எதிர் வெளியீடு
கடைசி முகலாயன்
ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி 1857
வில்லியம் டேல்ரிம்பிள்
ஆகஸ்ட் மாத வெளியீடு
அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே! கேளுங்கள்: இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது. இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்துவிட்டு இங்கே அடைக்கலம் தேடி வந்திருக்கும் இந்த இறை நம்பிக்கையற்றவர்கள் [சிப்பாய்கள்] சீக்கிரத்திலேயே தொலைந்துபோவார்கள். தங்களுக்குரிய தலைவர்களுக்கே உண்மையாக நடந்துகொள்ளாத இவர்களிடமிருந்து நான் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? அவர்கள் என்னுடைய வீட்டை சூறையாடவே வந்திருக்கிறார்கள், அதை நாசப்படுத்தியவுடன் அவர்கள் ஓடிவிடுவார்கள். பின்னர் ஆங்கிலேயர்கள் என்னுடைய தலையையும், என்னுடைய பிள்ளைகளின் தலைகளையும் வெட்டியெடுத்து கோட்டையின் உச்சியில் பார்வைக்கு வைப்பார்கள். அவர்கள் உங்களையும்கூட விட்டுவைக்க மாட்டார்கள், உங்களில் யார் காப்பாற்றப்பட்டாலும் நான் இப்போது சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் வாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கிடைத்தாலும்கூட அது பிடுங்கி எறியப்படும். ஹிந்துஸ்தானத்தின் மேன்மக்கள் நாட்டுப்புறத்தவர்களைப் போல் கீழ்த்தரமாகவே நடத்தப்படுவார்கள்.’
No comments:
Post a Comment