Tuesday, July 25, 2017

திவ்யபாரதி கைது - எந்த நேரத்தில் எதை எதிர்க்கிறதுங்கிற தெளிவு

Shahjahan R
Via Facebook
2017-07-25


— திவ்யபாரதி கைது செய்வதை வன்மையா கண்டிக்கணும்.
— எதுக்கு கண்டிக்கணும்... எத்தனை ஆண்டுகள் பழைய வழக்கு?

— 9 ஆண்டுகள் பழைய வழக்கு.
— அப்போ திமுக ஆட்சிதானே?

— ஆமா.
— அப்போ திமுகவையும் கண்டிக்கணும்.

— இப்போ ஆட்சியிலிருக்கிறது திமுகவா?
— இல்லை.

— அப்புறம் எதுக்கு திமுகவை கண்டிக்கணும் ப்ரோ?
— அவங்கதானே வழக்குப்போட்டது?

— ஆனா வழக்குப் போட்ட பிறகு மூணு வருசம் திமுக ஆட்சியில்தானே இருந்துச்சு. அப்போ கைது செய்யலை இல்லையா?
— இருந்தாலும், அந்த வழக்குதானே கைதுக்கு அடிப்படை ப்ரோ?

— அப்படியா... அப்போ இந்த அதிமுக ஆட்சிக்கு வந்து ஆறு வருசமாச்சே.. இத்தனை நாள் ஏன் கைது செய்யலே...?
— ...... ஆங்.... அது... ங்....

— இப்போ கைது செய்யறதுக்கு வேற காரணம்னு உண்மையை ஒத்துக்குங்க.
— அது என்ன காரணம்?

— அவங்க ஏற்கெனவே எடுத்த படம் கக்கூஸ். இப்போ எடுத்திட்டிருக்கிற படம் மாட்டிறைச்சி விஷயம். புரியுதா...?
— இருந்தாலும் திமுக வழக்குப் போடாம இருந்திருந்தா கைது செஞ்சிருக்க மாட்டாங்கில்லையா?

— கதிராமங்கலம் பிரச்சினைக்காக வெறுமனே நோட்டீஸ் குடுத்ததுக்காக வளர்மதியை குண்டர் சட்டத்துல கைது செஞ்சு வச்சிருக்காங்களே... வளர்மதி மேலே திமுக வழக்குப் போட்டிருந்ததா?
— .......................

— அந்த கைதை கண்டிச்சு போஸ்ட் போட்டதுக்காக ஒரு பிஎச்டி மாணவரையும் கைது செஞ்சாங்களே... அவர் மேலே திமுக வழக்குப் போட்டிருந்ததா?
— .......................

— இப்ப புரியுதா? கைது செய்யணும்னு முடிவு செஞ்சா அதுக்கு 9 ஆண்டுப் பழைய வழக்குதான் வேணும்னு இல்லை.
இப்போ புதுசா ஒரு வழக்கு போட்டா இப்ப இருக்கிற ஆட்சியின் மீது விமர்சனம் வரும். அதுக்காகத்தான் திமுக போட்ட வழக்கைக் கையில் எடுத்திருக்காங்க. உன்னைப்போல ஆளுக திமுகவைத் திட்டத் துவங்குவீங்கன்னு திட்டம் போட்டு செஞ்சது. புரியுதா?

எந்த நேரத்தில் எதை விமர்சனம் செய்யறது, எதை எதிர்க்கிறதுங்கிற தெளிவு இருக்கணும். அதிலும் பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிறவங்களுக்கு கூடுதல் தெளிவு வேணும். 
இல்லேன்னா, இப்போது நடப்பது போன்ற அராஜகக் கைதுகள்தான் இனியும் தொடரும்.

No comments:

Post a Comment