


3.இஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள்
ஓரான் பாமுக் (ஆசிரியர்),
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.350
தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் செல்லிச் செல்கிறார்.


4.கனவுகளுடன் பகடையாடுபவர்
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.140
நோபல் பரிசு பெற்ற ஹோஸே ஸரமாகோ, ஓரன் பாமுக்,குந்தர் கிராஸ், நாகிப் மாஃபெளஸ் ஆகியோரின் தன்வரலாறு சார்ந்த நோபல் உரைகளும் சல்மான் ருஷ்டி மற்றும் ஓரான் பாமுக்கின் கட்டுரைகளும் இத்தொகுதிக்கு மிகுந்த வலுச்சேர்க்கின்றன.
தமிழ் படைப்பு மற்றும் வாசிப்பு சூழலை மாற்றியமைக்கும் புத்தகம் இது.


5.கடல்
ஜான் பான்வில் (ஆசிரியர்),
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.125
துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார்.

No comments:

Post a Comment