Surya Born To Win:
"ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க கருணாநிதி தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை" - பழ. நெடுமாறன், கட்டுரை - தினமணி – 27.06.2012.
"தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." - சுப்பிரமணியன் சுவாமி, 'விகடன் மேடை' - 04.07.2012
மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறானவையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.
இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.
ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர், மோதிக்கொள்ள மாட்டார்கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டிருக்கும் குள்ளநரித்தந்திரம்.
அ.தி.மு.க.வின் துரோகத்தைக் கண்டித்தும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. எடுக்கும் எல்லா நடவடிக்கையும் முழுமையாக ஆதரித்தும் அன்று அறிக்கை விட்ட அதே நெடுமாறன் அவர்கள்தான், "எம்.ஜி.ஆர். அப்போது நல்லது செய்தார் என்றும், கலைஞர் துரோகம் செய்தார்" என்றும் முற்றிலும் நேர் மாறாக இன்று பேசுகிறார். துரோகம் செய்த ஒரு கட்சிக்கா நெடுமாறன் தன் முழு ஆதரவையும் வழங்குவார்?
"அ.தி.மு.க. அரசு துரோகம் இழைக்கிறது" என்னும் தலைப்பின் கீழ் உள்ள இணைத்துள்ள பேட்டியின் கடைசிக் கேள்வி-பதிலை நன்றாகக் கவனிக்க வேண்டும். இதோ அந்தக் கேள்வி-பதில்:
கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளதே?
நெடுமாறன் : அதை வரவேற்கிறேன். அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். மற்ற கட்சிகளும் இது போன்று போராட வேண்டும். எங்கள் கட்சியும் இதுபற்றி விரைவில் கூடி முடிவெடுக்கும்.
அது மட்டுமின்றி, எல்லாக் கட்சிகளும், இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார். எல்லாவற்றையும் தாண்டி "தன் கட்சியே இனிமேல்தான் முடிவெடுக்க உள்ளது" என்கிறார். எனவே, நெடுமாறன் அவர்கள் கட்சிக்கே, ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது அவரே தரும் செய்தி.
இன்று தி.மு.க.வையும், கலைஞரையும் கடுமையாகத் தாக்கும் நெடுமாறன், அன்று எம்.ஜி.ஆர். அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதாகவும், தி.மு.க. தன் பணியைச் சரியாகச் செய்வதாகவும் கூறியிருப்பது மிகப் பெரும் முரண்பாடு இல்லையா? ஏன் இந்த முரண்பாடு? விடை மிக எளியது. அன்று அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தார். 1984 இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆரை விட்டுப் பிரிந்து வந்து தி.மு.க.வுடன் அவர் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டது.
அப் பொதுத் தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் (பழனி), மதுரை மத்தி, மானாமதுரை, லால்குடி, நத்தம், திருவையாறு உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அப்போதே ஈழம் பற்றிப் பேச, அவருக்கு நாடாளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பிருந்தது. அங்கு சென்று தன் தரப்பு வாதத்தை அழகாக அழுத்தம் திருத்தமாக மத்திய அரசாங்கத்திற்கு எடுத்து வைத்திருந்திருக்க முடியும். ஆனால் அதை தட்டி கழித்துவிட்டு பழனி பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடாமல், எஸ்.ஆர்.வேலுச்சாமி என்பவரை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்திவிட்டுத் தான் மதுரைச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
எனவே நெடுமாறன் அவர்களின், ஈழம் பற்றிய கருத்துகள், அவர் அவ்வப்போது சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொறுத்ததாகவே இருந்து வருகின்றன என்பது தெளிவாகின்றது. இதில் கலைஞரை குறை கூறுகிறார்
PS:.தெளிவான செய்தித்தாள் ஸ்க்ரீன் ஷாட், முதல் இரண்டு கமெண்டுகளில்
https://www.facebook.com/photo.php?fbid=10205656452503827&set=a.1571712965964.2074714.1029710751&type=1

No comments:
Post a Comment