Poovannan Ganapathy
Via Facebook
2016-02-12
மாதொரு பாகனும் மகாபாரதமும்
எழுத்தாளர் பெருமாள் முருகன் மீதான வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு ஹிந்துத்வர்கள் ஊடகங்களில் வெறி பிடித்து அலையும் செயல்கள் சிரிப்பை வரவழைத்தாலும் அவர்களின் பொய்களையும்,ஹிந்து மதத்தில் பெண்களுக்கு இருந்த ?உயர்வு என்று பெண்களை முன்வைத்து நடத்தும் பொய்யான வாதங்களுக்கு பதில் அளிக்க வேண்டியது நம் கடமை.
மஹாபாரதம் பேசாத எதையும் மாதொருபாகன் பேசவில்லை. பெண்களை,இழிவாக, கிள்ளுக்கீரையாக நடத்தும் வழக்கங்கள்,மத நம்பிக்கைகள் போன்றவற்றின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் மகாபாரதம்.மாதொருபாகன் மட்டுமல்ல உலகின் எந்த கதையும் மஹாபாரதம் அருகில் கூட இதில் வர முடியாது.
மகாபாரதத்தின் அடிப்படை கதையில் பெண்ணோடு கலந்து விட்டு அவளை மறுபடியும் கன்னியாக மாற்றும் சக்தி குறிப்பிட்ட கடவுள்களுக்கும் ,வர்ணத்திற்கும் மட்டுமே உண்டு.அப்படி சத்தியவதி என்ற கதாபாத்திரத்துக்கு பிறந்தவர் தான் வியாசர். இங்கு இந்த நிலைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் அனைவருமே கீழ் வர்ணம் தான்.ஆண்கள் குறிப்பிட்ட தலையில் இருந்து பிறக்கும் வர்ணம்.தலையில் இருந்து பிறக்கும் வர்ணத்தை சார்ந்த எந்த பெண்ணுக்கும் இந்த வரத்தை எந்த ரிஷியும் வழங்குவது கிடையாது.அவர்களுக்கு குழந்தை வரம் இல்லை என்றாலும் அவர்கள் நியோக முறையோ/அல்லது குந்தி தேவி போல குழந்தை பெற்று கொள்ளவோ இயலாது.
அன்றைய முதன்மை கடவுளான இந்திரன்(சிவன் விஷ்ணு பிரம்மா என்ற மும்மூர்த்திகள் அவ்வளவாக ஹிந்து மிசனரிகளால் முக்கியமான கடவுள்களாக உருவாக்கப்படாத காலம் )ரிஷி போல வேடம் போட்டு ரிஷிபத்தினியை ஏமாற்றியதற்காக அவனும்,ரிஷி பத்தினையும் கடும் தண்டனை பெற்ற கதை உங்கள் நினைவுக்கு வந்தால் நீங்களும் ஆங்கிலேயே அன்றிவருடி,கிருத்துவ மிஷனரி,பிரியாணிக்கு மதம் மாறிய ,உலகிலேயே மோசமான பெரியார் அபிமானி தான்.
அரச குடும்பத்தில் மன்னனின் இறப்பால் வாரிசு இல்லா நிலை உருவாகிறது.பீஷ்மர் தான் செய்து கொடுத்த சத்தியத்தில் உறுதியாக நின்றார். அதனால் வியாசர் வரவழைக்கப்பட்டு நியோக முறையில் ராணிகளுக்கு குழந்தை பாக்கியம் தருகிறார்.க்ஷத்ரிய பெண்களுக்கு நியோக முறையில் குழந்தை பாக்கியம் தர சனாதன தர்மம் அனுமதிக்கிறது.
அவலட்சண வேடம் கொண்ட வியாசரை பார்த்த ராணி கண்ணை மூடி கொண்டதால் அவருக்கு பிறந்த குழந்தை பார்வையற்ற திருதராட்டினனாக பிறக்கிறது.அடுத்த ராணி பயத்தில் அல்லது அருவெறுப்பில் முகம் வெளுத்ததால் வெளுப்பாக பாண்டு.குழந்தை பார்வையற்றதாக பிறந்ததால் இரண்டாம் வாய்ப்பு,ஆனால் பயமும் அருவருப்பும் போகாத ராணி தனக்கு பதிலாக தான் சூத்திர பணிப்பெண்ணை அனுப்புகிறாள்
சூத்திர பெண்களுக்கு/ஆண்களுக்கு திருமணம் என்பது அண்ணல் அம்பேத்கரின் போராட்டத்தின் விளைவால் கிடைத்த விடுதலைக்கு பின்னான ஹிந்து திருமண சட்டம் வரும் வரை கிடையாது. அவர்கள் அப்படி செய்து கொண்ட எதுவும் செல்லாது என்று தான் 1950 வரை நீதிமன்ற தீர்ப்புகள் வந்து கொண்டிருந்தன.ராணி சொன்னால் யாருடனும் போக வேண்டியது தான் சூத்திர பெண்ணின் நிலை(அதவாது நாட்டின் பெரும்பான்மை மக்களின் நிலை).அப்படி சென்ற சூத்திர பணிப்பெண் முறையாக வியாசரை?கவனித்து கொண்டதால் அனைத்திலும் சிறந்த மகன் பிறக்கிறான்.அவன் தான் விதுரன்.
தெரியாமல் இந்திரனை சேர்ந்த ரிஷிபத்தினிக்கும் கடும் தண்டனை.மாறுவேடமிட்ட முதன்மை கடவுள் இந்திரனுக்கும் கடும் தண்டனை.ஆனால் இங்கு அனைத்தும் அறிந்த வியாசருக்கு எந்த தண்டனையும் கிடையாது.காரணம் -பாதிக்கப்பட்ட பெண் சூத்திர பெண்மணி.
பார்வையற்றவராக இருந்ததால் முதன்முறை மகுடம் மறுக்கப்பட்டாலும் இரண்டாம் முறை திருதராட்டினனுக்கு கிடைக்கிறது.ஆனால் அனைத்திலும் சிறந்த விதுரனுக்கு வாய்ப்பே கிடையாதது. காரணம்- அவன் தாய் சூத்திர பெண்மணி
சூதில் தோற்ற தர்மன் சூத்திரனாகி விடுகிறான்.அவன் சூத்திரன் ஆனதால் அவன் மனைவியும் சூத்திர பெண்மணி ஆகி விடுகிறாள்.அதனால் தான் அனைத்தும் கற்ற/அறிந்த அவையோர் அனைவரும் திரௌபதியை துகில் உரியும் போது அமைதியாக இருக்கின்றனர்.சூதில் எப்போது திரௌபதியை பணயமாக வைத்தான் என்ற கேள்விக்கு அர்த்தம் கிடையாது என்பது சனாதன தர்மத்தில் ஊறியவர்களுக்கு தெரியாதா என்ன .சூத்திர பெண்மணியின் மகன் விதுரன் மட்டும் தவிக்கிறான்,மன்றாடுகிறான்
திரௌபதி துகில் அறியப்படும் படலம் என்பதே தவறான சொல் தான். அன்றைய காலகட்டத்தில் சூத்திர பெண்மணிகள் எப்படி உடை அணிய வேண்டும் என்ற விதி /நடைமுறை அற்புத சனாதன மதத்தில் இருந்தது. சூத்திர பெண்ணாக ஆகி விட்ட நீ சூத்திர பெண்களை போல உடையில் இரு தான் பாஞ்சாலியிடம் சொல்லப்படுகிறது.அன்று பெரும்பான்மை பெண்களின் உடை அது தான். கடவுளான கண்ணன் எந்த சூத்திர பெண்மணியையும் காப்பாற்றவில்லை.நீ போ என்று மாற்றாக அனுப்பப்பட்ட விதுரரின் தாயை காப்பாற்றவில்லை.அவர் காப்பாற்ற அவதரித்த மக்கள் அவர்கள் அல்லவே
இந்த கதையை கண்ணில் நீர்மல்க கேட்டு கொண்டு பக்தி பரவசத்தில் ஆனந்த தாண்டவமாடும் கூட்டம். பெண்களை மிக இழிவாக நடத்துவதை பல நூறு ஆண்டுகளாக பெருமையாக பேசி,எழுதி,கூத்து கட்டி நடத்தும் கூட்டம் மாதொருபாகனை பார்த்து பொங்கி எழுவது -----
No comments:
Post a Comment