Monday, June 15, 2015

பா.நடேசன், கனிமொழி - மின்னஞ்சல்

தங்கராஜ் புகழேந்தி நல்ல உணர்வாளர். ஆனால் யதார்த்தம் தெரியாதவர். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு புலத்தில் இருக்கிறவர்களிடம் தனது உணர்ச்சி அரசியலைக் கொஞ்சக் காலம் விதைத்துக் கொண்டிருக்கிறார். கனிமொழியோடு தொடர்பில் இருந்தவர் அரசியல் பொறுப்பாளர். பா.நடேசன். அவர்தான் மின்னஞ்சல் மூலம் அவரோடு தொடர்ப்பில் இருந்தார்.
.
மார்ச் 30 இல் நடேசன் பின்வரும் செய்தியை கனிமொழிக்கு அனுப்பினார்:.
“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். .நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். .ஆனால் சிங்கள அரசு யுத் தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர். .இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்..
நன்றி,என்றும் உங்கள் அன்பான,சகோதரன் பா.நடேசன்“
இதற்கு பின்வரும் பதிலை கனிமொழி ஏப்ரில் 07 அன்று அனுப்பியிருந்தார்:
“நடேசன் அண்ணன்,நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. .தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். .கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். .தயவு செய்து தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்.”கனிமொழி”
இந்தக் கடிதம் மிகவும் யதார்த்தமானது. கனிமொழி அமைச்சர் கிடையாது. வெறுமனே ஒரு இராஜ்யசபை உறுப்பினர்தான். 
.
இருந்தும் அவர் புலிகளுக்கு “ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது” எனச் சொல்கிறார். 
.
ஆயுதங்களை கீழே போடுங்கள், போட்டால் மத்திய அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வரும் என்று சொல்லவில்லை. “ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள்” என்றுதான் எச்சரிக்கையோடு எழுதினார். 
.
“அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது” என்கிறார். “தோன்றுகிறது” என்ற சொல்லைத்தான் கவனமாகப் பயன்படுத்துகிறார்.
.
-
Veluppillai Thangavelu
https://www.facebook.com/V.T.NakKeeran/posts/10155805921600454

No comments:

Post a Comment