Tuesday, June 16, 2015

காமம்தான் முதல் விதை அதிலிருந்துதான் காதல்

காதலர் தினத்தை முன்னிட்டு பல நல்ல பதிவுகளைப் பார்க்கிறேன்.
எனக்குப் பிடித்த காதல் வரும் காட்சியொன்றை எழுத நினைக்கிறேன்.
தெலுகுப் படமான “ஹேப்பி டேஸ்” படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது.

அதில் காலேஜ் ஜூனியர் ஒருவன் சீனியர் பெண்ணை துரத்தி துரத்தி நாகரீர்கமாக காதல் செய்வான்.அந்தப் பெண் மிக அதிகமான காதல் உணர்வை கொண்டிருப்பான்.

அந்தப் பெண் மீது அவன் எப்படி ஈர்ப்பு கொள்கிறான் என்பதுதான் நான் சொல்லவரும் காட்சி. முதல் நால் காலேஜில் ரேகிங் நடக்கும். ஜூனியர் பையனை சீனியர்கள் கூப்பிடுவார்கள்.அந்த சீனியர் பெண் கூட்டத்தோடு அமர்ந்திருப்பாள்.

சீனியர்கள் சொல்ல ஜூனியர் பையன் துள்ளுவான். அப்படி துள்ளும் போது சீனியர் பெண் குனிந்து எதையோ எடுப்பாள்.ஒரு விநாடி நேரம்தான் (படம் தொடங்கி முதல் பதினைந்து நிமிடத்தில் இந்தக் காட்சி வரும்).

அந்த ஒரு விநாடி நேரத்தில் சீனியர் பெண்ணின் அழகு ஜூனியர் பையனுக்கு காட்சியாய் கிடைக்கும். அந்த மெலிதான காமத்திலிருந்து ஜூனியர் பையனுக்கு காதல் கிடைக்கும்.கடைசிவரை அந்தப் பெண்ணை மனதாரக் காதலிப்பான்.

கவனியுங்கள், அந்தப் பெண் இந்தப் பையனை ஈர்த்தது தன் உடல் அழகால்தான் (அவளையறியாமல், அதற்கு அவள் பொறுப்பில்லை).
உடல்தான் முதலில் வருகிறது. அதிலிருந்துதான் காதல் வருகிறது.
பருப்புப்பொருளைப் பார்த்துவரும் காமம்தான் முதல் விதை அதிலிருந்துதான் காதல்.

பொருள்முதல்வாதத்திலிருந்து கருத்துமுதல்வாதம்தான் எப்போதும் இளமை உலக காதல் டிரெண்ட். முதன் முதலில் நீங்கள் யாரையாவது காதலித்திருப்பீர்கள். அது எங்கிருந்து தொடங்குகிறது.உடல் அழகிலிருந்துதானே. என்றாவது வெள்ளிக்கிழமை பளிச்சென்று உடுத்தி வந்திருப்பாள். அன்றுதான் அதிக காதல் கொண்டிருப்போம்.

நான் ஆணாக இருப்பதால் இந்தக் காட்சியை புரிந்த்து கொள்ள முடிகிறது.
பெண்களின் காதல் எப்படிப்பட்டது என்று எனக்கு தெரியாது. அவர்களுடையது முழுக்க முழுக்க மனம் சார்ந்த பண்டமாயிருக்கும் என்றுதான் கேள்விப்படுகிறேன்.

ஒருவேளை உண்மையிலேயே அப்படி ஒரு காதல் இருந்தால் அதை நினைக்கவே பயமாயிருக்கிறது. எவ்வளவு வறட்சியானது அது smile emoticon

Vijay Bhaskarvijay

No comments:

Post a Comment