Monday, June 15, 2015

நிறுவனமயமாகும் அமைப்பு, அதன் பண்புகள்

ஒரு அமைப்பு நிறுவனமயமாகும் போது கீழ் கண்ட சில அதன் பண்புகளாகும்:
.
  1. அதிகாரம் பிரமீடு வடிவில் உச்சியில் குவிக்கப்படும்.
  2. மாற்றமற்ற ஒரு இறுகிய சித்தாந்தத்தை தன் கொள்கையாக கொள்ளும். விவாதத்திற்கு ஒரு எல்லையை நிர்ணயித்து அந்த எல்லைக்குள் விவாதத்தை அனுமதிக்கும்.
  3. வேறு மாதிரி இருப்பவர்களை, வேறு மாதிரி இருப்பதற்கான உரிமைகளை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது வேறு மாதிரி இருப்பவர்களை என்ன செய்வது என்ற ஒரு அடிப்படை விவாதம் கூட இல்லாமல், வன் முறை கொண்டு ஒடுக்க முற்படும்.
  4. வளர்ச்சி என்பது உளவியல் சம்பந்தம் உடைய ஒன்றாக கருதாது விமர்சனமற்று வளர்ச்சிக்கான ஒரே விளக்கமாக அறிவியலைக் கொள்ளும். அல்லது அறிவியல் அற்ற தன்மையை கொள்ளும். யாருடைய வளர்ச்சி என்ற கேள்வியே இருக்காது.
  5. அமைப்பு எதிரியின் கருத்து மேலாண்மையை நிறுவும் சிவில் சமூக உறுப்புகளை அடையாளம் கண்டு அதை மாற்றத் துணிவதும், அதே சிவில் சமூக உறுப்புகளை தனது கருத்து மேலாண்மையை நிறுவ எந்த விமர்சனமும் இன்றி பயன்படுத்த துணிவதும் நிறுவனமாதலின் ஒரு பகுதியே.
  6. தன்னைக் கலைத்துக் கொள்வது பற்றிய விவாததிற்க்கே இடமிருக்காது. தன்னைக் கலைத்துக் கொள்வதற்கான ஒரு வரலாற்று சூழல் வரும்போது அது தன்னை வரலாற்றில் இருந்து துண்டித்துக் கொண்டு தன் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளும்.
  7. உறுப்பினர்களின் சுயத்திற்க்கும் பொது வெளியில் அவர் காட்டும் பிம்பத்திற்கும் இடைய நிலவும் உறவும் முரணும் குறித்த அடிப்படைப் புரிதல் இருக்காது.
.
-துணைத் தளபதி மார்கோஸ்

No comments:

Post a Comment