Tuesday, June 16, 2015

அஷ்டகா விதானம்: மாயமந்திரமல்ல, மாடறுக்கும் வித்தை

"மார்பில் இருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுதெடுக்க வேண்டும்.  
பின் கால்களில் இருந்து இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்,  
முன் கால்களில் இருந்து கும்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும், 
தோளில் இருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுதெடுக்க வேண்டும்.  
இவ்வாறு அந்த அந்த அவயங்களில் இருந்து இருபத்தி ஆறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்து எடுக்க வேண்டும்!"
அஷ்டகா விதானம் தெரியுமா? ஏதோ மாயமந்திரமல்ல, மாடறுக்கும் வித்தை.
பசுவை எப்படி கொல்ல வேண்டும்? எந்த மந்திரத்தைச் சொல்லி அறுக்கவேண்டும் வேண்டும்?" - என இப்படி அஷ்டகா விதானம் மூலம் விலாவரியாக வகுப்பெடுக்கிறது கிருஹஜ்ய சூத்திரம்.

இந்த சூத்திரதாரிகள் யார் தெரியமா? சாட்சாத் பிராமணர்கள்! மாட்டு கறியை முதன்முதலில் சாப்பிட்டவர்கள், குறிப்பாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் - அவர்கள்தான்.
"அத்ரிகோ சமீத்வம் ஹுசமீ சமீத்வம்; சமீத்வமத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிப் ரூயாத்" - படிக்க வரலைனா விட்டுடுங்க smile உணர்ச்சிலை
"நன்றாக அடித்துக் கொல்! கொல்! கொல்! அடிப்பதை நிறுத்தாதே!"
- என்று கோ கொன்று தின்றதை தான் அவர்களின் மொழியில் சொல்கின்றனர்.
"மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கின்றன, மதச் சடங்குகளை முறையாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ணவில்லையெனில் - இறப்பிற்கு பின்னர், தனது இருபத்தி ஒன்றாவது மறுபிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்" 
- என்கிறது மனு!

"தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்'' 
- என பிரகடனப்படுத்துகிறது பிரகதாரண்ய உபநிடதம்.

"பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன"
- என்று குறிப்பிடுகிற ரிக்வேத்தின் நீர்த்துப்போன வடிவம் தான் இன்றைக்கும் ஒவ்வொரு திருமண விழாக்களின் பொழுதும் மாடறுத்து தின்னும் மந்திரம் சொல்லப்பட்டு கறிக்கு பதில் வாழைப்பழம் கொடுக்கும் வழக்கம்.

மாட்டிறைச்சி சாப்பிடுவது சாதிகளுடன் அடையாளம் காட்டப்பட்ட பிம்பத்தை அடித்து நொறுக்கியவர்கள் அம்பேத்கரும், பெரியாரும் தான்.

பாகுபாடுகளின்றி எல்லோருமே அசைவர்களாகவே, அதிலும் மாட்டிறைச்சி உண்ணுகின்றவர்களாகவே இருந்திருக்கிறோம்.

அதுவே இயற்கை! உலகில் சைவம் என்று எதுவுமில்லை; அப்படி ஒன்றிருந்தால் அது இயற்கை முரண்!

மாட்டுக்கறி தின்போம்! மானத்தோடு வாழ்வோம்!

Samaran Nagan.

No comments:

Post a Comment