Vijay baskervijay
Via Facebook
2017-07-18
*1 x 2 x 3 அப்படிங்கிறத 3! என்று சொல்லலாம்*
! இந்த Symbol தான் Factorial குறிக்கிறது.
அதாவது Three Factorial ன்னு சொல்வோம்.
அப்படின்னா 5! ன்னா என்ன வரும்
1 x 2 x 3 x 4 x 5 = 120
5! = 120
அப்படிப்பாக்கும் போது
1 x 2 x 3 x 4 x 5 x ........... x n = n!
இப்ப 10 ங்கிற நம்பருக்கு, 9 ங்கிற நம்பர் என்னது (10-1)
அதாவது கடைசி நம்பர்ல இருந்து ஒண்ணக் கழிச்சா வர்றது.
அப்ப n ங்கிற நம்பருக்கு முந்தின நம்பர் என்னது (n-1). சரியா.
அப்போ 1 x 2 x 3 x 4 x 5 x ........... x n அப்படிங்கிறத
1 x 2 x 3 x 4 x 5 x ........... x (n-1) x n = n!
1 x 2 x 3 x 4 x 5 x ........... x (n-1) = (n-1)!
அப்படின்னா n! = n x (n-1)!
இதுதான் Factorial யோட ஃபார்முலா.
3! = 3 x (3-1)!
3! = 3 x 2!
3! = 3x 2 x 1 = 6
*இப்படி வரும் போது 1! எடுத்துகிட்டீங்கன்னா அது*
1! = 1 x (1-1)!
1! = 1 x 0!
1! = 0!
நல்லா கவனிங்க சீரோ வேற சீரோ ஃபாக்டோரியல் வேற.
0 வந்து 0! கிடையாது.
1! = 0! = 1
அதெப்படி 1! ம் 0! ம் ஒண்ணாகும் அப்படின்னு கேட்டா, இப்போதைக்கு அது அப்படித்தான். எண் வரிசை அப்பத்தான் ஒழுங்கா இருக்குமுன்னு புரிஞ்சி வெச்சிக்கோங்க.
*ரொம்ப மனசு கேக்கலன்னா அதுக்கும் ஒரு விளக்கம் சொல்றேன்*
கணக்குல Permutation அப்படின்னு ஒரு சப்ஜெக்ட் உண்டு.
இப்ப 1,2,3 இந்த மூணு நம்பரையும் எப்படி மாத்தி மாத்தி வைக்கலாம்னு Permutation சொல்லும், எப்படி வைக்கலாம்
123
231
312
132
213
321
ஆக 6 தடவ மாத்தி மாத்தி அடுக்கலாம். அப்படித்தான.
பாருங்க மூணு நம்பர ஆற தடவை மாத்தி மாத்தி அடுக்கலாம்.
3 numbers = 6 types அடுக்கலாம்.
இந்த மூணுக்கும் ஆறுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா பாருங்க.
இருக்கு
6 ங்கிறது 3! . அதாவது 1 x 2 x 3 = 6
அப்ப நாலு நம்பர எத்தனை முறை மாத்தி மாத்தி அடுக்கலாம். 4! அப்படித்தான, அதாவது
1x2x3x4 = 24
2 நம்பர எத்தனை முறை மாத்தி மாத்தி அடுக்கலாம்
2! = 2 தடவை
1 நம்பர எத்தனை முறை மாத்தி மாத்தி அடுக்கலாம்
1! = 1
0 நம்பர எத்தனை முறை மாத்தி மாத்தி அடுக்கலாம். கவனிங்க இங்க 0 அப்படிங்கிறது ஒன்றுமில்லன்னு வந்தாலும், அது நம்பரா அங்க இருக்கு. அந்த 0 வ அடுக்க முடியும். ஒண்ணுமில்லன்னு ஒண்ணு அங்க இருக்கு. அத ஒருதடவை அடுக்கலாம்.
அப்படின்னா 0! = 1
So 0! = 1 = 1! அப்படிங்கிறது கட்டுக்கதையெல்லாம் கிடையாது.
அதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு.
*இந்த Factorial ல நிறைய அழகு இருக்கு*
6 வாரத்துல வர்ற விநாடிகளுக்கும் 10 ! க்கும் சம்பந்தம் இருக்கு.
10! என்னது = 1 x 2 x 3 x 4 x 5 x 6 x 7 x 8 x 9 x 10 = 3628800
ஆறு வாரத்துல வர்ற விநாடிகள் = 60 (நிமிசம்) × 60(மணி) × 24 (நாள்) × 7 (வாரம்) × 6 (வாரங்கள்)
= 60 x 60 x 24 x 7 x 6
= 3628800
அட பாருங்கப்பா மேஜிக்க.. ஆறு வாரத்துல வர்ற விநாடிகளும் 10! க்கும் ஒரே மதிப்பு இருக்கு.
இப்போ இன்னொன்னு செய்வோம்.
10! = 1 x 2 x 3 x 4 x 5 x 6 x 7 x 8 x 9 x 10 இந்த வடிவத்த
6 weeks in seconds = 60 x 60 x 24 x 7 x 6 இதுல இருந்து கொண்டு வருவோம்.
60 x 60 x 24 x 7 x 6 = (2 × 3 × 10) × (3 × 4 × 5) × (8 × 3) × 7 × 6
ஒண்ணுமில்ல,
முதல் 60 த (2 × 3 × 10)
இரண்டாவது 60 த (3 × 4 × 5)
மூணாவது 24 அ (8 × 3)
அப்படின்னு எழுதியிருக்கிறேன்.
60 x 60 x 24 x 7 x 6 = (2 × 3 × 10) × (3 × 4 × 5) × (8 × 3) × 7 × 6
இப்ப இத மாத்தி அடுக்குவோம்.
60 x 60 x 24 x 7 x 6 = 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 3 × 3 × 10
சரியா 2 ல இருந்து போ வரிசையா அடுக்கியிருக்கிறேன்.
அங்க ஒரே ஒரு இடத்துல 3x3 இருக்கு பாருங்க அத 9 ஆ போட்டுரலாமா. போட்டுருவோம்.
அடுத்து எந்த நம்பர் 1 ஆல பெருக்கினாலும் அதே நம்பர்தான். தொடக்குத்துல 1 ம் போட்டிருலாம்.
60 x 60 x 24 x 7 x 6 = 1 x 2 x 3 x 4 x 5 x 6 x 7 x 8 x 9 x 10
10! Factorial வடிவத்துலேயே கொண்டு வந்துட்டோமா.
*முடிவுரை*
1. Factorial என்னதுன்னு சொல்லிருக்கேன்.
2. Factorial General Formula சொல்லிருக்கேன்
3. 0! வந்து 0 கிடையாது. அது 1! = 1 சொல்லியிருக்கேன்.
4. 0! = 1! =1 Permutation வெச்சி சொல்லி இருக்கேன்.
5. 6 வார விநாடிகள் = 10! அப்படின்னு அழகியல் சொல்லியிருக்கேன்.
கொஞ்சம் Effort எடுத்து ஆர்வமா பாத்தீங்கன்னா கணிதம் ஒரு இசை மாதிரிதான்.
அனுபவிக்கலாம். :) :)
No comments:
Post a Comment