Saturday, February 17, 2018

பாபர் மசூதியும் காவேரி தண்ணீரும்

மு. செ. பாதுஷா
2018-02-18

பாபர் மசூதியும் காவேரி தண்ணீரும்

இந்திய யூனியன் என்பது பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் தேசிய இனங்களின் சிறைக்கூடங்கள் என்பதை இந்திய அதிகார வர்க்கமும், பார்பன நீதிமன்றங்களும் தொடர்ந்து நிறுவிகொண்டே வந்திருக்கின்றன.

நம் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிக்காக நீதி கேட்கும் நம்மையே குற்றவாளிகளாக்கும் இந்த சிறைக்கூடத்தை உடைக்காமல் நமது உரிமைகளை மீட்க முடியாது.

----- நிகழ்வு 1 ------

*கீழ்வெண்மணி மக்கள்*

"ஐயா, சம்பளத்தில் கால்அனா அதிகப்படியாக தருமாறு கேட்டதற்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் என 44 அப்பாவி மக்களை உயிரோடு தீவைத்து கொழுத்தி கொன்று விட்டார்கள், நீங்க தான் தக்க தண்டனை கொடுக்கனும்."

*நீதிமன்றம்*

"கார்கள் வைத்திருக்கும் இந்த கண்ணியமான நிலக்கிழார்கள் இக்காரியத்தை செய்திருப்பார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, அவர்களை விடுதலை செய்கிறேன்."

*கீழ்வெண்மணி மக்கள்*

"இதென்னங்க அநியாயமாக இருக்கு, கார் வெச்சுருக்கவன் கொலை செய்யமாட்டான் என்று எந்த கிறுக்கன் சொன்னான்"

*நீதிமன்றம்*

"டேய் எதுத்தா பேசுற, இந்த நக்ஸலைட்டுகளை தூக்கி ஜெயில்ல போடுங்க."

----- நிகழ்வு 2 ------

*முஸ்லீம்கள்*

"ஐயா, எங்களுக்கு சொந்தமான இடத்தில், 800 வருசமா நாங்க தொழுகை நடத்திட்டு வந்த மசூதியை இடிச்சுட்டங்க, நீங்கதான் ஒரு நியாயம் சொல்லனும்" -

*நீதிமன்றம்*

"அப்படியா? சரி பரவாயில்லை, நடந்தது நடந்திருச்சு. மூன்று பகுதியாக பிரித்து ஆளுக்கு கொஞ்சமா வைச்சுக்கோங்க"

*முஸ்லீம்கள்*

"ஐயா, என்னோட புனித தளத்தை இடிச்சுவனுக்கு, அது இருந்த இடத்தையே மூனா பிரிச்சு இரண்டு பங்கை கொடுக்க சொல்றீங்க, என்னங்கய்யா இது நியாயம்?"

*நீதிமன்றம்*

"ஏய், என்ன திமிரு இருந்தா என்னையே எதிர்த்து பேசுவ? போலீஸ் இந்த தேசவிரோதிகளை உள்ள தூக்கி போடுங்க."

----- நிகழ்வு 3 -----

*தமிழர்கள்*

"ஐயா, 1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தப்படி காவிரியில் தமிழகத்திற்கான பங்கு 575.68 டி.எம்.சி.யாக இருந்தது, அது படிப்படியாக குறைந்து தற்போது 192 டி.எம்.சி.யாக குறைச்சிடீங்க. இந்த 192 டி.எம்.சி.கூட ஒழுங்கா தர மாட்டுக்காங்க. நீங்கதான் ஒரு நியாயம் சொல்லனும்."

*நீதிமன்றம்*

"பெங்களூர் மக்கள் குடிக்க தண்ணி இல்லாம் கஷ்டப்படுகிறார்கள். மேலும், தமிழ்நாட்டு நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. அதனால, 177 டிஎம்சி தண்ணீரை வாங்கிகோங்க"

*தமிழர்கள்*

"ஐயா, இதென்னங்க முட்டாத்தனமா இருக்கு. தமிழ்நாட்டுல நிலத்தடி நீர் அதிகரித்ததுக்கும், இந்த வழக்குக்கும் என்னையா சம்பந்தம். விட்டா, கன்னியாகுமரில் முன்று கடல் இருக்கு அதனால உங்களுக்கு தண்ணீயே கிடையாது - னு சொல்லுவீர்கள் போலுள்ளது."

*நீதிமன்றம்*

"டேய் பிரிவினைவாதிகளா, எதிர்த்தா பேசுகிறீர்கள். இனி காவேரி தமிழ்நாட்டுக்கு சொந்தமல்ல, அது இந்தியாவுக்கு சொந்தம். இது விசயமாக யாரும் இனி பேசக்கூடாது, வழக்காட கூடாது."

----- நிகழ்வு 4 -----
காலகாலமாக நடக்கும் இந்த நிகழ்வை விவேக் ஒரு படத்தில் பகடி செய்திருப்பார்.

*வன்புணர்வுக்கு உள்ளான பெண்*

"ஐயா, என் மீது பலாத்காரமான முறையில் பாலியல் வன்முறையை நிகழ்த்திய இந்த காட்டுமிராண்டிக்கு நீங்கள் தான் தக்க தண்டனை தர வேண்டும்"

*நாட்டாமை*

"அய்ய, வெட்கமில்லாமல் இதெல்லாமா வெளிய சொல்லி பஞ்சாயத்த கூட்றது. சரி.. சரி.. டேய் தம்பி அந்த பெண் கழுத்தில் தாலி கட்டு. நீதிடா... நேர்மையா..."

*வன்புணர்வுக்கு உள்ளான பெண்*

"ஐயா, இதென்ன அயோக்கியத்தனமா இருக்கு, எனக்கு அவன் இழைத்த பாலியல் வன்முறைக்கு நீதி கேட்டால், அந்த பொறுக்கியையே கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க?"

*நாட்டாமை*

"அட சிரிக்கியுள்ள, ஏந்தீர்ப்பையா எதுத்து பேசுற. இந்த ஒழுக்கங்கெட்வள ஊரவிட்டு தள்ளி வைக்கிறேன், ஆரும் அவகூட அன்னந்தண்ணி புழங்க கூடாது. நீதிடா... நேர்மையா..."

https://m.facebook.com/story.php?story_fbid=1825519734126741&id=100000061950087

No comments:

Post a Comment