Tuesday, June 16, 2015

அலாவூதின் கில்ஜியிடம் உதவி - இதில் சொல்லுங்க எவன் வந்தேறி

கிபி 1296 குலசேகரப் பாண்டியன் எனும் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான், அவனுக்கு இரண்டு மகன்கள், ஒருவர் பட்டத்தரசியின் மகன் சுந்தர பாண்டியன், அடுத்தவர் குலசேகரனின் காதற்கிழத்தியின் மகன் வீர பாண்டியன். இவர்களில் வீரபாண்டியனே திறமையானவர் என்று வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான் குலசேகரன். இதை பிடிக்காத சுந்தர பாண்டியன் காத்திருந்து 1310ம் ஆண்டு தன் தந்தையை கொலை செய்துவிட்டு ஆட்சியை கைப்பற்றினான்.

ஆட்சி நிலைக்கவில்லை வீரபாண்டியனின் படையிடம் தோற்றோடி டில்லையை ஆண்ட அலாவூதின் கில்ஜியிடம் உதவி கேட்டான் அவர்கள் வந்து இரண்டு பாண்டியர்களின் புடனியில் அடித்து அனைத்து சொத்துக்களையும் புடுங்கிக் கொண்டு சென்றனர். கோயில்களில் இருந்த அனைத்து சொத்துகளும் கொள்ளை அடிக்கபப்ட்டது, கோயில்கள் இழுத்து மூடப்பட்டது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைக்க இயலாத நிலையில் இருந்த பொழுது திரும்பவும் இஸ்லாமிய மன்னர்கள் கொட்டத்தை அடக்க விஜயநகரப் பேரரசை நாடி அழைத்து வந்தனர். இதற்கு பிறகே தமிழ் நாடெங்கும் தமிழராட்சி அழிந்தது.

இதில் சொல்லுங்க எவன் வந்தேறி. இவனுங்களே போய் வெத்தலை பாக்கு வச்சு அழைப்பானுங்களாம் அப்புறம் வந்தேறி வந்தேறி என்று கூச்சல் போடுவாய்ங்களாம். தனது கையாலக்கத்தனம், தனக்குள் சண்டைப் போட்டுக்கொள்ளும் தற்குறித்தனம் தமிழனக்கு சங்க காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதில் அவன் என்னை அடிக்கிறான் என்று ஒப்பாரி வேறு.

https://www.facebook.com/al.hariharan/posts/921675751184262

No comments:

Post a Comment