Wednesday, July 26, 2017

வந்தேமாதரம் பாடல்

Karunnaandithi
Via Facebook
2017-07-26

தமிழக பள்ளிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும், வந்தேமாதரம் பாடலை பாடுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்துள்ளார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேசியப் பாடல் என்று எதுவும் இல்லை; ஜனகன மண என்ற தேசிய கீதம் மட்டுமே உள்ளது. இதனை அரசியல் சட்டப்பிரிவு 51-அ உறுதிப்படுத்துகிறது. பிப்ரவரி 2017-ல் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழக அரசு இதில் மேல்முறையீடு எதையும் செய்யாமல், ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்டு அமலில் உள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும், ஜனகன மண பாடலையும் பள்ளிகளில் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தலை உடன் செய்திட வேண்டும். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்திட வேண்டும்.

இதே போன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும், முதலில் “நீராறும் கடல் உடுத்த” பாடலையும், திரைப்படத்தின் இறுதியில் “ஜனகன மண” பாடலையும் ஒளிபரப்பிட ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இதன் மூலம், வந்தேமாதரம் பாடல் வழியே உள்ளே நுழைய நினைக்கும் சங் பரிவாரங்களுக்கு தடுப்பை ஏற்படுத்த முடியும்.

No comments:

Post a Comment